ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு மற்றும் 1500 ஸ்டீராய்டு ஊசி!

0
81

ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக எட்டு முறை கருக்கலைப்பு செய்ய சொன்ன கணவன் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த பெண்ணின் தந்தை ஒருவர் ஓய்வு பெற்ற நீதிபதி. அவர் தனது மகளை மதிப்புமிக்க ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் இருவரும் வழக்கறிஞர்கள். மேலும் அந்த பெண்ணின் கணவரின் தங்கை ஒரு மருத்துவர். திருமணம் நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெண்ணின் கணவர் ஒவ்வொரு முறையும் துன்புறுத்த ஆரம்பித்து இருக்கிறார். தனது குடும்பத்தையும் சொத்துக்களையும் பாதுகாக்க மகன் வேண்டும் என்பதற்காக வெளிநாட்டில் எட்டு முறை கருக்கலைப்பு செய்ததாக சொல்லப்படுகிறது.

 

2009ஆம் ஆண்டு அந்த தம்பதியினர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளனர். பின் 2011 ஆம் ஆண்டு மறுபடியும் அந்தப் பெண் கர்ப்பமாக இருந்த பொழுது கணவன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அந்த குழந்தையை கலைக்கும்படி மிகவும் துன்புறுத்தியுள்ளார். அதன் பிறகு அவர் துன்புறுத்துவது மிகவும் அதிகமாகி விட்டதாக சொல்லப்படுகிறது. பின் மும்பையில் குழந்தை பெறுவதற்கான சிகிச்சையும் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

 

மேலும் அந்த பெண்ணின் கணவர் அந்த பெண்ணை பாங்காக்ருக்கு அழைத்து சென்று மரபணு கண்டறிதல் இடத்திற்கு கூட்டிச் சென்று அங்கு கருத்தரிக்கும் போது அக்கருவை பரிசோதித்து அது எந்த குழந்தை குழந்தை ஆணா பெண்ணா என்பதற்காக பரிசோதிக்க அந்தப் பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு மற்றும் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஹார்மோன் மற்றும் ஸ்டீராய்டு ஊசிகள் அந்த பெண்ணிற்கு போடப்பட்டுள்ளது.

 

இந்த சிகிச்சை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று இந்த மாதிரியான செயலில் ஈடுபட்டது குறித்தும், அதேபோல் தனது மனைவியை எட்டு முறை கருக்கலைப்பு செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதற்காக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Kowsalya