ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி சொத்து மோசடி!

0
125
#image_title

ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி சொத்து மோசடி!

ஆவடியில் மூதாட்டியை ஏமாற்றி 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 75 லட்சம் பணம் இல்லாத வங்கி கணக்கு காசோலை கொடுத்து மோசடி பத்திர பதிவு செய்து ஏமாற்றிய கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு சட்டவிரோத பத்திர பதிவில் ஈடுபட்ட ஆவடி சார் பதிவாளர்.

பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் வீட்டில் படுக்கையில் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ள மூதாட்டியை ஆம்புலன்ஸ் வாகனத்தில் 1மணி நேரமாக அலுவலக வாயிலில் காக்க வைத்து அலைகழித்த மாவட்ட பத்திரபதிவாளர் கல்பனா.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சின்ன அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மங்கையர்க்கரசி வயது-76. க/பெ ராமு ,வாரிசு ஒரே மகள் கிரிஜா வயது-46 க்கு சொந்தமான சர்வே எண் 394/2A Ts no 13/9 ல் 15,680 சதுரடி நிலம் பருத்திப்பட்டு பகுதியில் உள்ளது. இதன் மதிப்பு 5 கோடியாகும்.

இந்த நிலத்தை முகப்பேரை சேர்ந்த ஷமிலதா க/பெ ஜமாலுதீன் என்பவர் கடந்த 2021 ல் கிரையப்பத்திரம் செய்வதற்காக ஒப்பந்தம் செய்து 2 வங்கி காசோலை மூலம் ரூ.75 லட்சம் முன்பணமாக 13 லட்சம்,62 லட்சம் காசோலை கொடுத்து மங்கையர்கரசியிடம் கொடுத்தார்.

அந்தக் காசோலைகள் வங்கியில் பவுன்ஸ் ஆன நிலையில் ஆவடி பத்திரபதிவு அலுவலகத்தில் வைத்து பதிவு செய்துள்ளனர். இது குறித்து ஆவடி குற்ற பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கடந்த 1 வருடமாக நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் நாடி சொத்தை மீட்க ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

மங்கையர்கரசிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ள நிலையில். திருவள்ளூர் அருகே வேடங்கி நல்லூரில் உள்ள மாவட்ட பத்திர பதிவு அதிகாரி கல்பனா மங்கையர்கரசியை அம்புலன்ஸ் வாகனத்தில் வரவழைத்துள்ளார். அங்கு மாவட்ட பத்திர பதிவு அலுவலகம் முதல் தளத்தில் உள்ளதால் மேலே செல்ல முடியாத மங்கையர்க்கரசி சுமார் 1 மணி நேரம் ஆம்புலன்ஸில் காக்க வைக்கப்பட்டார்.

வீட்டில் படுக்கையில் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியை மகள், மருமகப்பிள்ளை இருவரும் சேர்ந்து 12 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து விசாரணை செய்துள்ளார்.

மங்கையர்க்கரசிக்கு கொடுக்கபட்ட காசோலைக்கு பணத்தை கொடுக்காமல் சட்டவிரோத பத்திர பதிவு செய்தவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட ஆவடி பத்திரபதிவாளர் மீதும், மூதாட்டியை ஏமாற்றிய மோசடி கும்பல் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட பத்திரபதிவு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

author avatar
Savitha