பிடிக்கலன்னா போக வேண்டியது தானே.. ஒரு அமைச்சராக நீ இதை நிறுத்திக் கொள்ள வேண்டும் – முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்!!

0
67
#image_title

பிடிக்கலன்னா போக வேண்டியது தானே.. ஒரு அமைச்சராக நீ இதை நிறுத்திக் கொள்ள வேண்டும் – முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்!!

விழுப்புர மாவட்டத்தில் நடந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம்,ஆளும் திமுக அரசையும்,அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக பாஜகவின் தலைவர் திரு.அண்ணாமலை குறித்தும் கடுமையாக சாடி பேசினார்.தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த சர்ச்சை கருத்து நாட்டு மக்களிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.”சனாதன தர்மத்தை எதிர்க்க கூடாது, அதை அடியோடு ஒழிக்க வேண்டும்”.இந்துக்களை டெங்கு,மலேரியாவை அழிப்பது போல் அழிக்க வேண்டுமென்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசினார்.இவரின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் உள்ள இந்து மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.கட்சி தலைவர்கள் பலர் இதற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புர மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன் அதிமுக சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி குறித்து ஆவேசமாக பேசினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு மதத்தையோ அதை சார்ந்தவர்களையோ இன்னொரு மதத்தை சார்ந்தவர் அல்லது தனி நபர் துன்புறுத்த கூடாது.எந்த ஒரு மதத்திலும் நல்லது இருக்கும்.அதே போல் தீமையும் இருக்கும்.இது ஒரு தனி மனிதர் விருப்பம் ஏற்று கொள்கிறதும்,ஏற்று கொள்ளாததும்.அதை விடுத்து குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவாக பேசுவது,அந்த மதத்தை சார்ந்தவர்கள் மனதையும்,நம்பிக்கையை புண் படுத்துவதென்று தனது அரசியல் ஆதாயத்திற்காக மிகவும் கீழ் தனமாக நடந்து கொள்ள கூடாது.உன் பாட்டன்,உன் தந்தைக்கு பிறகு முதல்வராக வர வேண்டும் என்பதற்காக இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக ஒரு மதத்தை இழிவு படுத்தி பேசுவதை நிறுத்திக்கொள்.மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டுமென்று இது போன்று தன்னை விளம்பர செய்வதை நிறுத்திக்கொள் என்று உதயநிதியின் சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சை கடுமையாக சாடினார்.

மேலும் அதிமுகவை பொறுத்தவரை அனைத்து மதமும் சமம்.இந்து,கிருத்துவம்,முஸ்லீம் என்று அனைத்து மதத்தையும் நாங்கள் சமமாக பார்க்கிறோம்.அறிஞர் அண்ணாவின் “ஒன்றே குளம் ஒருவனே தேவன்” கூற்றுப்படி அதிமுக உருவாகியது.ஆனால் இன்று திமுக இந்துக்களின் வாக்குளை பெற்று கொண்டு இந்துக்களை ஒழிக்க வேண்டும்.சனாதன தர்மத்தை அழிக்க வேண்டுமென்று பேசி வருகிறது.திமுகவின் இந்த கருத்தை பிரதமர் மோடி அவர்களே எதிர்த்து இருக்கிறார்.சனாதனம் குறித்து பேசுபவர்களை எதிர்க்க வேண்டுமென்று பிரதமர் மோடியே தெரிவித்துள்ளார்.ஆனால் பாஜக கட்சியின் இருந்து கொண்டு திமுகவின் சனாத கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அவர்களின் சர்ச்சை பேச்சை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக அறிஞர் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவறாக பேசி இருக்கிறார் என்று சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார்.

முன்னாள் முதல்வர் “அறிஞர் அண்ணா” குறித்து தரக்குறைவாக பேசி சரித்திரம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளானைப்போல் இன்றைக்கு புதிது புதிதாக தலைவர்கள் வந்திருக்கிறார்கள் என்றார்.கடந்த 1959 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் சனாதனத்தை பற்றி தவறாக பேசியுள்ளார் என்பது போல் ஆண்ணாமலை தெரிவித்துள்ளார்.அது முற்றிலும் ஆதாரமற்றது.நம் தமிழிற்கு உயரிய அந்தஸ்து பெற்றுக்கொடுத்து,நமது மாநிலத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவை பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன தகுதியும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக சாடினார்.