சென்னையில் மெட்ரோ இரயில் சேவை நிறுத்தம் – மக்கள் அதிர்ச்சி!!

0
74

சென்னையில் மெட்ரோ இரயில் சேவை நிறுத்தம் – மக்கள் அதிர்ச்சி!!

 

சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்தின் பொது போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன . இவ்வாறு உருவாக்கப்படும் வழிகளின் தண்டவாளங்கள் மேம்பாலங்கள் நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்படுகின்றன.

 

இத்திட்டத்தின் படி இயங்கும் தொடருந்துகள் தில்லி மெட்ரோ திட்டத்தை ஒத்திருக்கும். சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் ,இந்தியாவின் சென்னை,தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு விரைவான அமைப்பு ஆகும். இது இந்தியாவின் நான்காவது பெரிய மெட்ரோ அமைப்பு ஆகும். இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்டது.

 

இந்நிலையில் சென்னையில் கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் வரை 5 நிமிடத்துக்கு ஒருமுறை என இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில்கள், நேற்று இரவு மட்டும் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வந்த நிலையில் மக்களுக்கு கடும் சிரமம் ஏற்ப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து கேட்டறிந்து போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தபட்டது என தெரியவந்துள்ளது. பின்பு அங்கு வந்த மெட்ரோ ஊழியர்கள் விரைவான நடவடிக்கை காரணமாக கோளாறு சரிசெய்யப்பட்டு இரவு 8.30 மணிக்கு மேல் கோயம்பேடு – பரங்கிமலை இடையில் எப்பொழுதும் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

author avatar
CineDesk