15-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்க படுகிறது சுனாமியால் இறந்த மீனவர்களுக்கு அவரது உறவினர்கள் மெழுகுபத்தி ஏந்தியும் கடற்கரையில் பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். சுனாமி நினைவு கல்வெட்டினையும் திறந்து வைத்தார். பின்னர் படகில் கடலுக்குள் சென்று மலர் தூவினார்.
அப்போது அமைச்சர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு தேவையான நிதியை பெற்று மக்களுக்கு சேவை செய்து வருவது நமது அ.தி.மு.க. அரசுதான் என்றும்.
மற்ற மாநிலங்களை விட மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெறுவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.
மத்தியிலும் மாநிலத்திலும் 13 ஆண்டுகளாக காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்தது. ஆனால் மக்களுக்கு ஒரு திட்டமும் செய்யவில்லை என கூறினார்.
தேர்தல் வந்தாலே தி.மு.க.வுக்கு பயத்தில் ஜூரம் வந்துவிடும். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பட்டை நாமமும் போடுவது காலம் காலமாக தி.மு.க. வின் வழக்கம் என கூறினார்.
பாத்ரூமில் வழுக்கி விழுந்த பிரேசில் அதிபர்: முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் பரபரப்பு!
பிரேசில் அதிபர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கடந்த சில நாட்களுக்கு முந்தைய நினைவுகளை மறந்து விட்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ என்பவர் தனது குளியல் அறைக்குச் சென்றபோது அங்கு எதிர்பாராத விதமாக விழுந்துவிட்டார். இதனால் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சுமார் 10 மணி நேரம் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்தாலும் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முந்தைய நினைவுகள் மறந்து விட்டதாகவும் பின்னந்தலையில் அடி பட்டதால் தான் இந்த பிரச்சனை அவருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவரது நினைவுகள் மீட்கப்பட தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் குணமாகி விடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியான சிகிச்சையின் காரணமாக அவர் தற்போது முழு குணம் அடைந்து விட்டதாகவும், அவருக்கு தற்போது அனைத்து நினைவுகளும் திரும்ப வந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அதிபர் ஜெயீர் போல்சனரோவும் பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கடவுளுக்கும் நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது பிரேசில் அதிபர் முழு அளவில் குணம் ஆகிவிட்டதால் மீண்டும் அதிபர் பணியை கவனிக்க தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புமணி பற்றி பொய் செய்தி வெளீயிட்ட பிரபல நாளிதழ்! திமுகவின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய கே பாலு
“டைம்ஸ் அலுவலக நிகழ்வு குறித்த புகார் அப்பட்டமான பொய்” கொலைகார கட்சி திமுகவுக்கு இதுபற்றி பேச தகுதியில்லை என பாமக வழக்கறிஞர் கே.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி குறித்து செய்தி வெளியிட்டதற்காக பா.ம.க. செய்தித்தொடர்பாளர் வினோபா பூபதி தலைமையில் பா.ம.க.வினர் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் அலுவலகத்திற்கு சென்று வன்முறையில் ஈடுபட்டதாக திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். சில பத்திரிகையாளர் அமைப்புகளும் உண்மையறியாமல் இதே புகாரை கூறியிருக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்டவை ஆகும். இவை ஜமுக்காளத்தில் வடிகட்டிய அப்பட்டமான பொய் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
25.12.2019 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ஆறாவது பக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் நாடாளுமன்ற வருகைப்பதிவு குறித்து Anbumani Ramadoss has worst attendance among TN MPs என்ற தலைப்பில் தவறான, ஒருதலைப்பட்சமான செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மாநிலங்களவையில் கடந்த இரு கூட்டத்தொடர்களில் இரு விவாதங்களில் மட்டுமே கலந்து கொண்டார் என்றும், ஒரு வினா கூட எழுப்பவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த விவரங்கள் அனைத்தும் நாடாளுமன்ற மாநிலங்களவையின் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த விவரங்கள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.
மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் மட்டும் புவிவெப்பமயமாதல், காவிரி – கோதாவரி இணைப்பு, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, உயர்கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகிய நான்கு முக்கிய பிரச்சினைகள் குறித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசியுள்ளார். மருத்துவர் அன்புமணி எழுப்பிய சில பிரச்சினைகளுக்காக அவரை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் பாராட்டியதுடன், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை என்ற அவரது கோரிக்கையை கவனத்தில் கொள்ளும்படி மத்திய அரசுக்கும் பரிந்துரைத்தார். அதுமட்டுமின்றி, 10 வினாக்களை அவர் எழுப்பியுள்ளார்.
அவற்றில் 4 வினாக்களுக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, கூட்டத்தொடர் முடிவடைந்து விட்டதால் மீதமுள்ள வினாக்களுக்கு விடையளிக்க முடியவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது. இவ்விவரங்கள் மாநிலங்களவை இணையதளத்தில் உள்ளன. ஆனால், உண்மைகளை மறைத்து விட்டு, பொய்யான தகவல்களை அந்த செய்தியில் பி.சிவக்குமார் என்ற செய்தியாளர் அளித்துள்ளார்.
ஊடக அறத்தை பாதுகாப்பதற்காக இந்திய பிரஸ் கவுன்சில் வகுத்துள்ள 42 நடத்தை விதிகளில் இரண்டாவது விதியின்படி, ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பாக அந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து சரிபார்க்க வேண்டும்; அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி அவர்களின் கருத்து என்ன? என்பதை கேட்டறிந்து வெளியிட வேண்டும். ஆனால், இவற்றை செய்தியாளர் பி.சிவக்குமார் செய்யவில்லை. கடந்த காலங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடவில்லை என்று பொய்யான செய்தி ஒன்றை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்தது. இப்போதும் அதே போன்று பொய்யான செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டிருப்பதால் அதன் பின்னணியில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம் என பா.ம.க. சந்தேகிக்கிறது.
அதனால், இதுகுறித்த உண்மை நிலையை விளக்கும் நோக்கத்துடன் செய்தியாளரை பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராகிய வினோபா பூபதி நேற்று காலை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அந்த செய்தியாளர் செல்பேசி அழைப்புகளை ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதைக் கேட்ட ஜெயா மேனன், மருத்துவர் அன்புமணி இராமதாசின் மாநிலங்களவை செயல்பாடுகள் குறித்த விவரங்களுடன் தம்மை பிற்பகல் 2.30 மணிக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் சந்திக்கும்படி கூறியுள்ளார். அவரது அழைப்பின்படியே செய்தித்தொடர்பாளர் வினோபா, பா.ம.க. நிர்வாகி கோபால் ஆகிய இருவரும் ஜெயா மேனனை அவரது அலுவலகத்தில் சந்தித்து உண்மை நிலவரத்தை விளக்கியுள்ளனர். அப்போது செய்தியாளர் பி. சிவக்குமாரும் உடன் இருந்திருக்கிறார்.
நாடாளுமன்ற இணையதளங்களில் இருந்து தான் மருத்துவர் அன்புமணி இராமதாசின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை எடுத்ததாக செய்தியில் செய்தியாளர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நாடாளுமன்ற இணையதளங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய பிரச்சினைகள், வினாக்கள் ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதை ஆதாரங்களுடன் வினோபா பூபதி எடுத்துக்காட்டியதும் உடனடியாக தமது நிலையை மாற்றிக்கொண்ட அந்த செய்தியாளர், ஒரு தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தான் இத்தகவல்களை எடுத்து வெளியிட்டதாகக் கூறினார். அவர் எழுதிய செய்தி பொய்யானது என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை. இதுதொடர்பாக ஜெயாமேனன், சிவக்குமார் ஆகியோருக்கும் வினோபா பூபதிக்கும் இடையே விவாதம் நடந்து கொண்டிருந்த போது, ஜெயாமேனனின் அறைக்குள் வந்த நாளிதழ் ஊழியர்கள் சிலர் வினோபா பூபதியை மிரட்டியதுடன், முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். அப்போது அவர்களை எச்சரித்த ஜெயாமேனன் அறையிலிருந்து வெளியேறும்படி ஆணையிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தங்களின் செய்தியாளர் தரப்பில் தவறு இருப்பதாகவும், பா.ம.க. தரப்பில் விளக்கச் செய்தி கொடுத்தால் அதை விதிகளுக்கு உட்பட்டு பிரசுரிப்பதாகவும் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து வினோபா பூபதியும், கோபாலும் அவருக்கு நன்றி கூறி திரும்பினர். இதைத் தவிர டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் வேறு எதுவும் நடைபெறவில்லை.
அவ்வாறு இருக்கும் போது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், அங்கிருந்த பொருட்களை வாரி இறைத்து கலவரம் செய்ததாகவும், ஊழியர்களை மிரட்டியதாகவும் திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனும், சில பத்திரிகை அமைப்புகளின் நிர்வாகிகளும் எங்கிருந்து கண்டுபிடித்தனர் என்பது தெரியவில்லை.
இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனன் அவர்களும், வினோபா பூபதி அவர்களும் தான். இவர்கள் இருவரும் சொல்லாத ஒன்றை மற்ற அனைவரும் எப்படி துப்பறிந்தனர்?
டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்குள் பாட்டாளி மக்கள் கட்சியினர் நுழைந்திருந்தால் அங்கு இருந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுத்திருந்திருக்கலாம்; ஜெயா மேனன் அறையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையில் புகார் செய்திருக்கலாம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அதற்கும் மேலாக இந்த நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களில் சில பத்திரிகை அமைப்புகளின் பெயர்களின் வெளியாகியுள்ள செய்திகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று அந்த நாளிதழின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஜெயாமேனன் பா.ம.க.வுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார்.
இவ்வளவுக்குப் பிறகும் நடக்காத ஒன்றை வைத்து பா.ம.க மீது பழிசுமத்துவோரின் நெஞ்சம் முழுவதும் நஞ்சும், வஞ்சமும் நிறைந்துள்ளன என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஊடக அறம் குறித்தும் தெரியும்; ஊடகத்தினரை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பது குறித்தும் நன்றாகத் தெரியும். ஊடக அறம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பலமுறை பயிலரங்குகளை பா.ம.க. நடத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நிழல்நிதிநிலை அறிக்கை தயாரித்து வெளியிடும்போதும், 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிட்ட போதும் பத்திரிகையாளர் நலனுக்காக உண்மையாக செயல்படும் பத்திரிகையாளர் அமைப்புகளை அழைத்து ஆலோசனைகளை பெற்று பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர் உரிமைகளுக்காக அதிகமாக குரல் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான்.
உண்மை இவ்வாறு இருக்க ஊடக அறம், பத்திரிகையாளர் சுதந்திரம் குறித்த விஷயத்தில் திமுகவோ, இல்லாத பத்திரிகையில் எழுதாத சிலர் தங்களின் செயல்களுக்கு கேடயமாக நடத்தும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ பா.ம.க.வுக்கு பாடம் நடத்த வேண்டியதில்லை; அதற்கு அவர்களுக்கு தகுதியுமில்லை.
திமுகவையும், ஊடகங்களையும் இணைத்துப் பார்த்தால் முதலில் நினைவுக்கு வருவது என்ன? மதுரை தினகரன் அலுவலகம் கொழுந்து விட்டு எரியும் காட்சியும், அதில் பணியாற்றிய அப்பாவிகள் மூவர் உடல் கருகி உயிரிழந்த காட்சியும் தானே. குடும்பத் தகராறில் தினகரன் அலுவலகத்தை எரித்து, 3 தொழிலாளர்களை சாம்பலாக்கிய திமுகவின் முதன்மைக் குடும்பம், குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு அதிகார சுகத்தை பங்கிட்டுக் கொள்வதற்காக ‘‘இதயம் இனித்தது; கண்கள் பனித்தன’’ என்று கூறி கை குலுக்கிக் கொண்டன. ஆனால், அவர்களால் கொல்லப்பட்ட மூவரின் குடும்பங்கள் வாழ்வதற்கு வக்கற்று கிடக்கின்றனவே…. அந்தக் குடும்பங்களை திமுக தலைமை கண்டு கொண்டதா? இப்படிப்பட்ட மாபாதகர்களுக்கு பத்திரிகையாளர்கள் நலன் குறித்து பேசுவதற்கு அருகதையுண்டா?
2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. அதற்கு பொறுப்பேற்று திமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து மு.க.ஸ்டாலின் விலகி விட்டதாக செய்திகள் வெளியாகின. அது குறித்து மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்று திமுகவின் முன்னணி நிர்வாகிகளிடம் பேட்டி கேட்டதற்காக டைம்ஸ் நவ் இதழின் செய்தியாளர் சபீர் அகமது என்பவரை திமுக குண்டர்கள் துரத்தி துரத்தி தாக்கினார்களே? காவல்துறையினர் மட்டும் தங்கள் வாகனத்தில் அவரை ஏற்றிச் செல்லவில்லை என்றால் அங்கு அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பாரே?
அந்தத் தாக்குதலில் ஒளிப்பதிவாளர் ஜெயப்பிரகாஷ், புகைப்படக்காரர் டேனியல், புதிய தலைமுறை செய்தியாளர் கார்த்திகேயன் ஆகியோரும் தாக்கப்பட்டார்களே? செய்தியாளர்களின் காமிராக்களை திமுக குண்டர்கள் உடைத்து சேதப்படுத்தினார்களே? அப்போதும் ஆத்திரம் தீராமல் டைம்ஸ் நவ் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்கு திமுக குண்டர்கள் சென்று அங்குள்ளவர்களை மிரட்டினார்களே? அது தொடர்பாக திமுக குண்டர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்களே? தாக்கப்பட்டவர்களில் சிலரை வேண்டுமானால் திமுக விலைக்கு வாங்கியிருக்கலாம்; ஆனால், பத்திரிகையாளர்களுக்கு எதிரான திமுகவின் வன்முறை வெறியாட்டத்தை மறைக்க முடியுமா?
1968-ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்த போது ஜவகரிஸ்ட் என்ற பத்திரிகையின் ஆசிரியரும், நேர்மையாளருமான என்.கே.டி சுப்பிரமணியம் என்பவரை கலைஞர் கைது செய்து சிறையில் அடைத்தது குறித்தும், அதன் பின்னணி குறித்தும் கூறினால் அது அருவருக்கத்தக்கதாக இருக்கும். திமுகவால் பழிவாங்கப்பட்ட, பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பட்டியல் மிகவும் நீண்டது.
அதுமட்டுமா?… 2009 தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்காக இயக்குனர் பாரதிராஜா அலுவலகத்தை தங்கள் கூட்டாளிகளை அனுப்பித் தாக்கியது, ஓசியில் பிரியாணி தர மறுத்ததற்காக உணவு விடுதியை அடித்து நொறுக்கியது, பெரம்பலூரில் அழகு நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணை வயிற்றில் எட்டி உதைத்து காயப்படுத்தியது, வீட்டு வேலைக்கு வந்த ஏழைப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததற்காக பெரம்பலூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது,
செல்பேசி கடையை தாக்கியது, மாமூல் தர மறுத்ததற்காக தெருவோரத்தில் வணிகம் செய்யும் மூதாட்டியை தாக்கியது, பஜ்ஜி கடையை தாக்கியது என திமுகவின் வன்முறைகளை பட்டியலிட்டால் இந்த அறிக்கையில் பக்கங்கள் போதாது.
வன்முறைகள் மற்றும் கொலைகார கட்சியான திமுக பத்திரிகையாளர்கள் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு முன் அதன் முதுகில் உள்ள அழுக்கு மூட்டைகளை அகற்றிக் கொள்வது தான் அறமாக இருக்கும்.
ஒரு செய்தியை எழுதுவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை ஊடகங்கள் ஒருமுறைக்கு பத்து முறை ஆராய வேண்டும். ஊடகத்துறையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடக அமைப்புகள் ஒரு கட்சி மீது புகார் கூறும் போது இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். மனம் போன போக்கில் அவதூறு பரப்புவதை தவிர்க்க வேண்டும்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் வன்முறை செய்ததாக பா.ம.க. மீது அவதூறு பரப்பிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் அதற்காக மன்னிப்பு கோர வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கோரா விட்டால் அவர்கள் மீது அவதூறு வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் அடுத்த ஆண்டு உடன் (2020)டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவைத்துள்ளார்.46 வயதான லியாண்டர் பேஸ் 28 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் விளையாடி வருகிறார் இதுவரை 18 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி மகேஷ் பூபதியுடன் இணைந்து பல வெற்றிகளை குவித்துள்ளார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த இணை பிரிந்தது.
மேலும் 7 ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே இந்தியர் ஆவார் 1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தந்தார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகளை குவித்த பெருமையும் இவருக்கு உள்ளது.மேலும் இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்
நான் 2020 ஆம் ஆண்டு சீசன் ஆவலுடன் எதிர்பார்த்து எதிர்நோக்கி உள்ளேன். எனது அணியினருடன் பயணித்த சில குறிப்பிட்ட தொடர்களை தேர்வு செய்து விளையாடுவேன் உலகம் முழுவதும் எனது நண்பர்கள் ரசிகர்களுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடும் இந்த ஆண்டு எனக்கு உணர்வுபூர்வமாக இருக்கும் உங்களுக்கு நன்றி சொல்லும் ஆண்டாக இதை எடுத்துக் கொள்வேன் என்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரராக இருந்த பேஸ் தற்போது இரட்டையர் தரவரிசையில் 105 இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை! சிங்கள இனவெறியின் உச்சம் என இராமதாஸ் கண்டனம்
இலங்கையில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் அந்த நாட்டின் 72-ஆவது விடுதலை நாள் விழாவில், தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் இசைக்கப்படாது என்று கோத்தபாய இராஜபக்சே அரசு அறிவித்திருக்கிறது. இது இலங்கையில் வாழும் தமிழர்களை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிரானது ஆகும்.
‘‘ஸ்ரீலங்காத் தாயே’’ என்று தொடங்கும் இலங்கை தேசிய கீதத்தின் தமிழ் வடிவத்திற்கு அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இதற்காக அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது அட்டவணையில் தமிழ் வடிவ தேசிய கீதம் சேர்க்கப்பட்டிருக்கிறது. அத்தகைய தேசிய கீதம் இலங்கையின் விடுதலை நாள் விழாவில் இசைக்கப்படாது என்பது அந்நாட்டு ஆட்சியாளர்களின் சிங்கள இனவெறியை வெளிப்படுத்தும் செயலாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பல மொழிகள் பேசப்பட்டாலும் ஒற்றை மொழியில் தான் தேசிய கீதம் இசைக்கப்படுவதாகவும், அதே வழக்கத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் தான் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நிறுத்தப்படுவதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. இது அபத்தமான வாதம் ஆகும். உலகில் பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, கனடா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் அங்கு பேசப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் தேசியகீதம் இசைக்கப் படுகிறது. அதேபோல், சிங்கப்பூரில் 75% சீனர்கள் வாழும் போதிலும் சீன மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில்லை; மாறாக, சிறுபான்மை மொழியான மலாய் மொழியில் தான் இசைக்கப்படுகிறது.
இந்தியாவிலும் தேசிய கீதம் பெரும்பான்மை மொழியான இந்தியில் இசைக்கப்படுவதில்லை; மாறாக சிறுபான்மை வங்க மொழியில் தான் இசைக்கப்படுகிறது. இவற்றைக் கடந்து நாட்டை ஒருங்கிணைக்கும் கருவியாக தமிழ் தேசிய கீதம் கருதப்படும் நிலையில், அதை நீக்குவது இனவெறியின் உச்சமாகும்.
1948-ஆம் ஆண்டு இலங்கை விடுதலை அடைந்த நிலையில், 1949-ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது விடுதலை நாள் விழாவில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழிலும், சிங்களர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களத்திலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. 2009-ஆம் ஆண்டு இலங்கைப் போர் முடிவடைந்த பிறகு 2011-ஆம் ஆண்டு முதல் இலங்கையில் எந்தப் பகுதியில் நடைபெறும் விடுதலை நாள் விழாவாக இருந்தாலும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது என்று 2010-ஆம் ஆண்டு மகிந்த இராஜபக்சே அரசு அதிகாரப்பூர்வமற்ற வகையில் அறிவித்தது. அதன்பின் 5 ஆண்டுகள் நீடித்த தடை, தமிழர் கட்சிகளின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேனா அரசு பதவியேற்றவுடன் அகற்றப்பட்டது. 2016-ஆம் ஆண்டு நடந்த விடுதலை நாள் விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தமிழ் தேசிய கீதத்திற்கான தடையை அகற்றிய சிறிசேனா இலங்கையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இது தமிழர்களை சமாதானப்படுத்துவதற்கான முயற்சி என்றும் கூறியிருந்தார். இலங்கையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்குடன் முந்தைய அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை இன்றைய அரசு ரத்து செய்கிறது என்றால், தங்களுக்கு வாக்களித்த பெரும்பான்மை சிங்களர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக சிறுபான்மை தமிழர்களை பல வழிகளில் அவமதிக்கவும், கொடுமைப்படுத்தவும் கோத்தபாய அரசு தயாராகிவிட்டது என்பது தான் பொருளாகும்.
இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற பிறகு பல்வேறு தருணங்களில் தமது அரசின் கொள்கைகள் குறித்து பேசிய அதிபர் கோத்தபாய, இலங்கையில் பெரும்பான்மை சிங்களர்களின் விருப்பங்களுக்கு மாறாக தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறார். இந்தியா- இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் செய்யப்பட்ட 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுடன், தமிழும் இலங்கையின் தேசிய, அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். ஆனால், தமிழில் தேசிய கீதம் பாட தடை விதித்திருப்பதன் மூலம், 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை மதிக்க மாட்டோம் என்று இலங்கை சொல்லாமல் சொல்லியிருக்கிறது. ஏற்கனவே, தமிழர்கள் இலங்கையில் மூன்றாம் தர குடிமக்களாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும், போர்ப்படைத் தளபதி சரத் பொன்சேகாவும் கூறியிருந்தனர். இவற்றை வைத்து பார்க்கும் போது இலங்கையில் சிங்களர்களுடன் இணைந்து தமிழர்கள் கண்ணியமாக வாழ்வதற்கு சிறிதும் வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.
இத்தகைய சூழலில் தமிழர்கள் அவர்களின் தாயகமான ஈழத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்கு வகை செய்வது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடமையும், பொறுப்பும் ஆகும். எனவே, ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தமிழீழம் அமைத்துத் தர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வர வேண்டும்.
முன்னாள்
பிரதமர் வாஜ்பாய், உடல் நலக்குறைவு காரணமாக
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை
பலனின்றி காலமானார். அவரது பிறந்த டிசம்பர்
25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில்
உள்ள தலைமை செயலகமான லோக்
பவனில் அவரது பிரம்மாண்ட சிலை
அமைக்கப்பட்டுள்ளது. ரூ.89.6 லட்சம் மதிப்பில்
வாஜ்பாய்க்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச்
சிலையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி
ராஜ் குமார் பண்டிட் வடிவமைத்துள்ளார்.
வாஜ்பாயின்
95ஆவது பிறந்த தினத்தையொட்டி லக்னோவில்
உள்ள தலைமை செயலகமான லோக்
பவனில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை பிரதமர்
மோடி திறந்து வைத்தார். இந்த
நிகழ்சியில் உத்தரப் பிரதேச முதல்வர்
யோகி ஆதித்யநாத், ஆளுநர் அனந்தி பென்
பாட்டீல், மத்திய அமைச்சர் ராஜ்நாத்
சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிலை திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து
அடல் பிகாரி மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு
அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமர்
மோடி பேசியதாவது, “எப்போது பேச வேண்டும்,
எப்போது அமைதி காக்க வேண்டும்
என்பதை நன்கு அறிந்தவர் வாஜ்பாய்.
அவரது பேச்சைவிட அவரது அமைதி சக்தி
வாய்ந்தது. நாட்டில் மிக நீண்ட காலமாக
நிறைவேற்றப்படாமல் இழுபறியில் இருந்த சில முக்கிய
விஷயங்கள் அமைதியான முறையில் நிறைவேற்றுபட்டு வருகின்றன. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு
அந்தஸ்து வழங்கிய 370ஆவது பிரிவு, ராமர்
கோயில் பிரச்சினைகள் சுமூகமாக முடிக்கப்பட்டன. அதேபோல் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான்,
வங்கதேசத்தில் இருந்து வந்த அகதிகளுக்கு
குடியுரிமை வழங்கும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. 130 கோடி இந்தியர்களும் நம்பிக்கையுடன்
இத்தகைய சவால்களுக்கான தீர்வை கண்டுள்ளனர். ஆனால்
இதை புரிந்துகொள்ளாமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அடுத்த தலைமுறையினருக்கு சொந்தமான
சொத்துக்களை அடித்து நொறுக்குகின்றனர்.
அத்துடன்
போரட்டம் என்ற பெயரில் வன்முறையில்
ஈடுபடுட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம்
விழைவிப்போர் வீட்டில் அமைதியாக அமர்ந்து
யோசிக்க வேண்டும், தங்களது செயல் சரியா தவறா என்று தங்களை
சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”
எனவும்
பிரதமர் மோடி அப்போது வலியுறுத்தினார்.
’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட கூறமுடியாது: ஆண்ட்ரியா பேட்டி
’தளபதி 64’ படம் குறித்து ஒரு வார்த்தை கூட தன்னால் கூற முடியாது என்றும் அதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்திருந்த போதிலும் முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார். இவர் தான் படம் முழுவதும் விஜய்க்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு நடத்தி வருவதாகவும் அவர் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாளவிகா மோகனனை விட ஆண்ட்ரியா தான் அதிக நாட்களில் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை ஆண்ட்ரியா ’தளபதி 64’ படம் குறித்து கூறுமாறு கேட்ட போது ’இந்த படம் குறித்தும், இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் கொடுத்து ஒரு வார்த்தை கூட தன்னால் கூற முடியாது என்றும் அதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.
மேலும் இதுவரை நடித்திராத ஒரு முக்கியமான கேரக்டரில் இந்த படத்தில் நடித்து இருப்பதாகவும் விஜய்யுடன் தன்னை ஸ்கிரீனில் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியம் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அதே போல் விஜய்யுடன் நடித்தபோது தான் அவருடைய எளிமை, அவருடைய குணம், அவருக்கு ஏன் இத்தனை கோடி ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் தனக்கு புரிந்ததாகவும் அவர் தன்னுடைய பேட்ட்யில் தெரிவித்தார்.
அரசியல்
முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நில
வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 9-ஆம்
தேதி தீா்ப்பளித்தது. அங்கு சா்ச்சைக்குள்ளாகியிருந்த 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா்
கோயில் கட்ட அனுமதி வழங்கிய
உச்சநீதிமன்றம், இதற்காக 3 மாதங்களுக்குள் ஓா் அறக்கட்டளையை ஏற்படுத்த
மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும்,
முஸ்லிம் தரப்பினா் புதிதாக மசூதி கட்டிக்கொள்வதற்கு
அயோத்தி நகரிலேயே 5 ஏக்கா் நிலத்தை ஒதுக்க
வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
மறுஆய்வு மனுக்கள் அனைத்தும் கடந்த 12-ஆம் தேதி தள்ளுபடி
செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் இறுதி வாய்ப்பாக, சீராய்வு
மனு தாக்கல் செய்வது மட்டுமே
உள்ளது.
இதனிடையே,
கடந்த 16-ஆம் தேதி ஜார்கண்டில்
பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா்
அமித் ஷா, ‘அயோத்தியில் 4 மாதங்களுக்குள்
பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டப்படும்’
என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதுபோன்ற சூழலில், அயோத்தியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக
உளவுத் துறை எச்சரித்துள்ளது.
ஜம்மு
– காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு,
அண்டை நாடான, பாக்., எதிர்ப்பு
தெரிவித்து வருகிறது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால்,
எவ்வித தாக்குதலிலும், பாக்., ராணுவமோ, அதன்
ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகளோ
மேற்கொள்ள முடியவில்லை. சமீபத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
‘இது முஸ்லிம்களுக்கு எதிரானது’ என, காங்., உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன.இந்த
சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள்
நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஹிந்து, முஸ்லிம் இடையே
பிரச்னையை ஏற்படுத்தும் வகையில், அண்டை நாடான, பாக்.,
சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அயோத்தியில், ராம ஜென்ம பூமி
இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.பாக்.,
அரசின் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ்
– இ – முகமது பயங்கரவாத அமைப்பு,
இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தியில்
தாக்குதல் நடத்தும்படி, தன் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு,
சமூக வலைதளத்தில், ஜெய்ஷ் – இ – முகமது தலைவர்
மசூத் அசார் உத்தரவிட்டுள்ளார். இந்தத்
தகவல், நமது உளவு அமைப்புகளுக்கு
கிடைத்துள்ளது.அதையடுத்து, அயோத்தி உள்ளிட்ட இடங்களில்
பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில்
உள்ள இந்திய துாதரகங்களை தாக்க,
பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து உளவு
அமைப்புகள் கூறியுள்ள தாவது:ஆப்கானிஸ்தானின் காபூலில்
இந்திய துாதரகம் மீது தாக்குதல் நடத்த,
பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ஆப்கானிஸ்தானில் உள்ள சில பயங்கரவாதிகளுக்கு
பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகள்
நிரப்பிய கார் மூலம் தாக்குதல்
நடத்தப்படலாம் என, தெரிகிறது. லஷ்கர்
– இ – தொய்பா உட்பட பல
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய, லாகூரைச் சேர்ந்த சயிபுல்லா என்ற
பயங்கரவாதியிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.காபூலைத் தவிர, ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்
மற்றும் ஹெராத்தில் உள்ள இந்திய துாதரகங்களை
தாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, உளவு அமைப்புகள் கூறியுள்ளன.
சூரியன், நிலவு, பூமி என மூன்றும் ஒரே நேர் கோட்டிற்கு வருகின்றன. இதனால் சூரிய வெளிச்சத்தை சில மணி நேரம் நிலவு மறைக்கும். சூரியனை முழுவதுமாக நிலவு மறைப்பதால் முழு சூரிய கிரகணம் என படுகிறது.
சூரியனை நிலா முழுமையாக மறைத்தால் அது முழு சூரியனின் மையப் பகுதியை மட்டும் சந்திரன் மறைத்து விளிம்பில் வளையம் போல விழுகிறபோது அது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வு இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கிய இந்த கிரகணம் 11.16 வரை தெரியும் மக்கள் வெறும் கண்களில் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக, மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் செய்துள்ளது. சென்னையில் பிர்லா கோளரங்கம் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதிகளுக்கு ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று, சூரிய கண்ணாடி மூலமாக கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.
இதற்கு பிறகு 2031 ஆம் ஆண்டு தான் தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தேனியில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
முன்னாள்
முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5’ம் தேதி
மரணமடைந்தார் . அவரது மறைவிற்கு பின்
அவரது தோழியான சசிகலா பிப்ரவரி
மாதம் சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டு
கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சசிகலா குடும்பத்தினர், உறவினர்களின்
வீடுகள், அலுவலகங்கள் உட்பட, அவருக்கு தொடர்புடைய, 187 இடங்களில் வருமான வரித் துறையினர்
சோதனை நடத்தினர். இந்த சோதனை, 2017 நவம்பரில் நடந்தது.
அதேபோல,
சென்னை, போயஸ் கார்டனில் உள்ள,
ஜெ., வீட்டில் சோதனை நடந்தபோது, வருமான
வரித் துறை, ஒரு புத்தகத்தை
கைப்பற்றியது. அந்த புத்தகத்தில், பல்வேறு
நிறுவனங்களின் கணக்கு, வழக்குகள் குறித்து
விபரங்கள் இடம் பெற்றிருந்தன.இந்த
சொத்துக்கள் வாங்கியது, பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக
இருப்பது குறித்து, விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு, 2017 அக்.,15ல், வரித்துறை, ‘நோட்டீஸ்’
அனுப்பி இருந்தது. இதற்கு, சசிகலா சிறையில்
இருப்பதால், பதில் அளிக்க அவசாகம்
கேட்டனர்.அதன் பின், சசிகலா
தரப்பு ஆடிட்டர், 2017 டிச., 11ல், நோட்டீசுக்கு
விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை
வருமான வரித்துறையினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
செய்துள்ளனர். இந்த அறிக்கை குறித்த
விபரங்கள், மிக தாமதமாக கசியத்
துவங்கி உள்ளன.
சசிகலா,
1,600 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கியது எப்படி; எங்கெங்கே சொத்துக்கள்
உள்ளன; பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது,
237 கோடி ரூபாய்க்கு, புதிய நோட்டுக்களை சசிகலா
தரப்பினர் மாற்றினர் என்பது போன்ற தகவல்கள்
வெளியாகின. தற்போது, இது தொடர்பான கூடுதல்
விபரங்கள் வெளியாகி உள்ளன.
கோடநாடு
எஸ்டேட், ராயல் வேலி புளோரிடேல்
எக்ஸ்போர்ட், கிரீன் டீ எஸ்டேட்,
ஜெயா பப்ளிக்கேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ், ஜெயா
பார்ம் ஹவுஸ், ஜெயா ஹவுசிங்
டெவலப் மென்ட் ஆகிய நிறுவனங்களில்,
ஜெ.,வும், சசிகலாவும் பங்குதாரராக
இருந்துள்ளனர்.மேலும், இந்தோ தோகா
கெமிக்கல் நிறுவனம், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் ஆகிய நிறுவனங்களில் சசிகலா
பங்குதாரராகவும், ஜாஸ் சினிமாசில், 41.66 லட்சம்
பங்குகளை சசிகலா வைத்துள்ளார். நமது
எம்.ஜி.ஆர்., மற்றும்
ஜெயா பிரிண்டர்ஸ் ஆகியவற்றின் உரிமையாளர் நான் தான் என,
சசிகலா தெரிவித்து உள்ளார்.ஜெ.,வின்
கோடநாடு எஸ்டேட் மற்றும் இதர
நான்கு நிறுவனங்களில் பங்குதாரராக இருந்த சசிகலா, ஜெ.,
இறந்த பின், அந்த நிறுவனங்களின்
பங்குதாரர் உரிமையை கலைத்து, உரிமையாளர்
ஆனார்.
ஜெ., இறந்த பின், உரிமையாளரான
சசிகலா, வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இருந்தாலும், 2016 டிச., 6 முதல், 2017 மார்ச்,
31 வரை, வணிகத்தில் தீவிரம் காட்டவில்லை என,
அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இந்த வகையில்,
ஜெ.,வின் சொத்துக்கள் முழுவதும்
என்னுடையது தான் என, சசிகலா
சொந்தம் கொண்டாட துவங்கி உள்ளார்.
சசிகலா தொடர்பாக தினம் தினம் வெளியாகும்
தகவல்கள் அனைத்தும் உண்மை தான் என்பதால்,
வருமான வரித் துறையும் எந்த
மறுப்பும் தெரிவிக்காமல் உள்ளது. தொடர்ந்து வரும்
தகவல்களால், சசிகலா தரப்பினர் கலக்கம்
அடைந்து உள்ளனர்.