நுரையீரலில் ஒட்டி கிடக்கும் சளி அடித்துக் கொண்டு வர தூதுவளை சூப் குடிங்கள்!

0
129
#image_title

நுரையீரலில் ஒட்டி கிடக்கும் சளி அடித்துக் கொண்டு வர தூதுவளை சூப் குடிங்கள்!

சாதாரண சளி நாளடைவில் நுரையீலில் தேங்கி பாடாய் படுத்தி எடுக்கும். இந்த சளியால் மூச்சு திணறல், மூக்கடைப்பு, நெஞ்சு பகுதியில் வலி, இருமல், தலைவலி ஆகியவை ஏற்படும்.

இந்த நுரையீரல் சளி பாதிப்பில் இருந்து விடுபட தூதுவளை சூப் செய்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)தூதுவளை
2)திப்பிலி
3)மிளகு
4)சுக்கு
5)கொத்தமல்லி விதை
6)உப்பு

செய்முறை:-

முதலில் 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி விதையை உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் 4 மிளகை உரலில் போட்டு இடித்து எடுக்கவும். பிறகு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி உரலில் போட்டு இடிக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அரை கைப்பிடி அளவு தூதுவளை இலையை கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.

பிறகு இடித்து வைத்துள்ள மிளகு, கொத்தமல்லி விதை மற்றும் சுக்கை அதில் சேர்க்க வேண்டும்.

இதனை தொடர்ந்து 2 திப்பிலியை அதில் சேர்த்து சிறிது உப்பு போட்டு மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொத்திக்க விடவும்.

இந்த கஷாயத்தை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் பொழுது குடித்தால் நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளி அனைத்தும் கரைந்து வெளியேறும்.