லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு !

0
53
#image_title
லோக்சபா தேர்தலில் பாஜக 400 தொகுகளில் வெற்றி பெறும்!  கோவா முதலமைச்சர் தெரிவிப்பு
நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்றார் என்று கூவி முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அவர்கள் “லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி வந்து தலைவர் இல்லாத கூட்டணி ஆகும். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை போல எந்தவொரு தலைவரும் இந்தியா கூட்டணியில் இல்லை.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் பாஜக கட்சி இந்த முறை 300 தொகுதிகள் எல்லாம் இல்லை. 400 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்பார்.
இந்தியா 60 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை தற்பொழுது பாஜக ஆட்சி செய்ததில் வெறும் 9 ஆண்டுகளில் பெற்றுள்ளது. மனிதவள மேம்பாடு, நாட்டின் உள் கட்டமைப்பு என இரண்டிலும் பாஜக ஆட்சியில் முக்கியதுவம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாஜக அரசு செய்துள்ளது. மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பாஜக அரசு செய்துள்ளது. இதனால் பாஜக தமிழகத்திலும் வெற்றி பெறும்.
ஐந்து மாநிலங்களின் தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருக்கின்றார். இதனால் மக்கள் அனைவரும் பாஜக கட்சியை வெற்றி பெறச் செய்து மீண்டும் நரேந்திர மோடி அவர்களை மூன்றாவது முறையாக பிரதமராக்குவார்கள்” என்று கூறியுள்ளார்.