கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு தடை! தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

0
176
#image_title
கேரளாவில் பிரபல நடிகர்களுக்கு தடை! தயாரிப்பாளர் சங்கம் முடிவு.
கேரளாவில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கேரளா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதி ரஞ்சித், தலைமையில் திரைப்பட துறை சம்பந்தமான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
மேலும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எடவேல பாபு, மலையாள திரைப்பட உலகில் போதைக்கு அடிமையான நடிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் ஒரு சிலரால் திரைபட துறைக்கு கலங்கம் ஏற்பட்டு வருகிறது. தங்களுக்கான சிறப்பன  எதிர்காலத்தை அவர்களாகவே சிதைத்து கொள்கின்றனர்.
இது போன்ற மதுவுக்கு அடிமையானவர்களின் பெயர் பட்டியலை கேரள அரசிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் கேரள திரைப்பட துறையில் வளர்ந்து வரும் நடிகர்களான ஷேன் நிகம், மற்றும் ஸ்ரீநாத் பாசி இருவரின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அந்த இரண்டு நடிகர்களுக்கும் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் எப்போதும் படப்பிடிப்பு தளங்களுக்கு வரும் போது மது போதையிலேயே உள்ளதால், அவர்களின் நடவடிக்கையினால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற காரணத்தால், அவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு இனி அவர்கள் கேரள திரைப்பட துறையில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக , கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த இரு நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள படங்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அனுபவம் வாய்ந்த மூத்த நடிகர்கள் பலர் இப்போதும் நல்ல முறையில் நடந்து கொள்வதாகவும், ஆனால் இளம் நடிகர்களால் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கேரளா திரைப்பட தொழிலாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.