சர்க்கரை நோயை சில தினங்களில் குணமாக்க இந்த ஜூஸ் செய்து பருகுங்கள்!!

0
74
#image_title

சர்க்கரை நோயை சில தினங்களில் குணமாக்க இந்த ஜூஸ் செய்து பருகுங்கள்!!

இன்றைய உலகில் பெரியவர்கள், இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவருக்கும் சர்க்கரை(நீரிழிவு) நோய் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:-

*பரம்பரை நோய்

*அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல்

*உடல் பருமன்

*மன அழுத்தம்

*அடிக்கடி கர்ப்பம் அடைதல்

*உயர் இரத்த அழுத்தம்

*இரத்த மிகை கொழுப்பு

*சினைப்பை நீர்க்கட்டி

*சோம்பலான வாழ்க்கை முறை

சர்க்கரை நோய் அறிகுறிகள்:-

*அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல்

*அதிகப்படியான உடல் சோர்வு

*தண்ணீர் தாகம் அதிகரித்தல்

*கண் பார்வை மங்குதல்

*அதிகப்படியான தலைவலி

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் ஜூஸ் வகைகள்:-

1)பாகற்காய் ஜூஸ்

ஆரோக்கியத்தை மேம்படுத்த பாகற்காய் ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும். இந்த பாகற்காய் ஜூஸில் அதிகளவு வைட்டமின் ஏ, பி மற்றும் சி, தயாமின், பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

பாகற்காய் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*பாகற்காய்

*தண்ணீர்

செய்முறை…

ஒரு பாகற்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய்க்கு விரைவில் தீர்வு காண முடியும்.

2)முள்ளங்கி ஜூஸ்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவதில் முள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முள்ளங்கியை ஜூஸ் செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

இந்த முள்ளங்கி ஜூஸில் வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், கால்சியம், தாது உப்புகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

முள்ளங்கி ஜூஸ் தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*முள்ளங்கி

*தண்ணீர்

செய்முறை…

ஒரு முள்ளங்கி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உரிய தீர்வு காண முடியும்.

3)தக்காளி ஜூஸ்

தக்காளியில் உள்ள அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இந்த தக்காளியில் ஜூஸ் செய்து அருந்தினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

தக்காளி ஜூஸில் அதிகளவு வைட்டமின் ஏ, கே, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாவுச்சத்து உள்ளிட்டவைகள் அடங்கி இருக்கிறது.

தக்காளி ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*தக்காளி

*எலுமிச்சை சாறு

*தண்ணீர்

செய்முறை…

மிக்ஸி ஜாரில் 1 தக்காளி மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு மாற்றி அதில் சுவைக்காக சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.