வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பொருளை வாயில் போட்டு மெல்லுங்கள்!!

0
114
#image_title

வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பொருளை வாயில் போட்டு மெல்லுங்கள்!!

வாயில் இருந்து வீசும் கெட்ட நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை அவசியம் பின்பற்றவும்.

1)படிகாரம்

சிறிது படிகாரத்தை காய்ச்சி ஆறவைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் அகலும்.

2)வேப்பம் பூ

ஒரு கிளாஸ் நீரில் சிறிது வேப்பம் பூ சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் முழுமையாக கட்டுப்படும்.

3)வேப்பிலை

சிறிது வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து பல் தேய்த்து வந்தால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.

4)கல் உப்பு

கல் உப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து வாயை கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் எளிதில் கட்டுப்படும்.

5)புதினா

சிறிதளவு புதினா இலையை வாயில் போடு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் முழுமையாக கட்டுப்படும்.

6)கிராம்பு

இரண்டு கிராம்பை நீரில் போட்டு ஒரு இரவு ஊறவைத்து மறுநாள் அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.

7)ஏலக்காய்

உணவு உட்கொண்ட பின்னர் ஏலக்காயை மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

8)பட்டை

ஒரு துண்டு பட்டையை பொடி செய்து பல் தேய்த்து வந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படாது.

9)டங்க் க்ளீனர்

பல் துலக்கிய பின்னர் டங்க் க்ளீனர் கொண்டு நாக்கை சுத்தம் செய்தால் வாயில் கெட்ட வாடை வீசாது.

10)ரோஜா இதழ்

ரோஜா இதழை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.