தினசரி நாளில் சோம்பை மிஸ் பண்ணிடாதீங்க!! அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!!

0
119

தினசரி நாளில் சோம்பை மிஸ் பண்ணிடாதீங்க!! அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!!

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சோம்பு அதிக மருத்துவ குணம் நிறைந்தது. பெருஞ்சீரகம், வெண் சீரகம் என்று அழைக்கப்படும் சிறிது பச்சை நிறம் கலந்த இது பூண்டு வகையைச் சார்ந்தது.இதன் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.

1. உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்தே குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும்.

2. சோம்பு கசாயம் குழந்தைகளின் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, வயிற்று உப்புசம், ஆகியவற்றைப் போக்குகிறது.

3. சோம்பு உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும் செய்கின்றது.

4. கண் பார்வைக் குறைபாடு அல்லது கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஒரு கிளாஸ் பெருஞ்சீரக பொடியை பாலில் கலந்து தினமும் எடுத்துக் கொண்டு வருவதால் கண் பார்வையை மேம்படுத்துகிறது.

5. மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ள ஆண் பெண் இருவரும் மற்ற மருந்துகளை சாப்பிடும் போது, சிறிதளவு சோம்பையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே மலட்டுத்தன்மை நீங்கும்.

6. நீண்ட நாட்களாகப் பசியெடுக்காமல் அவதிப்படுபவர்களுக்குக் கூட பசி உணர்வை சோம்புத் தூண்டுகின்றது.

சோம்பின் மூலம் இவ்வளவு நன்மைகள் நடைபெறும் என்பதால் இதனை பயன்படுத்தி பலனை அடையுங்கள்.

author avatar
CineDesk