அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை!

0
136
govt-hospital-insurance-plan-cancelled-a-new-controversy
govt-hospital-insurance-plan-cancelled-a-new-controversy

அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை!

தமிழக அரசு  மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர்.மேலும் உயிருக்கு ஆபாத்தான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை செலவிற்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.அதனை போக்குவதற்கு தான் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கபட்டது.அதன் மூலம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை இந்த காப்பீட்டு திட்டம் மூலம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு இந்த திட்டம் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டம் என்று பெயர்  மாற்றப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை மட்டுமின்றி மருத்துவ சிகிச்சைகளும் உள்ளடக்கி அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவாக்கப்பட்டது.அதன் மூலம் ஆண்டுதோறும் சுகாதார பட்ஜெட்டுக்கு நிகரான பகுதியளவு பெரிய தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்குகின்றது.அரசு ஒதுக்கும் நிதியில் மூன்றில் ஒரு பங்கு அளவே காப்பீடு நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன.

அதில் பல்வேறு விதமான பிரச்சனைகள் எழுந்துள்ளது.மீதமுள்ள மூன்றில் இரு பங்கு பணம் காப்பீட்டு நிறுவனங்களுக்கே கிடைக்கின்றது.அதனால் காப்பீட்டுத் திட்டதினை நிறுத்த வேண்டும் அதற்கான முதலீட்டைக் கொண்டு அரசே தேவையான மருந்துகள் உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும்.மேலும் அரசு மருத்துவக் கல்லூரி விடுதிகளை தனியாருக்கு வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் ,பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் பி.சாமிநாதன் கூறி வருகின்றார்.

author avatar
Parthipan K