மூட்டு வலி இடுப்பு வலியை குணமாக்கும் உளுந்து பால்!! இதை எவ்வாறு தயார் செய்வது?

0
89
#image_title

மூட்டு வலி இடுப்பு வலியை குணமாக்கும் உளுந்து பால்!! இதை எவ்வாறு தயார் செய்வது?

உடல் எலும்பு வலிமை பெற ஆண்,பெண் அனைவரும் உளுந்து பால் அருந்துவது நல்லது.உளுந்தில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இவை உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)உளுந்து – 5 தேக்கரண்டி
2)நாட்டு சர்க்கரை – 6 தேக்கரண்டி
3)பால் – 1/4 டம்ளர்
4)தேங்காய் பால் – 1/4 டம்ளர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 5 தேக்கரண்டி வெள்ளை உளுந்து சேர்த்து தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

இரண்டு அல்லது 3 தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.

பிறகு ஊறவைத்த வெள்ளை உளுந்தை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அரைத்த வெள்ளை உளுந்து பாலை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு அரைத்த தேங்காய் பால் மற்றும் காய்ச்சாத பசும் பால் சேர்த்து கலந்து விடவும்.அதன் பிறகு சுவைக்காக நாட்டு சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான உளுந்து பால் தயார்.இதை தினமும் காலை நேரத்தில் குடித்து வந்தால் உடல் பல மடங்கு வலிமை பெறும்.

வயது முதுமையில் ஏற்படக் கூடிய மூட்டு வலி,இடுப்பு வலி முழுமையாக குணமாகும்.