தினமலர் நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!!

0
47

தினமலர் நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!!

தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட காலை உணவுத்திட்டம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு கொண்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இட்லி, வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டலை காலை உணவுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தினமலர் நாளிதழ், தனது முதல் பக்க செய்தியாக அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. “காலை உணவுத் திட்டம் பள்ளி மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு” என்று மனிதக்கழிலை அரசு பள்ளி மாணவர்களின் காலை உணவுத்திட்டத்துடன் ஒப்பிடும் வகையில் முதல்பக்கத்தில் செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K