தேங்காய் எண்ணெயுடன் இந்த 3 பொருளை சேர்த்தால் போதும்.. வழுக்கை இடத்தில் கூட முடி வளரும் அதிசயத்தை பார்ப்பீர்!!

0
148
#image_title

தேங்காய் எண்ணெயுடன் இந்த 3 பொருளை சேர்த்தால் போதும்.. வழுக்கை இடத்தில் கூட முடி வளரும் அதிசயத்தை பார்ப்பீர்!!

நம்மில் பல பேருக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை முடி கொட்டுதல் மட்டும் தான். இன்னும் இதில் பொதுவாக இருக்கும் பிரச்சனை முடி கொட்டி அந்த இடம் முடி இல்லாமல் வழுக்கையாக மாறுவது தான். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு அற்புதமான எளிமையான வீட்டு வைத்திய முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்த எண்ணெயை தயாரிக்கும் முறை

அடுப்பை பற்ற வைத்து பாத்திரம் வைத்து அதில் 250 மிலி தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

எண்ணெய் சூடாவதற்கு முன்பே கற்றாழை மடலை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து அதன் சதைப்பகுதியை மட்டும் இந்த எண்ணெயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கற்றாழை ஜெல்லை எண்ணெய் சூடாவதற்கு முன்பே போட்டு விட வேண்டும் சூடான பிறகு கற்றாழை ஜெல்லை போட்டால் அதில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக நம் முகத்தில் எண்ணெய் தெறிக்கும்.

பத்து நிமிடம் கழித்து இதில் கருஞ்சீரகத்தை இரண்டு ஸ்பூன் எடுத்து இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து வெந்தயத்தை இதில் ஒரு ஸ்பூன் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு இதில் கருவேப்பிலை நான்கு கொத்துகளை எடுத்து அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் இந்த எண்ணெயில் போட்டு பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த எண்ணெயை இரண்டு நாட்கள் அப்படியே வைக்க வேண்டும். இதில் சேர்த்திருக்கும் பொருள்களின் சத்துக்கள் அனைத்தும் இந்த எண்ணெயில் இறங்கும். இரண்டு நாட்கள் கழித்து இந்த எண்ணெயை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

நாம் தினமும் தலைக்கு தேய்க்கப் பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். அல்லது தலைக்கு குளிக்கும் முன்பு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த எண்ணெயை தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து பிறகு குளிக்கலாம்.

இந்த எண்ணெயை தலைமுடி வேர் வரைக்கும் செல்லும் விதத்தில் தேய்த்து தலைக்கு மசாஜ் செய்யலாம். இதை ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். முடிந்துவிட்டது என்றால் இது மாதிரியே மீண்டும் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம்.

இந்த எண்ணெயின் பயன்கள்

இந்த எண்ணெயை தயார் செய்து பயன்படுத்தினால் தலைமுடி கொட்டும் பிரச்சனை தீரும். தலைமுடி கொட்டிய இடத்தில் புதிய முடி வளரும். தலைமுடியின் நுனியில் வெட்டு ஏற்படும் பிரச்சனை சரியாகும்.

இந்த எண்ணெய் முடியில் வேர் வரை செல்வதால் தலைமுடியை நன்கு வலிமையாகவும் நீறமாகவும் வளரச் செய்யும். நரை முடி ஏற்படுவதை தடுக்கும். மேலும் தலைமுடி நன்கு அடர்த்தியாகவும் லேசாகவும் மாறும்.