நெஞ்சு சளித் தொல்லை ஒரு மணி நேரத்தில் நீங்க இந்த பானத்தை பருகுங்கள்!!

0
50
#image_title

நெஞ்சு சளித் தொல்லை ஒரு மணி நேரத்தில் நீங்க இந்த பானத்தை பருகுங்கள்!!

சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும். நெஞ்சு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும்.

நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:-

*அதிக சளி,வறட்டு இருமல்

*தலைபாரம்

*நெஞ்சு எரிச்சல்

*தொண்டை எரிச்சல்

*சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்

*சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல்

நெஞ்சு சளியை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்தும் முறை

தேவையான பொருட்கள்:-

*ஓமம் – 1 தேக்கரண்டி

*மிளகு – 5

*நாட்டு சர்க்கரை – சிறிதளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி ஓமம் மற்றும் 5 மிளகு சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடம் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து அதை நன்கு ஆறவிடவும். அடுத்து ஒரு உரல் எடுத்து அதில் ஆறவைத்துள்ள பொருட்களை போட்டு இடித்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் இடித்து வைத்துள்ள ஓமம், கரு மிளகு துளை சேர்த்து கொதிக்க விடவும். இவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து பருகவும். இவ்வாறு செய்தோம் என்றால் உடலில் உள்ள மொத்த பிரச்சனைகளும் குணமாகி விடும்.

ஓமத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:-

பாஸ்பரஸ், கால்சியம், கரோட்டின், இரும்புச்சத்து, தயாமின்உள்ளிட்ட பல சத்துக்கள் வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

கருமிளகில் அடங்கியுள்ள சத்துக்கள்:-

மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, கே, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.