Friday, November 15, 2024
Home Blog Page 4930

சிஏஏ போராட்ட அறிவிப்பால் சென்னையில் பதற்றம்! பலத்த பாதுகாப்பில் தலைமை செயலகம்..!!

0

சிஏஏ போராட்ட அறிவிப்பால் சென்னையில் பதற்றம்! பலத்த பாதுகாப்பில் தலைமை செயலகம்..!!

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடந்த தடியடி சம்பவம் பெரிதும் பேசப்பட்டது.

சில மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீர்மானைத்தை நிறைவேற்ற திமுக வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும், தமிழக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்தினால் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இசுலாமியர்களின் ஒட்டுமொத்த ஜமாத் அமைப்பினர்களும் தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்த நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் மன்ற தலைவார் வாராகி சார்பில் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்றும், பொது சொத்துகளுக்கு அசம்பாவிதமோ அல்லது சட்டம் ஒழுங்கு சீர்கெட வாய்ப்பு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை போராட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்தார். தடை விதித்தாலும் இன்று சொன்னபடியே போராட்டம் நடக்கும் என்று இஸ்லாமியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்கள் காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளது. இதில் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமை செயலகத்தில் மட்டும் 2000 போலீசார் அவசரமாக குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தை முன்னிறுத்தி களத்திற்கு வந்தால் அனைவரையும் கைது செய்ய காவல்துறை தயாராக இருப்பதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மாநாடு திரைப்படத்தின் அட்டகாசமான பூஜை ஸ்டில்கள்: இணையத்தில் வைரல்

0

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது

மாநாடு படத்தின் பூஜையில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, வெங்கட்பிரபு, கலைப்புலி எஸ் தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்றைய பூஜைக்கு பின்னர் ஓரிரு காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது

இன்று தொடங்கும் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதி வரை தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் இந்த முதல்கட்ட படப்பிடிப்பில் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது

மாநாடு படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், மனோஜ், டேனியல் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கியில் பணத்தை வாங்காமல் மானத்தை வாங்கிய கணவர்! மனைவியின் புகாரால் நடவடிக்கை..!!

0

வங்கியில் பணத்தை வாங்காமல் மானத்தை வாங்கிய கணவர்! மனைவியின் புகாரால் நடவடிக்கை..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த எட்வின் ஜெயக்குமார் என்பவர் விராலிமலை இந்தியன் வங்கி கிளையில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வருடம் டிசம்பரில் இவருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் செல்போனில் பேசியபடியும், வாட்ஸ்சப்பிலும் எட்வின் மூழ்கியிருந்தார். இவரின் செயல்பாடு இரவு முழுக்க அதிகரிக்க ஆரம்பித்தது. தனி அறையில் விடிய விடிய பேசுவது நாளுக்கு அதிகரிக்கவே, மனைவிக்கு இவரின் மேல் சந்தேகம் எழுந்தது. கணவரின் செயல்பாடுகளை தந்திரமாக அறிய முயற்சித்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தனி அறையில் இருந்த கணவரின் செல்போன்களை ஆராய்ந்த போது எட்வின் மனைவி பேரதிர்ச்சியை அடைந்தார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களில் வேறு பெண்களுடன் புகைப்படம், நெருக்கமான வீடியோக்கள் இருந்தன. இந்நிலையில், எட்வின் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் கொடுத்தார்.

இதுகுறித்து அவர் மனைவி கூறதாவது:

அவரிடம் நெருக்கமாக இருந்த ஒரு பெண்ணை கார்ப்பமாக்கி கருவை கலைத்ததும் தெரியவந்துள்ளது. அந்த பெண் கேள்விகேட்டபோது இதையெல்லாம் நீ கண்டு கொள்ளாதே, யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். 30 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளதாக அவர் மனைவி தெரிவித்தார். வீட்டு மாடியில் நின்று கொண்டு அருகே உள்ள பெண்களை படம் எடுப்பார். வங்கிக்கு வரும் பெண்களை ஆபாசமாக படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் மிரட்டினார் என்றும் கூறப்படுகிறது.

பின்னர், காவல்துறையின் மூலம் எட்வின் கைது செய்யப்பட்டார், முன்கூட்டியே தனக்கான ஜாமீன் வாங்கியிருந்தும் புகைப்படம் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அவரது ஜாமீனை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும் எட்வின் ஜெயக்குமார் மீது, ஆபாச படம் எடுத்து துன்புறுத்துதல், பெண்களை அவமதிப்பது, கொலை மிரட்டல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. எட்வின் ஜெயக்குமாரும், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களும் தலைமறைவாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை அவர்களை விரைவில் கைது செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வன்னியர் போராட்டத்தை சாக்காக வைத்து கருணாநிதி பிச்சை எடுத்துக் கொண்டார்! ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்..!!

0

வன்னியர் போராட்டத்தை சாக்காக வைத்து கருணாநிதி பிச்சை எடுத்துக் கொண்டார்! ஷியாம் கிருஷ்ணசாமி விளாசல்..!!

திமுகவின் மூத்த அரசியல்வாதி ஆர்.எஸ்.பாரதியின் விமர்சன பேச்சுக்கு புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஷியாம் கிருஷ்ணசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

ஆதி திராவிடர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்திருப்பதற்கு, திமுக போட்ட பிச்சைதான் காரணம் என்று வாய்க்கு வந்தபடி பத்திரிகை மற்றும் ஊடகங்களையும் தரக்குறைவாக விமர்சித்தார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் திமுகவின் அநாகரிக பேச்சுக்கு சாட்டையடி பதில் கொடுத்துள்ளார்.

அவரது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது;
இட ஒதுக்கீட்டு உரிமைக்காக போராடிய வன்னியர்களின் போராட்டத்தை சாக்காக வைத்து கலைஞர் கருணாநிதி தனது சொந்த சாதிக்கு MBC ஒதுக்கீட்டில் பிச்சை எடுத்துக்கொண்டார். ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் ஒருபோதும் BC மற்றும் MBC போன்ற ஒதுக்கீடுகளுக்கு பிச்சை போட்டதாக பேசிவதில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், திராவிட முன்னேற்ற கழகம் தன்னை வள்ளல்போல காட்டிக் கொள்ள ஒடுக்கப்பட்ட சமூக மக்களை பயன்படுத்திக் கொள்கிறது. வன்னியர் போராட்டத்தின் மூலம் கருணாநிதி தன் சொந்த சாதிக்கு MBC ல் பிச்சை எடுத்துக் கொண்டதையும், உங்கள் முதலியார் சாதி ஏழைகளுக்கு மோடி 10% EWS இட ஒதுக்கீடு பிச்சையை பற்றியும் பேசலாமே என்று வெளுத்து வாங்கியுள்ளார்.

திராவிடம் ஒருபோதும், முஸ்லிம்களுக்கு 3% இட ஒதுக்கீடு பிச்சை போட்டோம் என்று பேசுவதில்லை. பிற சமூகங்களுக்கு பிச்சை போட்டோம் என்று சொல்வதில்லை. தன்னை பெரிய வள்ளலாக காட்டிக் கொள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று ஷியாம் கிருஷ்ணசாமி பதிவு செய்துள்ளார்.
ஷியாம் கிருஷ்ணசாமியின் டுவிட்டர் பதிவு தற்போது இணையத்தில் மிக வேகமாக திமுகவிற்கு எதிராக பரவி வருகிறது. தனது சமூகத்தின் 7 பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளராக மாற்றி அரசாணை பிறப்பிக்க புதிய தமிழகம் கட்சி தொடர்ந்தி போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டம் பாமகவின் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றதும், 21 உயிர்களை இழந்தும், பல்வேறு இன்னல்களுக்கு பிறகும் MBC இட ஒதுக்கீடு உரிமை கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சொன்ன சொல் மாறாத எடப்பாடி! சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு விரைவில் சட்டம்!!

0

சொன்ன சொல் மாறாத எடப்பாடி! சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு விரைவில் சட்டம்!!

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக சில நாட்களுக்கு முன்பு அதிமுக அறிவித்திருந்தது. இதனை சட்டமாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அறிவிப்பு செய்தால் மட்டும் போதுமா அதை சட்டமாக இயற்ற முடியுமா என்று திமுக கேலி செய்தது.

இந்நிலையில், சிறப்பு வேளாண் மண்டலம் சட்டமசோதா குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை கூடும் அதிமுக அமைச்சரவை கூட்டத்தில் ஏற்கனவே காவிரி டெல்டா பகுதியை பற்றி கலந்து ஆலோசித்த விஷயத்தை உறுதி செய்யும் வகையில் சட்டமாக அறிவிக்கப்பட்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு பிறகு விவசாய சங்கம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து நன்றியை தெரிவத்தனர். தமிழக முதல்வர் ஒரு விவசாயி அதனால் விவசாயிகளின் கஷ்டங்களை புரிந்து கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று பல்வேறு அரசியல் கட்சி மற்றும் எதிர்க்கட்சியிடம் இருந்து அதிமுக பாராட்டை பெற்றது.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் வேளாண் மண்டல அறிவிப்பு குறித்து உறுதியான முடிவு எடுக்கப்பட்டு, வருகின்ற 20 ஆம் தேதி இதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வன்னியர்களை வைத்து கருணாநிதி எடுத்த பிச்சை! விளாசியெடுத்த கிருஷ்ணசாமியின் மகன்

0

வன்னியர்களை வைத்து கருணாநிதி எடுத்த பிச்சை! விளாசியெடுத்த கிருஷ்ணசாமியின் மகன்

தமிழக அரசியலில் மக்களுக்கு எதாவது செய்கிறார்களோ இல்லையோ தமிழக மக்களை சாதி மற்றும் மத அடிப்படையில் பிரித்தாள்வதில் அனைத்து கட்சிகளும் கை தேர்ந்தன. அதிலும் குறிப்பாக கருணாநிதி திமுக தலைவராக இருந்த காலங்களில் தான் சாதிய அரசியல் தலை தூக்கியது என்ற குற்றசாட்டும் பரவலாக பேசபடுகிறது.

அந்த வகையில் பாமக நிறுவனர் எதாவது திமுக மீது விமர்சனம் வைத்தால் அக்கட்சியின் தலைவராக ஸ்டாலின் அதற்கு பதில் அளிக்காமல் வன்னிய சமூகத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகளில் யாரையாவது ஒருவரை வைத்து பதிலளிக்க வைப்பார். அந்த அளவிற்கு தமிழக மக்கள் மனதில் சாதிய பிரிவினையை திமுக விதைத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக காரணம் கருணாநிதி போட்ட பிச்சை என கருத்து தெரிவித்திருந்தார். இவருடைய இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அவர் தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பும் கேட்டு கொண்டார்.

https://twitter.com/RSBharathiDMK/status/1229292797137567744

இந்நிலையில் இவருடைய கருத்திற்கு எதிர்வினையாற்றும் வகையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி கடுமையாக திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.

அதில் ” ஆர்.ஸ்.பாரதிகள் ஒருபோதும் திராவிடம் வன்னியருக்கோ மறவருக்கோ 27% இட ஒதுக்கீடு பிச்சை போட்டது என பேசுவதில்லை, முஸ்லிம்களுக்கு 3% பிச்சை போட்டது என்று பேசியதில்லை. திராவிடம் பிச்சை போடும் வள்ளல் என்று காட்டிக்கொள்ளவே ‘தாழ்த்தப்பட்டவர்’ என்று கூட்டம் நிரந்தரமாக தேவைபடுகிறது ” என்று விமர்சனம் செய்துள்ளார்.

https://twitter.com/DrShyamKK/status/1229401650583896064

மேலும் அவர் ” அப்படியே வன்னியர் நடத்திய போராட்டத்தை சாக்காக வைத்து கலைஞர் தன் சொந்த சாதிக்கு MBC பிச்சை குடுத்துக்கொண்டதும், உங்க முதலியார் சாதி ஏழைகளுக்கும் சேர்த்து மோடி குடுத்த 10% EWS இட ஒதுக்கீடு பிச்சையை பற்றியும் எடுத்து சொல்லலாமே… இங்க பிச்சை வாங்கதவன் யாரு?! ” என்றும் திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

https://twitter.com/DrShyamKK/status/1229614645238992896

திரௌபதி பட வெளியீட்டு தேதி அறிவிப்பு! தேசிய அளவில் டிரெண்டிங்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

0

திரௌபதி பட வெளியீட்டு தேதி அறிவிப்பு! தேசிய அளவில் டிரெண்டிங்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான திரௌபதி படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகியது முதல் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியது. படத்திற்கான வரவேற்பு கூடியது போலவே அதற்கான எதிர்ப்பும் சில அமைப்புகள் மூலம் எழுந்தது.

இந்த நிலையில் தான் திரௌபதி படத்திற்கு எதிராக தொடரப்படும் அனைத்து வழக்கையும் தாங்கள் எடுத்து நடத்தி படத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்குவதாக பாமகவின் வழக்கறிஞர் கே.பாலு அறிவித்திருந்தார். இதனையடுத்து மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்ற திரௌபதி படம் எப்போது வெளியாகும் என படக்குழுவினரிடம் ரசிகர்கள் கேட்ட வண்ணமே இருந்தனர்.

https://twitter.com/mohandreamer/status/1229748357884596226

இதனையடுத்து நேற்று டிவிட்டரில் பதிவிட்ட படத்தின் இயக்குனர் மோகன் ஜி இன்று வெளியீட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கூறியது போலவே இன்று மாலை 6.30 மணிக்கு பட வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். அதாவது வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரௌபதி படம் வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார்.

படம் வெளியீட்டு தேதியை பார்த்த ரசிகர்கள் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இவர்கள் #Draupathi மற்றும் #திரௌபதி ஹேஷ் டெக்குகளை பயன்படுத்தி டிவிட்டரில் பதிவிட்ட கருத்துக்கள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

திமுகவின் அநாகரிக பேச்சை கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த முற்போக்கு சிந்தனையாளர்கள்! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!!

0

திமுகவின் அநாகரிக பேச்சை கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்த முற்போக்கு சிந்தனையாளர்கள்! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!!

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் தரம்தாழ்ந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. தான் பேசியதற்காக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களிடமும் அவர் மன்னிப்பு கேட்டார்.

இந்த சம்பவத்தில் சிறிதும் தனக்கு தொடர்பில்லாத நபர்களைப்போல் நடந்து கொள்ளும் முற்போக்கு சிந்தனையாளர்கள் எந்த கருத்தையும் முன்வைக்காமல் தலைமறைவாக இருப்பதாக புதிய விமர்சனங்கள் சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்தில் ஒரு முற்போக்காளர் கூட இதுகுறித்து எந்த கருத்தும் சொன்னதாக தெரியவில்லை
என்று கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.பாரதி பேசியதை போல் ஒரு பாஜக நிர்வாகி பேசியிருந்தால், பார்ப்பணத் திமிர் என்று கதைவிட்டிருப்பார்கள். தமிழ்நாடே கருத்தியல் புரட்சியை கையில் எடுப்பது போல் பிம்பம் உருவாகியிருக்கும். முற்போக்கு கருத்தியல் பேசும், கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், ஆளூர்.ஷானவாஸ், பாமகவிடம் கருத்தியல் ரீதியாக மோதும் அரசியல் கட்சியான விசிகவின் வன்னியரசு, திருமாவளவன் போன்றோர் கூட இந்த சம்பவத்திற்கு கண்டனமோ, அறிக்கையோ விடவில்லை மற்றும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் தோழர் சுந்தரவள்ளி, பா.ரஞ்சித், சுபஸ்ரீ ஆகியோரும் திமுகவின் அநாகரிக பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் தனது கேள்விகளை முன் வைத்துள்ளனர்.

தனது சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் கொள்கைகளை நாணல் போன்று வளைத்துக் கொள்வதுதான் முற்போக்கு சிந்தனையா..? தனக்கு தேவைப்பட்டால் முற்போக்குத் தனமாக பேசுவதும், நியாயமாக பேச வேண்டிய இடங்களில் எதுவும் பேசாமல் தலைமறைவாக இருப்பவர்கள் எப்படி முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்க முடியும்..? என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆதி திராவிடர்களுக்கு பிச்சை போட்டதாக சொல்லப்பட்ட உச்சகட்ட அநாகரிக பேச்சுக்கு கூட எந்த இயக்கமும், முற்போக்கு சிந்தனையாளர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக பேசினால் தலைமறைவாக இருப்பதும், மற்ற கட்சிகளோ இயக்கங்களோ பேசினால் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்குவதுதான் முற்போக்குதனமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த சம்பவத்தின் காரணமாக பொதுத் தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஓபிஎஸ் எப்படி ஜல்லிக்கட்டு நாயகன்..? அதிமுகவை கலாய்த்த துரைமுருகன்! சட்டசபையில் புஹா ஹா ஹா..!!

0

ஓபிஎஸ் எப்படி ஜல்லிக்கட்டு நாயகன்..? அதிமுகவை கலாய்த்த துரைமுருகன்! சட்டசபையில் புஹா ஹா ஹா..!!

இன்றைய சட்டசபை விவாத நேரத்தில் ஜல்லிகட்டு குறித்து திமுகவின் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதனால் சபையில் பலத்தை சிரிப்பலை எழுந்தது. இந்த கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலை கூறினார்.

கேள்வி நேரத்தில் துரைமுருகன் பேசுகையில்; ஓபிஎஸ்ஸை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அடிக்கடி கூறுகிறீர்களே, அவர் எந்த ஜல்லிக்கட்டுக்கு போனார்..? எங்கே மாடு பிடித்தார்..? என்று கேள்வி எழுப்பினார்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அங்கு ஓபிஎஸ் மாடி பிடித்தால் நாங்கள் வந்து பார்ப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

இதனால் சபையில் பலத்தை சிரிப்பலை தோன்றியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்;

துணை முதல்வர் ஓபிஎஸ் 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்காக டெல்லி வரை சென்று, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அவரை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறோம் என்று கூறிவிட்டு,

தற்போது புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடக்கிறது, துரைமுருகன் அவர்கள் அங்கு வந்தால் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம். அவர் களத்தில் இறங்கி மாடுபிடித்தாலும் அதற்கும் ஏற்பாடு செய்கிறோம்’ என்று விஜயபாஸ்கர் கூறினார்.

இதனால் சட்டசபையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது. திமுக அதிமுகவை கலாய்த்தாலும் பதிலுக்கு அதிமுக திமுகவை சரியான நேரத்தில் கலாய்த்துவிட்டது என்பதே உண்மை.

அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராக ஊராட்சி தலைவர்கள் தீர்மானம் – நடந்தது என்ன?

0

அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராக ஊராட்சி தலைவர்கள் தீர்மானம் – நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தில் இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அதில் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு 38 ஊராட்சிகள் உள்ளன.

இதில் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தலில் 25 ஊராட்சிமன்ற தலைவர் இடங்களை திமுக சார்ந்தவர்களும் 13 இடங்களை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் பிடித்துள்ளன.

கடந்த பிப்ரவரி 14 ஆம் நாள் இந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டமைப்பின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் S.S.அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர்.இராமச்சந்திரன் அவர்கள் தன்னிச்சையாக சரவணன் என்பவரை ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராக அறிவித்துள்ளார்.

38 ஊராட்சி மன்ற தலைவர்களில் 13 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றுவிட்டு தற்போது அமைச்சர் தன்னிச்சையாக ஒரு நபரை நியமிப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்று கூறி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் அவர்கள் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அதிமுக ஒன்றிய செயளாலர் அரசு வாகனத்தை தவறுதலாக பயன்படுத்தி வந்தது குறித்து மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது.