இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..?

0
56

இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று… வேறு எந்தெந்த நாடுகள் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றது..?

இந்திய நாடு இன்று(ஆகஸ்ட்15) தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றது. இந்தியாவை போலவே சில நாடுகள் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது.

இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில் 1948ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற நாளை நினைவு கூறும் வகையில் கொடியேற்றி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் வெகு விமர்சியாக அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாட்டில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிகாட்டி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாக்கின்படி அனைவரும் நாட்டுப் பற்றை வெளிகாட்டும் விதமாக சமூக வலைதளப் பக்கங்களின் முகப்பில் தேசியக் கொடியை வைத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் அவர்களும் சமூக வலைதள பக்கத்தின் முகப்பில் தேசியக் கொடியை வைத்துள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று இந்தியா தவிர வேறு சில நாடுகளும் தங்களின் சுதந்திர தினத்தை வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றது. அதன்படி தென் கொரியா, வட கொரியா, காங்கோ, பெஹ்ரைன், லீக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளும் இன்று தங்களது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றது.

தென் கொரியா நாடு 1945ம் ஆண்டு இதே நாள் அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி ஜப்பான் ஆளுகையில் இருந்து விடுதலை பெற்றது. அதே போல வடகொரியா நாடும் இன்றுதான் விடுதலை பெற்றுள்ளது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றது போலவே பெஹ்ரைன் நாடும் 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றது. 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி காங்கோ நாடு பிரான்ஸ் நாட்டிடம் இருந்து விடுதலை பெற்றது. சிறிய ஐரோப்ப நாடான லீக்டன்ஸ்டைன் நாடு 1866ம் ஆண்டு ஜெர்மனியிடம் இருந்து விடுதலை பெற்று இன்று சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றது.