ராணுவ தளவாடங்களின் உபகரணங்களை உற்பத்தி செய்வது தொடர்பான ஒப்பந்தம்!  கோவையை சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வம்!!

0
113
#image_title

ராணுவ தளவாடங்களின் உபகரணங்களை உற்பத்தி செய்வது தொடர்பான ஒப்பந்தம்!  கோவையை சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வம்!

 

ராணுவத் தளாவாடங்களுக்காண உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்குவதில் கோவையை சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றது.

 

ராணுவத்திற்கு தளவாடங்களை தயாரித்து வழங்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு கோவையை சேர்ந்த நிறுவனங்கள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110 உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

 

தமிழகத்தில் சென்னை, சேலம், ஓசூர், கோவை, திருச்சி வழியாக ராணுவ தொழில் பெருவழித் தடம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த வழித்தடத்தில் வான்வெளி மற்றும் ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள், கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைக்க உள்ளன.

 

கோவை மாவட்டத்தில் இருக்கும் சிறு, குறு  நிறுவனங்கள் ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களுக்கு உபகரணங்கள் மற்றும் கருவிகளை தயாரித்து வழங்குகின்றது. இன்னும் கூடுதல உபகரணங்கள் தயாரிப்பது தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகின்றது.

 

இது தொடர்பாக கொடிசியா ராணுவ புத்தாக்கம் மற்றும் மேம்பாட்டு மைய இயக்குநர் எம்.வி.ரமேஷ்பாபு அவர்கள் “ராணுவ அமைச்சகம் தமிழகத்தில் இருக்கும் பெரு வழித்தடத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ராணுவ தயாரிப்பு செயலர் அதிக ஆர்வத்துடன் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கோவையில் உள்ள சிறு தொழில் சங்க உறுப்பினர்கள் ராணுவத்திற்கான தளவாடங்களை தயாரிக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஏற்கனவே 40 முதல் 50 உபகரணங்களை தயாரித்து வழங்கி வருகின்றனர்.

 

இந்த எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தும் வகையில்  பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உள்பட ஏழு பொதுத்துறை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகின்றது. இந்த ஒப்பந்தங்கள் நிறைவேறிய பிறகு 150 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் தயாரித்து வழங்கப்படும்.

 

இதைப் போலவே ராணுவ தளவாடங்களுக்கு பங்களிப்பு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் 50ல் இருந்து 250 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தில் பிற மாவடங்களில் உள்ள சிறு, குறு நிறுவனங்களும் ராணுவ தளவாடங்களுக்கு தேவையான பொருட்களை உற்பததி செய்து வழங்குவதில் முனைப்பு காட்டி வருகின்றது” என்று அவர் கூறினார்.