உங்களுக்கு அரிசி உண்ணும் பழக்கம் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0
29
#image_title

உங்களுக்கு அரிசி உண்ணும் பழக்கம் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

நம் தென் இந்தியர்களின் உணவு பட்டியலில் முதல் இடத்தை வகிக்கும் அரிசியில் பொன்னி, மாப்பிள்ளை சம்பா, ஐ ஆர் 8 என பல வகைகள் இருக்கிறது. இந்த அரிசியை வேக வைக்காமல் உண்ணும் பொழுது நம் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.

நம்மில் சிலருக்கு அரசி உண்ணும் பழக்கம் இருக்கும். அரசி ஒரு வித ருசியுடன் மென்று சாப்பிடும் வகையில் இருப்பதால் பலர் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். சிலருக்கு அதை வெறும் அரிசியாக உண்ண பிடிக்கும் சிலருக்கு ஊறவைத்து சாப்பிட பிடிக்கும்.

இந்த பழக்கம் சிறு வயதிலேயே ஏற்பட்டு நாளடைவில் நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும் என்று நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை.

வேக வைக்காத அரிசி உண்பதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்:-

**அரிசியில் உள்ள செல்லுலோஸ் என்ற பொருள் நமது உடலில் ஜீரணத்தை கடினமாக்கி விடும்.

**வேக வைக்காத அரசியை உண்ணும் பொழுது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து விடும்.

**வேக வைக்காத அரிசியை உண்ணும் பழக்கம் தொடர்ந்தால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி விடும்.

**அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட் உடல் எடை கூடல், உடல் மந்த நிலை உள்ளிட்ட பாதிப்புகள் உருவாகத் தொடங்கி விடுகிறது.

**அரிசியில் உள்ள அதிகப்படியான கலோரிகள் இதயம் தொடர்பான பாதிப்பை உண்டாக்குகிறது. இதனால் மாரடைப்பு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கி விடுகிறது.

**வேக வைக்காத அரிசியால் வாயுத் தொல்லை, தூக்கமின்மை, வயிறு தொடர்பான பாதிப்பு உள்ளிட்டவைகள் உருவாகத் தொடங்கும்.