Tuesday, November 19, 2024
Home Blog Page 5068

சென்னை டென்னிஸ் அணியை விலைக்கு வாங்கிய பிரபல நடிகை!

0

சென்னை டென்னிஸ் அணியை விலைக்கு வாங்கிய பிரபல நடிகை!

கிரிக்கெட்டுக்கு ஒரு ஐபிஎல், கால்பந்துக்கு ஒரு ஐ.எஸ்.எல் போல் டென்னிஸ் விளையாட்டுக்கு டென்னிஸ் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது

இதில் ‘சென்னை ஸ்டாலியன்ஸ்’ என்ற அணியை பிரபல நடிகை ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளார். மணிரத்தினம் இயக்கிய ’காற்று வெளியிடை’, ’செக்கச் சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை அதிதி ராவ் ஹைத்ரி சென்னை டென்னிஸ் அணியை வாங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளது.

தனக்கு டென்னிஸ் வீராங்கனையாக வேண்டும் என்று சிறு வயதில் கனவு இருந்ததாகவும், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நடிகையாகிவிட்டதாகவும், இதனையடுத்து தற்போது டென்னிஸ் வீரர்களுக்கு உதவும் வகையில் சென்னை டென்னிஸ் அணியை விலைக்கு வாங்கியிருப்பதாகவும் பேட்டி ஒன்றில் அதிதி ராவ் ஹைத்ரி தெரிவித்துள்ளார்.

நடிகை அதிதி ராவ் ஹைத்ரி தற்போது தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் ’சைக்கோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக அதிதி நடித்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ’துக்ளக் தர்பார்’ என்ற படத்தில் அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தல் தோல்வி பயம்! உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்திற்கு ஓடிய ஸ்டாலின்

0

இடைத்தேர்தல் தோல்வி பயம்! உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்திற்கு ஓடிய ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் கட்சி சாராத உள்ளூர் பிரமுகர்களும் உள்ளாட்சி அமைப்புகளில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.

இத்தகைய சூழ்நிலையில் ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, உச்சநீதிமன்றத்தின் கடுமையான விமர்சனம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் தடை வாங்க உச்சநீதிமன்றம் சென்றுள்ளது திமுக. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய தமிழக அரசு மற்றும் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பணிகளை நிறைவு செய்த பின்னரே தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும் என்றும் அதுவரையும் தேர்தல் தேதியை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளது திமுக.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரமாண்ட வெற்றிபெற்ற திமுகவும் அதன் கூட்டணியும் உள்ளாட்சித் தேர்தலில் களம் காண்பதற்கு தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. ஏனெனில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கொடுத்த கவர்ச்சி வாக்குறுதிகளை நம்பி இந்தியாவிலேயே தமிழகம்தான் ஏமாந்தது,. மற்ற மாநிலங்கள் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழகத்தில் ஊடகங்கள் அனைத்தும் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மோடி மற்றும் பிஜேபியின் எதிர்ப்பு என்ற மாயையை மக்களிடம் திணித்தனர். மக்களை சிந்திக்க விடாமல் செய்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை தோல்வி அடையச் செய்தனர்,. லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவும் காங்கிரசும் வெற்றி பெற்றது. அந்த அளவிற்கு மோடி எதிர்ப்பு மாயையை தமிழகத்திற்குள் கொண்டுவந்தது ஊடகங்கள்.

மோடியை எதிர்த்து வென்ற இந்தியாவிலேயே மிகச் சிறந்த தலைவர் என்று முக.ஸ்டாலினை சித்தரித்து தமிழக ஊடகங்கள் பெரிதாக கொண்டாடினர். காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாத காரணத்தால் திமுக கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது,. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி களிப்பில் இருந்த திமுகவை அடுத்த இடைத்தேர்தலில் கதிகலங்க செய்துவிட்டது அதிமுக,பாமக,பாஜக,தேமுதிக கூட்டணி.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலின் சூறாவளியாக பிரச்சாரம் செய்தும் இடைத்தேர்தலில் அதிமுக கம்பீரமான வெற்றியை ருசித்தது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் அதிர்ச்சிக்கு உள்ளானார். நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகள் கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற மு.க.ஸ்டாலினுக்கு சங்கடமான நிலைக்கு தள்ளியது.

இடைத்தேர்தல் வெற்றி மூலம் அதிமுக உற்சாகமாக உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க உள்ளது, அதனுடன் பாமக,தேமுதிக,பாஜக போன்ற பிரதான கட்சிகளும் அதிமுக தலைமையில் போட்டியிடப் போவது உறுதியாகத் தெரிகிறது. கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கேட்டு நெருக்கடி கொடுக்கும் என்பதால் மறைமுக தேர்தலுக்கு ஆளுநர் மூலம் அவசர சட்டம் பிறப்பித்தது ஆளும் கட்சி,.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை சென்னை மேயராக வெற்றி பெற வைத்து தனது குடும்பத்தின் வாரிசு அரசியலை தனக்கு பின்பும் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற என்னத்திற்கு ஆப்பு வைத்தது அதிமுக. மறைமுகத் தேர்தல் நடந்தால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவும் பல இடங்களில் அதன் கூட்டணி கட்சிகளும் தான் வெற்றி பெறுவார்கள் என்று முக.ஸ்டாலின் நன்கு அறிந்து வைத்துள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடித்துக் கொண்டிருக்கும் திமுக,. உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தால், மீண்டும் எழுந்திருக்க முடியாது என்று உடன்பிறப்புகள் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மு.க ஸ்டாலின் ஆங்காங்கே பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்,. திமுக ஆட்சிக்கு வந்தால் தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று, மக்களின் எண்ண ஓட்டங்களில் நிலை நிறுத்திக் கொண்டால் ஆட்சி அதிகாரத்திற்கு வர உதவியாக இருக்கும் என்று மு.க ஸ்டாலின் கணக்கு,. இதன் காரணமாகவே அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது திமுக,.

நேற்று சென்னையில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனைகளை பெற்றது,. இதில் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது என்பது குறிப்பிடதக்கது. தமிழக மக்கள்தான் சந்திக்கணும் உள்ளாட்சித் தேர்தல் தடைக்கு யார் காரணம் என்று திமுகவா அதிமுகவா?

வேற லெவல் படம்: என்னை நோக்கி பாயும் தோட்டாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்

0

வேற லெவல் படம்: என்னை நோக்கி பாயும் தோட்டாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் ஒருவழியாக இன்று ரிலீஸாகியுள்ளது

இந்தப் படம் முதல் பாதி வரை ரொமான்ஸ், ரொமான்ஸ், ரொமான்ஸ் முற்றிலும் ரொமான்ஸ் என்றும், முதல் பாதிக்கு பின்னர் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் படம் பார்த்தவர்கள் டுவிட்டரில் கருத்து கூறி வருகின்றனர்

கௌதம் மேனனின் வழக்கமான ஸ்டைலில் இந்த படம் உருவாகி இருப்பதாகவும், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட் படம் என்றும் பல விமர்சனங்கள் ட்விட்டரில் கூறி வருகின்றனர்

மேலும் தனுஷின் நடிப்பு, மேகாஆகாஷ் அழகான தோற்றம் ஆகியவை இந்த படத்தின் ப்ளஸ் என்றும் இந்த படம் போல் ஒரு மெல்லிய காதல் காட்சிகள் வேறு எந்த தமிழ் படத்திலும் வந்திருக்கவில்லை என்றும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்

மொத்தத்தில் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் அசுரன் படத்தை அடுத்து மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்மலா தேவி மீண்டும் சிறையில் அடைப்பு !

0

நிர்மலா தேவி மீண்டும் சிறையில் அடைப்பு !

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலா தேவி. தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த இவர், சில மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

மேலும் இவ்வழக்கில் மதுரை பேராசிரியர் முருகன் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 18 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு நிர்மலாதேவி ஆஜராகவில்லை. இதையடுத்து நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுரை சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவியை கைது செய்து பரிமளா முன்னிலையில் ஆஜர்படுத்தினர் பின்னர் மதுரை சிறையில் நிர்மலாதேவி அடைத்தனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி மீண்டும் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை சிபிசிஐடி போலீசார் பாதுகாப்பாக அழைத்து வந்தனர் வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற இரண்டாம் தேதி விசாரணை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மலாதேவி போலீசார் மீண்டும் அழைத்து சென்று மதுரை சிறையில் அடைத்தனர்.

யூடியூப் சேனல்கள் PRESS மற்றும் MEDIA அடையாள அட்டையை பயன்படுத்த தடையா ?

0

யூடியூப் சேனல்கள் PRESS மற்றும் MEDIA அடையாள அட்டையை பயன்படுத்த தடையா ?

யூடியூப் சேனல்கள் PRESS,MEDIA அடையாள அட்டையை பயன்படுத்த தடை என்ற தகவல் உண்மையல்ல!. யூடியூப் சேனல்கள் நடத்துவோர் பிரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என பரவிய செய்திக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை விளக்கமளித்துள்ளது. செய்தி வெளியிடும் சேனல்களில் பணிபுரிபவர்களை செய்தியாளர்களாக அங்கீகரிக்கவோ அவர்களை Press அல்லது Media என்று அறிமுகப்படுத்திக் கொள்வதையோ ஏற்க முடியாது என மத்திய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல் பரவியது.

மேலும் மக்கள் தொடர்பு அமைச்சகமான RNIல் பதிவு செய்துள்ள பத்திரிகை, ஊடகம் மற்றும் ரேடியோ நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே செய்தியாளர்கள் ஊடகம் (Media) என்ற வார்த்தையையும் அடையாள அட்டையையும் பயன்படுத்த முடியும் எனவும் மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை தரப்பு பிரஸ் மீடியா என்ற வரையறைக்குள் யூடியூப் சேனல்கள் சேர்க்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளதாக வெளியான தகவலில் உண்மைத்தன்மை இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

செல்போனை பார்த்து கொண்டே தண்டவாளத்தில் விழுந்த நபர்: வைரலாகும் வீடியோ

0

செல்போனை பார்த்து கொண்டே தண்டவாளத்தில் விழுந்த நபர்: வைரலாகும் வீடியோ

செல்போனை பார்த்துக்கொண்டே பிளாட்பாரத்தில் நடந்து சென்ற ஒருவர், திடீரென தண்டவாளத்தில் விழுந்த பின்னர் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அர்ஜெண்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் ஐரஸ் என்ற பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஒருவர் செல்போனை பார்த்து கொண்டே பிளாட்பாரத்தில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத வகையில் அவர் திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே அவரை காப்பாற்றினர். அந்த நேரத்தில் ரயில்கள் ஏதும் வராததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வாகனங்கள் ஓட்டும்போதும், நடந்து செல்லும்போதும் செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தப்பட்டும் பலர் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதால் இதுபோன்ற விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன. செல்போனால்தான் பொது இடங்களில் அதிக விபத்துக்கள் நடப்பதாக ஆய்வுகள் கூறிவரும் நிலையில் இதுகுறித்து விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கார்த்தி-ஜோதிகா ‘தம்பி’ படத்தின் இரண்டு முக்கிய அறிவிப்புகள்

0

கார்த்தி-ஜோதிகா ‘தம்பி’ படத்தின் இரண்டு முக்கிய அறிவிப்புகள்

கார்த்தி, ஜோதிகா முதல்முதலில் இணைந்து நடித்த ’தம்பி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் அனேகமாக டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த படத்தை நேற்று இரவு பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இன்று அல்லது நாளை இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ’தம்பி’ படத்தின் பாடல்கள் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 படத்தின் மூலம் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கோவிந்தா வசந்தா அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார். அக்கா தம்பி கேரக்டர்களில் கார்த்தி மற்றும் ஜோதிகாவும், அப்பா கேரக்டரில் சத்யராஜ் நடித்துள்ள இந்தப் படம் ஒரு த்ரில், சஸ்பென்ஸ் படம் என்று கூறப்படுகிறது

தம்பி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் அதே டிசம்பர் 20ஆம் தேதி தான் சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவதூறு வழக்கு தொடருவதாக கூறிய ஆர்.எஸ்.பாரதி எங்கே? விரட்டி விரட்டி அசிங்கப்படுத்தும் பாமகவினர்

0

அவதூறு வழக்கு தொடருவதாக கூறிய ஆர்.எஸ்.பாரதி எங்கே? விரட்டி விரட்டி அசிங்கப்படுத்தும் பாமகவினர்

சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது தலித் மக்களின் நம்பிக்கையை பெற நினைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போது பஞ்சமி நிலத்தை பற்றிய நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த அசுரன் படத்தினை பார்க்க சென்றிருந்தார்.

அசூரன் படத்தை பார்த்த ஸ்டாலின் அந்த படத்தில் வருவது போல தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை எல்லாம் மீட்க வேண்டும் என தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலம் தான், முடிந்தால் அதை முதலில் உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என ஒரு ட்விட்டர் பதிவை போட அது தற்போது திமுகவை நீதிமன்ற வழக்கு வரை இழுத்து வந்துள்ளது.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் கருத்துக்கு பதிலளித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். இத்துடன் முரசொலி அலுவலகத்திற்கான பட்டாவை இணைத்தும் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மருத்துவர் ராமதாஸ் பட்டாவை காட்டிய ஸ்டாலின் அதற்கான மூலப் பத்திரத்தை வெளியிட வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்தார். 

இதையடுத்து, முரசொலி அலுவலகம் விவகாரம் தொடர்பான இந்த புகாரை விசாரிக்க, உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வைத்தது. இதனையடுத்து, தேசிய பட்டியலின ஆணையத்திடம் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகாமல், அவருக்கு பதிலாக திமுக அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கும் ஆர்.எஸ்.பாரதி ஆஜராகினார்.

DMK IT Wing OMG Group head Sunil resigned by Dr Ramadoss -News4 Tamil Latest Online Political Tamil News Today
DMK IT Wing OMG Group head Sunil resigned by Dr Ramadoss -News4 Tamil Latest Online Political Tamil News Today

அந்த விசாரணைக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த புகார் பொய் என்று கூறிய அவர், மேலும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு 1000 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அவை யார் பெயரில் உள்ளன என்பது பற்றியும் விரைவில் அறிவிக்க போவதாகவும், மேலும் அவர் மீது முரசொலி விவகாரத்தில் பொய்யை பரப்பியதற்காக அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூறியது போல மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு எதுவும் தொடரவில்லை. அதே போல பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்ட முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்திற்கான மூலப் பத்திரமும் திமுக சார்பாக வெளியிடப்படவில்லை. விமர்சனம் எழுந்ததும் பட்டாவை வெளியிட்ட ஸ்டாலின் மூலப் பத்திரத்தை வெளியிட தயங்குவது ஏன்? என்றும் மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு வழக்கு தொடருவதாக கூறிய ஆர்.எஸ் பாரதி எங்கே? என பாமகவினர் மீம்ஸ் போட்டு திமுகவினரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: மீண்டும் சென்னை அணிக்கு ஏமாற்றம்

0

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: மீண்டும் சென்னை அணிக்கு ஏமாற்றம்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் சென்னையின் எஃப்சி அணி இதுவரை ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த நிலையில் இன்று நடைபெற்ற ஒடிஷா அணிக்கு எதிரான போட்டியிலும் டிரா செய்தது. இதனால் கால்பந்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்,

சென்னையில் இன்று இரவு நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் சென்னையின் எஃப்சி அணியும் ஒடிசா எப்.சி. அணியும் மோதின. இந்த
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் 0-0 என சமனிலையில் இருந்தது

இதனையடுத்து 2வது பாதியின் 51 மற்றும் 71வது நிமிடங்களில் சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒடிசா அணி வீரர்களும் 54வது நிமிடத்திலும், 82 வது நிமிடத்திலும் கோல்கள் அடித்து சமன் செய்தனர்.

இதனால் ஆட்ட நேர முடிவின்போது இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்டியிருந்ததால் 2-2 என சமனில் முடிந்தது. சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்வி, 2 டிஆ என 5 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கையில் தமிழர்களின் நிலை பூஜ்யம்: அதிர்ச்சி தகவல்

0

இலங்கையில் தமிழர்களின் நிலை பூஜ்யம்: அதிர்ச்சி தகவல்

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபயா ராஜபக்சே சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இன்று அந்நாட்டின் அமைச்சரவை விரிவாக்கப்பட்டது

மொத்தம் 35 மந்திரிகள் மற்றும் 3 துணை மந்திரிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் இவர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை என்ற சோகமான செய்தி வெளிவந்துள்ளது. ஏற்கனவே கடந்த 22ஆம் தேதி 16 மந்திரிகளுடன் கோத்தாபய ராஜபக்ச பதவி ஏற்ற நிலையில் தற்போது அமைச்சர்கள் விரிவாக்கம் நடந்தது

இதில் கோத்தபாய ராஜபக்சவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சவிற்கு வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை வழங்கப்பட்டது. இதனை அடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் மூவர் தற்போது அதிகாரத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மொத்தமுள்ள 38 மந்திரிகளில் முற்றிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது இலங்கைவாழ் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக இருந்ததால் அந்த கோபத்தில் அவர் தமிழர்களுக்கு மந்திரி பதவி கொடுக்காமல் மந்திரி சபையை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது