பைக்கில் அதிக மைலேஜ் வேண்டுமா? இனி பெட்ரோலும் மிச்சமாகும்!!

0
39

பைக்கில் அதிக மைலேஜ் வேண்டுமா? இனி பெட்ரோலும் மிச்சமாகும்!!

இந்த காலகட்டத்தில் எரிபொருளின் விலை உச்சத்தில் உள்ளது. இதனால் எரிபொருளை கம்மியாக பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் அனைவரும் அதிக விலை கொடுத்து வண்டிகளை வருகிறார்கள். இந்நிலையில் அந்த வண்டிகள் அதிக மைலேஜ் தரும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று cc-cubic capacity என்ற பெட்ரோலையும் காற்றையும் இன்ஜினில் ஒன்றாக வைத்திருக்கும் இடம்தான் தான் சிசி.

இதனால் சிசி கம்மியாகவுள்ள வண்டியில் அந்த இடத்தின் அளவு கம்மியாகவும், சிசி அதிகமாகவுள்ளது வண்டியில் அந்த இடத்தின் அளவு அதிகமாகவும் இருக்கும்.

மேலும் சிசி கம்மியாகவுள்ள வண்டியில் பெட்ரோல் கம்மியாகவும், சிசி அதிகமாகவுள்ள வண்டியில் பெட்ரோல் அதிகமாகவும் செலவாகும்.

ஆனால் அதிகமாக சிசி இருக்கும் வண்டியில் கம்மியான மைலேஜ்யும் , அதிக ஸ்பீடையும் கொடுக்கும். குறைவான சிசி கொண்ட வண்டிகளின் அதிக மைலேஜ்யும், குறைந்த ஸ்பீடையும் கொடுக்கும்.

மேலும் இது மட்டுமின்றி வண்டிகளுக்கு பிரேக் முக்கியமான ஒன்றாகும். வண்டிகளுக்கு மட்டும் பிரேக் முக்கியமல்ல நம் உயிருக்கும் பிரேக் முக்கியமான ஒன்றாகும்.

நாம் வாங்கும் வண்டியில் இரண்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.CBS- combined breaking system மற்றும்

ABS- anti locked breaking system ஆகும். இந்த பிரேக் சிஸ்டத்தில் சிபிஎஸ் அதிக ஸ்பீடில் சென்று கொண்டிருக்கும்போது பிரேக் செய்தால் கீழே விழும் அபாயம் உள்ளது.

ஆனால் ஏபிஎஸ் சிஸ்டம் உள்ள வண்டியில் சென்றால் பிரேக் நன்றாக இருக்கும் கீழே விழாமல் இருக்கலாம்.

மேலும் இது மட்டுமின்றி வண்டியில் வீல் முக்கியமான ஒன்றாகும். இதில் Alloy wheels மற்றும் spoke wheel உள்ளது. அல்லாய் வீல் அதிக நாள் தாங்காது, ஆனால் ஸ்போக் வீல் அதிக நாள் தாங்கும்.

இதுபோன்ற விஷயங்களை தெரிந்து கொண்டு நாம் வண்டிகளை வாங்க வேண்டும். வண்டிகளில் செல்லும் போது தலைக்கவசம் முக்கியமான ஒன்றாகும்.

அதுபோல வண்டிகளை வாங்கும் போது மைலேஜ், பிரேக், வீல் சரியாக உள்ளதா என்று சோதித்துப்பார்த்து வாங்க வேண்டும்.

author avatar
Parthipan K