முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!!

0
237
#image_title

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!!

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.ஐக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேஷ்தாஸ் மீது புகார் அளிக்க சென்ற பெண் (எஸ்.ஐ) யை தடுத்து நிறுத்தியதாக முன்னால் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் ஐந்து பிரிவுகளில் கீழ் 2021 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 2021 ஜூலை மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதும் முன்னாள் எஸ்.பி கண்ணன் மீதும் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர் இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முக்கிய சாட்சிகளான முன்னாள் தலைமைச் செயலாளர், முன்னாள் உள்துறை செயலாளர், சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி, என 68 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து குற்றவாளிகளை எதிர்தரப்பு வக்கில் குறுக்கு விசாரணை செய்தார். அதனை தொடர்ந்து சாட்சியங்கள் அளித்த தகவலின் படி முன்னாள் சிறப்பு டிஜிபி முன்னாள் எஸ்பி ஆகியவர்கள் நீதிபதியின் கேள்விக்கு பதில் அளித்தனர். எதிர்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். அவரின் விசாரணை முடிவடைந்த நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யதார்.

அதன்படி ஜூன் 12-ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜரானார். ஆனால் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆஜராகவில்லை இதை தொடர்ந்து அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன் எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்தார். பின்னர் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரநாத் முன்னாள் எஸ்பி தரப்பு ஹேமச்சந்திரன் ஆகியோரின் வாதத்தை கேட்டறிந்த நீதிபதி எம். புஷ்பராணி ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 10.50 மணிக்கு நீதிபதி எம்.புஷ்பராணி தீர்ப்பளித்தார். இதில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.