கள்ளக்குறிச்சி மாணவி   மர்ம மரணம்! சிசிடிவியில் சிக்கிய காட்சி மேலும் ஒருவர் கைது!

0
78
Kallakurichi student mysterious death! One more arrested!
Kallakurichi student mysterious death! One more arrested!

கள்ளக்குறிச்சி மாணவி   மர்ம மரணம்! சிசிடிவியில் சிக்கிய காட்சி மேலும் ஒருவர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது வரை மர்மமாகவே உள்ளது. தனது மகள் தற்கொலை செய்யவில்லை, கொலை என்று அவரது பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நான்கு நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பெரும் கலவரமாகவே வெடித்தது. பள்ளி முழுவதும் போராட்டக்காரர்கள் சூழ்ந்தனர். பள்ளியை அடித்து உடைத்தனர்.

அங்குள்ள பேருந்துகள் மற்றும் மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீ வைக்கப்பட்டது. அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.ஶ்ரீமதியின் உடலை இரு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டும் உடலில் கீறல்கள் உள்ளது என்பதை தவிர வேறு எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. தற்பொழுது பள்ளி நிர்வாகத்தை விசாரணை செய்யும் படி சிபிசிஐடி நீதிமன்றத்திடம் மனு கொடுத்தது.அந்தவகையில் அது சம்பந்தமாக பள்ளி தாளாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர்.இதனையடைத்து இந்த கலவரத்தில் சில கலவரக்காரர்கள் காசு கொடுத்து வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு காசு கொடுத்து செட் செய்யப் பட்ட கலவரக்காரர்களுக்கு மது மற்றும் கறி விருந்தும் கொடுத்துள்ளனர்.இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை தற்போது புலனாய்வுத்துறை விசாரணை செய்து வருகிறது. ஸ்ரீ மதி கீழே விழுந்து பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் தூக்கி செல்லும் வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு இருக்கையில் பள்ளியில் இருந்த சான்றிதழ்களை எரித்தது யார் என்று அங்கிருந்து சிசிடிவி மூலம் புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்து வந்தனர். அதில் லட்சாதிபதி என்பவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அங்குள்ள சான்றிதழ்களை கொளுத்தியதாக கூறப்படுகிறது. இவர் திருப்பூரில் இருந்து வந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர்.