தர்மபுரியை புறக்கணிக்கும் அரசு போக்குவரத்து கழகம்! கொந்தளிப்பில் மக்கள்!

0
102
Dharmapuri is neglected, people in turmoil
Dharmapuri is neglected, people in turmoil

தர்மபுரியை புறக்கணிக்கும் அரசு போக்குவரத்து கழகம்! கொந்தளிப்பில் மக்கள்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தமிழக அரசால் இயக்கப்படும் அதி விரைவு பேருந்து சேவை பொதுத்துறை நிறுவனமாகும். இது முன்பு திருவள்ளுவர் போக்குவரத்து கழகமாக இருந்தது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையை தலைமை இடமாக கொண்டு சுமார் 300கிமீக்கும் அதிகமான வழித்தடத்தில் அரசு அதி விரைவு பேருந்து சேவை நடைபெறுகிறது. மேலும் இந்த அரசு பொதுத்துறை கழகம் 8 பிரிவுகளில் ஒன்றாகும்.

இந்த 8 பிரிவுகளில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் வரலாற்றுச் சிறப்புகளை கொண்ட இடங்கள், வழிபாட்டுத் தளங்கள், மற்றும் கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் இணைக்கும் பகுதியாக உள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில் ஆறு வகையான பேருந்துகளை கொண்டுள்ளனர், மேலும் குளிர்சாதனம் இல்லாத பேருந்து, குளிர்சாதன பேருந்து, குளிர்சாதன பேருந்தில் தூங்கும் வசதிகள் கொண்ட பேருந்துகள் உள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் வழியாக பெங்களூருக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சேவையை வழங்கி வருகிறது.

இந்தியாவின் வடக்கு தெற்கு பகுதியை இணைக்கும் NH 7 தேசிய நெடுஞ்சாலையை NH 44 என்று பெயர்மாற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது, இந்த நான்கு வழிச்சாலை விரிவாக்கத்தின் போது தர்மபுரி நகரத்திற்குள் வராமல் மூன்று கிலோமீட்டர் சுற்றி செல்லும் வகையில் இந்த தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து வரும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து சேவை தர்மபுரி  நகரத்திற்குள் வராமல் புறக்கணித்து கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு செல்கிறது. மீண்டும் கிருஷ்ணகிரி வழியாக தர்மபுரி  நகரத்திற்குள் வராமல் புறக்கணித்து தென்னக நகரப்பகுதிகளுக்கு செல்கிறது.

தர்மபுரி நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் பேருந்து நிலையமாக உள்ளது.

மேலும் தர்மபுரியில் இருந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்செந்தூர் ராமநாதபுரம் உள்ளிட்ட நீண்ட தூர நகரங்களுக்குச் செல்ல தர்மபுரி பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் சென்று சேலத்தில் இருந்து மதுரை சென்று மதுரையில் இருந்து பேருந்துகளை பிடித்து அவரவர் பகுதிகளுக்குச் செல்லும் அவல நிலையுள்ளது.

பெங்களூரு நகரத்திலிருந்து வரும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில் இருக்கைகள் காலியாக இருந்தாலும் பேருந்துகள் தர்மபுரி  நகரத்திற்குள் வராமல் புறக்கணித்துச் செல்கிறது.

இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்செந்தூர், திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் வரும் பொதுமக்களும், அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்களும் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் தர்மபுரி மாவட்டம் விவசாயத்தில் சிறந்து விளங்கும் மாவட்டமாகும், இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தர்மபுரி மாவட்டத்தை ஒதுக்கி வருகிறது, ஒருவேளை தர்மபுரி மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்பதால் போக்குவரத்து வசதியிலும் பின்தங்கிய இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒதுக்கி வைக்க படுகிறதா என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றுகிறது.

மேலும் நீண்ட நாள் கோரிக்கையான தர்மபுரி மாவட்டம் பெங்களூரு செல்லும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் தர்மபுரி மாவட்ட மக்கள் பயன்பெரும் வகையில் ஆன்லைன் புக் செய்து பயணிக்கும் வகையில் இந்த நீண்ட நாள் கோரிக்கையை தர்மபுரி மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K