ரயில் பெட்டிகளில் திடீர் மாற்றம்!! பயணிகள் கடும் அவதி!!

0
69

ரயில் பெட்டிகளில் திடீர் மாற்றம்!! பயணிகள் கடும் அவதி!!

தமிழகத்திலிருந்து செல்கின்ற ஏழு முக்கியமான ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நீண்ட தூரம் செல்கின்ற ரயில்களில் உள்ள இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் முற்றிலுமாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வேக ரயிலில் நான்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏசி பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. இனிமேல் இந்த ராமேஸ்வரம் கோவை வேக ரயிலில் எட்டு ஏசி பெட்டிகளும், 9 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், மூன்று முன்பதிவில்லா பெட்டிகளும் அமைக்கப்படும்.

இதே போல் இனி கோயமுத்தூர்- ராஜ் காட் வேக ரயிலில் எட்டு ஏசி பெட்டிகளும், 9 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், மூன்று முன்பதிவில்லா பெட்டிகளும் அமைக்கப்படும்.

மேலும் எழும்பூர்- ஜோத்பூர் விரைவு ரயிலில், ஐந்து இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், ஒரு முன்பதிவு இல்லா பெட்டிக்கு பதிலாக ஆறு ஏசி பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை -நாகர்கோவில் செல்லும் வேக ரயிலில், ஐந்து இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், ஒரு முன்பதிவு இல்லா பெட்டிக்கு பதிலாக ஆறு ஏசி பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடியில் இருந்து ராஜஸ்தான் செல்கின்ற வேக ரயிலில் மூன்று இரண்டாம் வகுப்பு படிக்க வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவு இல்லா பெட்டி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் குறைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு பதிலாக ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி இந்த வேக ரயிலில் 11 ஏசி பெட்டிகளும், 7 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் செயல்படும்.
ராமேஸ்வரத்திலிருந்து குஜராத் செல்லும் வேகம் ரயிலில் ஐந்து இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவு இல்லா பெட்டி குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக ஆறு முதல் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி முதல் எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் வேக ரயிலில் 13 ஏ சி பெட்டிகளும், இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் மற்றும் 3 முன்பதிவில்லா பெட்டிகளும் அமைக்கப்படும்.

ரயில் பெட்டிகளில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாற்றமானது இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும். இந்த மாற்றத்தால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஏனென்றால் ஏசி பெட்டிகளில் பயணிப்பதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே பயணிகள் அனைவரும் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது சென்னை நாகர்கோவில் செல்கின்ற வேக ரயிலில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிக்க 425 ரூபாய் கட்டணம் ஆகும்.

ஆனால் தற்போது ஏசி பட்டியில் பயணிக்க வேண்டுமானால் ரூபாய் 110 கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும். இந்த மாற்றத்தால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று ரயில்வே ஊழியர்கள் சங்கம் கூறி வருகிறது.

author avatar
CineDesk