ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா?

0
171
#image_title

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா?

சத்துணவு ஊழியர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணியை தங்களிடமே வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இனிமேல் காலையிலும் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தப் பணியினை மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தங்களது கோரிக்கையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு பணியாளர்களிடமே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

எனவே சத்துணவு பணியாளர்கள் அனைவரும் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க நாகை மாவட்ட தலைவர் உஷாராணி தலைமை தாங்கினார்.

மேலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகளை அடங்கிய மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜூ, பாஸ்கர் ஆகியோரிடம் சத்துணவு பணியாளர்கள் சார்பில் வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாக சங்க கொடியினை முன்னாள் வட்ட தலைவர் ராமமூர்த்தி ஏற்றி வைத்தார். இதில் சத்துணவு ஊழியர் சங்க வட்ட தலைவர் செல்வராணி, செயலாளர் செந்தமிழ்செல்வி, பொருளாளர் உஷா உள்ளிட்ட சத்துணவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.