மோடியை மீண்டும் அரியணையில் அமர வைக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் – தமிழிசை சவுந்தரராஜன்!

0
120
#image_title

மோடியை மீண்டும் அரியணையில் அமர வைக்க ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் – தமிழிசை சவுந்தரராஜன்!

பிரதமர் முடியை மீண்டும் அரியணையில் அமர வைக்கவும் தேர்தல் களத்தில் பணியாற்றவும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் தமிழகத்தில் பாஜக மாநில தலைவராகவும், தேசிய செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன், கடந்த 2021ஆம் ஆண்டு புதுச்சேரி ஆளுநராகவும் தெலுங்கான துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்து வந்தவர் திடிரென கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

நாடு முழுவதும் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவில் சேர்ந்து 25ஆண்டுகள் ஆன நிலையில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநர் என்ற பெரும் பதவியை எனக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

எனவே மீண்டும் மோடியை மீண்டும் மூன்றாவது முறையாக அரியணையில் அமர வைக்கவும் தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றவும் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா மீண்டும் பாஜகவில் இணைந்தேன்.

ஆளுநராக இருந்து மீண்டும் அக்காவாக திரும்பி வந்துள்ளதாகவும் ஆளுநர் பதவியில் வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.