அன்றும்.. இன்றும்.. காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்த படங்கள்!

0
776
#image_title

அன்றும்.. இன்றும்.. காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்த படங்கள்!

திரைப்படத் துறையில் பல காமெடி நடிகர்கள் தங்களது நகைச்சுவை நடிப்பால் பலரை மகிழ்வித்து வருகின்றனர். ஒரு படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தை விட காமெடி கதாபாத்திரம் நன்றாக அமைந்து விட்டாலே படம் வெற்றி படமாக அமைந்து விடும். அந்த அளவிற்கு ரசிகர்கள் காமெடி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இருந்தபோதிலும் சில நகைசுவை நடிகர்கள், ஹரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கதாநாயகன் வேடத்தில் நடித்து அதிலும் தங்களது திறமையயை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

சந்திரபாபு

இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் படங்களில் நகைச்சுவை நடிப்பில் ஒரு ரவுண்டு வந்தவர். தனது காமெடியை பாடி லாங்வேஜ் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்தவர். அந்த காலத்தில் காமெடி ஸ்டாராக வலம் வந்த இவர் “கவலை இல்லாத மனிதன்”, “குமாரராஜா” உள்ளிட்ட படங்களில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்தி அசத்தி இருப்பார்.

நாகேஷ்

60, 70களில் தமிழ் திரைப்படங்களின் காமெடி மன்னனாக வலம் வந்தவர் நாகேஷ். தனது சுறுசுறுப்பான நகைச்சுவை நடிப்பால் இன்று வரை பேசப்படும் நடிகராக இருக்கிறார். படத்தில் நாகேஷ் இருந்தாலே அந்த படம் வெற்றி என்று சொல்லும் அளவிற்கு தனது உடல் தோணி மற்றும் நகச்சுயையால் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

இவர் காமெடி நடிகராக மட்டும் அல்ல நீர்க்குமிழி, எதிர்நீச்சல், அனுபவிராஜா அனுபவி, யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

கவுண்டமணி

காமெடியில் நக்கலை புகுத்திய நடிகர் இவர். 80, 90களில் கவுண்டமணி காமெடியால் பல படங்கள் வெற்றி அடைந்தது.

தனது கிண்டல் செய்யும் நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்த இவர் ராஜா எங்க ராஜா, பிறந்தேன் வளர்ந்தேன், 49ஓ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

வடிவேலு

திரைதுறைக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டவர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கிய நடிகர் வடிவேலு அவர்கள் தனது அசத்திய நடிப்பு திறமையால் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ‘வைகை புயல்’ என்ற படத்தை சொந்தமாக்கினார்.

காமெடியில் முன்னணி நடிகராக கலக்கினாலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலிராமன், எலி, நாய் சேகர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அனைத்து படங்களும் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.

விவேக்

தனது காமெடியில் சமூக சீர்திருத்தங்களை புகுத்தியவர். தனக்கென உரிய பாணியில் காமெடி செய்து மக்களை மகிழ்வித்தவர். சின்னக்கலைவாணர் என்ற படத்தை தன்னகத்து கொண்டவர்.

இவர் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். இவரும் வடிவேலுவை போல் ஹரோவாக ஆசைப்பட்டு பத்தாயிரம் கோடி, நான் தான் பாலா, பாலக்காட்டு மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சந்தானம்

நக்கல் நாயகன் சந்தானம் அவர்கள் பேசினாலே சிரிப்பு வரும் என்று சொல்லும் அளவிற்கு காமெடியில் புகுந்து விளையாடுபவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சந்தானம் அவர்கள் படத்தில் தனது டைமிங் காமெடியால் அனைவரையும் கலாய்த்து தள்ளுவார். பெரும்பாலான ஹீரோ நடிகர்களுக்கு பிடித்த காமெடி நடிகரும் இவர் தான்.

இவர் அறை எண் 305-இல் கடவுள், டிக்கிலோனா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் காமெடி கலந்த கதாநாயகனாக நடித்து அசத்தி இருப்பார்.

கருணாஸ்

2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ் திரை துறைக்கு அறிமுகமான இவர் குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தனது வித்யாசமான காமெடியால் ரசிகர்களை ஈர்த்த இவர் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளபுரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். கருணாஸ் காமெடியன், ஹீரோ மட்டும் அல்ல சிறந்த இசையமைப்பாளரும் ஆவார்.

யோகிபாபு

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் தனது விட முயற்ச்சியால் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

உடல் அமைப்பால் கேலி கிண்டலுக்கு ஆளான இவர் அதே உடல் தோற்றத்தை வைத்து திரைத்துறையில் தான் யார் என நிரூபித்து காட்டியவர். காமெடி நடிகர், குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் கோலமாவு கோகிலா, தர்ம பிரபு, கூர்க்கா, மண்டேலா, லக்கிமேன், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி இருக்கிறார். இவர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

சூரி

தமிழ் திரைத்துறைக்கு வந்த ஆரம்ப கட்டத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சூரி தனது கடின உழைப்பால் ரஜினி, விஜய், அஜித், சிவகார்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படத்தில் காமெடி ரோலில் நடிக்கும் நிலைக்கு உயர்ந்தார். காமெடியில் கலக்கி வரும் சூரி, விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.