பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

0
70

பாதாமை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

பாதாம் உடம்பிற்கு மிகவும் நல்லது என்று அனைவருக்கும் தெரியும். டயட் இருப்பவர்கள் பாதாமை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பலர் கூறி இருப்பது நமக்கு தெரியும். தினமும் பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.இவ்வாறு கூற வைத்த பாதாம் சாப்பிடுவது என்ன நன்மையை தரும் என்பதை காண்போம்.

இதற்காக இரவு தூங்குவதற்கு முன் நான்கு அல்லது ஐந்து பாதாமை தண்ணீரில் ஊறவைத்து எட்டு மணி நேரம் கழித்து காலை எழுந்தவுடன் இந்த பாதாமின் தோலை எடுத்து விட்டு சாப்பிட வேண்டும். ஏனென்றால் பாதாமின் தோளில் டானிக் எனப்படும் ஒரு பதார்த்தம் உள்ளது.

இது நம் உடம்பிற்கு பாதாமின் சக்தியை போகவிடாமல் தடுக்கிறது. எனவே எப்பொழுது பாதாம் உண்டாலும் அதன் தோலை நீக்கி விட்டே உண்ண வேண்டும். இந்த ஊற வைத்த பாதாம்மானது நம் உடல் எடையை குறைப்பது முதல் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், கேன்சர் கிருமிகள் நம் உடம்பிற்கு வரவிடாமல் தடுக்கவும் இந்த பாதாம் உதவுகிறது.

இவ்வாறு கூற வைத்த இந்த பாதாம் பருப்பில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் இ, புரோட்டின் போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. இந்த பாதாமை சாப்பிடுவதால் சர்க்கரை வியாதியும் கட்டுக்குள் இருக்கும். ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது மிகவும் நல்லது.

ஊற வைத்த இந்த பாதாம் பருப்பு நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்யும் சக்தி வாய்ந்தது. இந்த ஊறவைத்த பாதாமில் லிப்பே எனப்படும் என்சைம் உள்ளது. இந்த என்சைம் நமது செரிமான சக்தியை அதிகப்படுத்துவதுடன் உடம்பில் இருக்கக்கூடிய கொழுப்புகளையும் கரைக்கும்.

பாதாமில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகமாக இருப்பதனால் இதிலுள்ள வைட்டமின் ஈ ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு நம் உடம்பில் உள்ள கிருமிகளை வெளியேற்றி நமக்கு எப்போதும் இளமை தோற்றத்தை தரும். குறிப்பாக இதில் இருக்கக்கூடிய வைட்டமின் 17 நம் உடம்பில் உள்ள கேன்சர் செல்களை அழிக்கிறது.

கர்ப்பிணி பெண்கள் இந்த ஊறவைத்த பாதாம் பருப்பை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலிக் ஆசிட் பாதாமில் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊற வைத்த பாதாமை தினமும் நான்கு அல்லது ஐந்து மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

author avatar
CineDesk