குட் நியூஸ்.. புதிதாக 75 லட்சம் இலவச கேஸ் இணைப்புக்கள் வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!

0
36
#image_title

குட் நியூஸ்.. புதிதாக 75 லட்சம் இலவச கேஸ் இணைப்புக்கள் வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசின் “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தற்பொழுது இந்த இலவச கேஸ் இணைப்பை மேலும் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.இதனை தொடர்ந்து புதிதாக 75 லட்சம் இலவச கேஸ் இணைப்புக்கள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு நாட்டின் பிரதிநிதிகள்,அதிபர்கள் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்ததால் அதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்க மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தைத் தொடர்ந்து நிருபர்களை சந்தித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்,பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்புக்கள் வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.இதற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கீடு செய்யவும் அடுத்த 3 ஆண்டுகளில் புதிதாக 75 லட்சம் கேஸ் இணைப்புக்கள் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்நிலையில் மார்ச் மாத நிலவரப்படி நாடு முழுவதும் 9.59 லட்சம் கோடி உஜ்வாலா பயனாளிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.