நீரின்றி விவசாயப் பயிர்கள் வாடுவதால் தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை

0
112
#image_title

நீரின்றி விவசாயப் பயிர்கள் வாடுவதால் தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி ஆர்ப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயத்திற்கு தேவையான அளவு தண்ணீர் இல்லாததால் பயிர்களை காப்பாற்ற தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் பிரதான தொழிலாக விவசாயம் விளங்குகிறது. நெல் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் வசிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு, மண்ணிலா, மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, உள்ளிட்ட பயிர்களும் தோட்டக்கலை பயிர்களான வெண்டைக்காய், கத்திரிக்காய், பிடிக்கரணை உள்ளிட்ட காய்கறிகளும் மல்லிப்பூ சாமந்தி உள்ளிட்ட பூ வகைகளும் பயிரிடப்பட்ட வருகிறது.

இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயம் செய்ய போதிய அளவு தண்ணீர் கிணறுகளில் இல்லாததால் பயிர்கள் வாடுவதை கண்டு விவசாயிகள் தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து மண்ணிலா பயிர்களுக்கு நீர் பாச்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சுற்று வட்டார பகுதியில் உள்ள நீர்நிலைகளான ஏரி குளம் குட்டைகளை தூர்வாரி மழைக்காலங்களில் போதிய அளவு நீரினை சேமித்து வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Savitha