வன்னியர்களை வைத்து கருணாநிதி எடுத்த பிச்சை! விளாசியெடுத்த கிருஷ்ணசாமியின் மகன்
தமிழக அரசியலில் மக்களுக்கு எதாவது செய்கிறார்களோ இல்லையோ தமிழக மக்களை சாதி மற்றும் மத அடிப்படையில் பிரித்தாள்வதில் அனைத்து கட்சிகளும் கை தேர்ந்தன. அதிலும் குறிப்பாக கருணாநிதி திமுக தலைவராக இருந்த காலங்களில் தான் சாதிய அரசியல் தலை தூக்கியது என்ற குற்றசாட்டும் பரவலாக பேசபடுகிறது.
அந்த வகையில் பாமக நிறுவனர் எதாவது திமுக மீது விமர்சனம் வைத்தால் அக்கட்சியின் தலைவராக ஸ்டாலின் அதற்கு பதில் அளிக்காமல் வன்னிய சமூகத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகளில் யாரையாவது ஒருவரை வைத்து பதிலளிக்க வைப்பார். அந்த அளவிற்கு தமிழக மக்கள் மனதில் சாதிய பிரிவினையை திமுக விதைத்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக காரணம் கருணாநிதி போட்ட பிச்சை என கருத்து தெரிவித்திருந்தார். இவருடைய இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அவர் தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பும் கேட்டு கொண்டார்.
இந்நிலையில் இவருடைய கருத்திற்கு எதிர்வினையாற்றும் வகையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி கடுமையாக திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.
அதில் ” ஆர்.ஸ்.பாரதிகள் ஒருபோதும் திராவிடம் வன்னியருக்கோ மறவருக்கோ 27% இட ஒதுக்கீடு பிச்சை போட்டது என பேசுவதில்லை, முஸ்லிம்களுக்கு 3% பிச்சை போட்டது என்று பேசியதில்லை. திராவிடம் பிச்சை போடும் வள்ளல் என்று காட்டிக்கொள்ளவே ‘தாழ்த்தப்பட்டவர்’ என்று கூட்டம் நிரந்தரமாக தேவைபடுகிறது ” என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் அவர் ” அப்படியே வன்னியர் நடத்திய போராட்டத்தை சாக்காக வைத்து கலைஞர் தன் சொந்த சாதிக்கு MBC பிச்சை குடுத்துக்கொண்டதும், உங்க முதலியார் சாதி ஏழைகளுக்கும் சேர்த்து மோடி குடுத்த 10% EWS இட ஒதுக்கீடு பிச்சையை பற்றியும் எடுத்து சொல்லலாமே… இங்க பிச்சை வாங்கதவன் யாரு?! ” என்றும் திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.