Tuesday, November 19, 2024
Home Blog Page 5072

கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது?

0

கார் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகள் EMI போடுவது சிறந்தது?

பலருக்கும் கார் வாங்குவது வாழ்க்கையில் ஒரு பெரும் முதலீடாக இருக்கிறது. நம் நாட்டில் கார் வாங்குவோரில் 80 சதவீதத்தினர் கடன் திட்டங்கள் மூலமாகவே, தங்களது கார் ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

ஆனால், தங்களது வருவாய்க்கு தகுந்தவாறு சரியான கடன் திட்டங்களையும், பட்ஜெட்டையும் தேர்வு செய்வது மட்டுமின்றி, சரியான கால அளவில் மாதத் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கான கடன் திட்டங்களை தேர்வு செய்வதும் அவசியம். அதுகுறித்த சில தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.

கடன் திட்டம்
கார் கடன் திட்டங்கள் பல்வேறு திருப்பிச் செலுத்தும் கால அளவு கொண்டதாக இருக்கிறது. புதிய காருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் [84 மாதங்கள்] வரையிலும், பழைய காருக்கு 5 ஆண்டுகள் [60 மாதங்கள்] வரையிலும் திருப்பிச் செலுத்தும் கால அளவுகள் கொடுக்கப்படுகிறது. பழைய கார் என்றால் தயாரிப்பு ஆண்டுக்கு தக்கவாறு கார் கடன் திட்டத்தின் திருப்பிச் செலுத்தம் கால அளவு மாறுபடும்.

வருவாய்க்கு தக்கவாறு திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவை தேர்வு செய்து கொள்ளலாம். கார் கடன் வாங்குவதற்கு, சிலருக்கு வருவாய் போதுமானதாக இருக்காது. அது போன்ற சூழல்களில், மனைவி அல்லது குடும்பத்தில் வருவாய் உள்ள மற்றொரு உறுப்பினரை இணை விண்ணப்பதாரராக சேர்த்துக் கொண்டு அதிகபட்சமான திருப்பிச் செலுத்தும் மாதத் தவணைகள் கொண்ட கடன் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

இதன் மூலமாக, மாதத் தவணை குறைவாக இருக்கும் என்பதால், மாத செலவுகளை சமாளிக்க ஏதுவாகும். ஆனால், வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ரூ. 35,000 மாத வருமானம் உள்ளவர்கள் மாதத் தவணை ரூ.10,000க்கு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

பொதுவாக புதிய காருக்கு கடன் வாங்கும்போது 5 ஆண்டுகளிலும், பழைய காருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகளிலும் மாதத் தவணைகளை திருப்பிச் செலுத்தி விடுவது நல்லது. புதிய காருக்கு அதிகபட்சமான 7 ஆண்டுகள் வரை மாதத் தவணைகள் கொண்ட கடன் திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகம் என்பதுடன், நீண்ட நாள் திருப்பி செலுத்துவதால் உங்களது பொருளாதாரத்திலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக புதிய காருக்கு கடன் வாங்கும்போது 5 ஆண்டுகளிலும், பழைய காருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகளிலும் மாதத் தவணைகளை திருப்பிச் செலுத்தி விடுவது நல்லது. புதிய காருக்கு அதிகபட்சமான 7 ஆண்டுகள் வரை மாதத் தவணைகள் கொண்ட கடன் திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகம் என்பதுடன், நீண்ட நாள் திருப்பி செலுத்துவதால் உங்களது பொருளாதாரத்திலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.

இது கோவா, கர்நாடகா இல்லை: ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் சரத்பவார் ஆவேசம்

0

இது கோவா, கர்நாடகா இல்லை: ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் சரத்பவார் ஆவேசம்

பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா அல்லது கர்நாடகா அல்ல என்றும், இது மகாராஷ்டிரா என்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பேசினார்.

இன்று இரவு சரியாக 7 மணிக்கு பத்திரிகையாளர்கள் முன் 162 எம்.எல்.ஏக்களை அணிவகுத்து காட்டிய சரத்பவார், எங்கள் கூட்டணியில் 162 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றார்கள் என்பதை நிரூபித்துவிட்டோம். இங்கே 162 எம்.எல்.ஏக்கள் என்றால், அங்கே 126 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பார்கள். எனவே எந்த அடிப்படையில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய சரத்பவார், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இன்னும் அதிகமான எம்எல்ஏக்களை அழைத்து வருவோம் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

இந்த நிலையில் நாளை சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் பட்நாவிஸ் தலைமையிலான அரசை உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால், அவரது ஆட்சி கவிழும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இதுவரை அமித்ஷா ஐடியா அனைத்து மாநிலங்களிலும் வெற்றியைத்தான் கொடுத்துள்ளது. அந்த மாயாஜாலம் மகாராஷ்டிராவிலும் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன்

0

நடிகர் சங்க தேர்தலையே நடத்த முடியாதவர்கள் நாட்டை வழிநடத்துவார்களா? ஓ.எஸ்.மணியன்

நடிகர் சங்க தேர்தலையே ஒழுங்காக நடத்த முடியாத நடிகர்கள் நாட்டை வழி நடத்துவார்கள் என்ற என்று தமிழக அமைச்சர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் நடத்தியபோது அதில் முறைகேடு நடந்ததாக கூறி ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நடிகர் சங்க தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் உள்ளன. எனவே நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் முடிவு அறிவிக்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த தேர்தலின் போது பல குழப்பங்கள் நடைபெற்றதாகவும் குறிப்பாக தபால் ஓட்டுகளை ரஜினிகாந்த் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் ஓட்டு போட முடியாத வகையில் குழப்பங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலையே ஒழுங்காக நடத்தி நியாயமான முடிவை ஏற்படுத்த முடியாத மூத்த நடிகர்கள் நாட்டை எப்படி வழிப்படுத்த முடியும் என்று அமைச்சர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு முன்னர் ரஜினி, கமல், போன்ற மூத்த நடிகர்களும், நாசர், கார்த்தி, விஷால் உள்பட போன்ற நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்களும் என்ன பதில் அளிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

பத்திரிகையாளர் முன் 162 எம்.எல்.ஏக்களை நிறுத்திய சிவசேனா? அமித்ஷா அதிர்ச்சி!

0

பத்திரிகையாளர் முன் 162 எம்.எல்.ஏக்களை நிறுத்திய சிவசேனா? அமித்ஷா அதிர்ச்சி!

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் அரசு இன்னும் ஓரிரு நாளில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் திடீரென சரத்பவாரின் அழைப்பை ஏற்று மீண்டும் சரத்பவார் பக்கம் திரும்பி உள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதனால் முதல்வர் பட்னாவிஸ் எப்படி மெஜாரிட்டியை நிரூபிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது

இன்று இரவு 7 மணிக்கு பத்திரிகையாளர்கள் முன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 162 பேர் அணிவகுப்பு செய்யப்பட்டார்கள் என்றும் இதனை அடுத்து பாஜக மற்றும் அஜித்பவார் கூட்டணி எப்படி மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது

இந்த நிலையில் தங்கள் பக்கமே போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என சிவசேனா கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் நாளை அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை நாளையே மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டால், பட்நாவிஸ் ஆட்சி கவிழ வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இராமசாமி படையாச்சி பிறந்தநாளை அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்! முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு

0

இராமசாமி படையாச்சி பிறந்தநாளை அரசு விழாவாக இனி கொண்டாடப்படும்! முதல்வர் எடப்பாடி அதிரடி உத்தரவு

வன்னியர் சமுதாயத்தின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் செலவில் ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்க முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பணிகள் நிறைவடைந்த நிலையில், மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

மணிமண்டப திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், துரைகண்ணு, கே.சி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மணிமண்டபத்தில் உள்ள ராமசாமி படையாட்சியாரின் முழு உருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தின் மாபெரும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்தின் தலைவர் திரு.ராமசாமி படையாச்சியின் மணிமண்டபத்தை நான் திறந்து வைத்தது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் எனவும், ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அதிரடியாக தெரிவித்தார். வன்னியர் சமுதாய அமைச்சர்கள் கேட்காமலேயே இராமசாமி படையாச்சியின் படத்தை சட்டமன்றத்தில் திறக்க நான் நடவடிக்கைகள் எடுத்தேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்,சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் அவர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம் நீண்டநாள் கோரிக்கை ஒன்றை வைத்துக்கொண்டிருந்தனர், அது தமிழக அரசு பரிசீலனையில் உள்ளது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார், என்ன கோரிக்கையை என்பதை வெளியிட மறுத்துவிட்டார். வன்னியர் சமுதாயத்திற்காக இந்த அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

வரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

0

வரலாறு காணாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

இந்தியாவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இன்னொரு பக்கம் முதலீட்டாளர்களின் வருகை அதிகரிப்பதால் இந்திய பங்குச்சந்தை இன்று உச்சத்தை தொட்டது.

மும்பை பங்கு சந்தையில் இன்று நண்பகலில் சென்செக்ஸ் குறியீடு 487 புள்ளிகளுக்கும் அதிகமானது. இது து இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கியதும் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் குறியீடு திடீரென வரலாறு காணாத வகையில் 487.76 புள்ளிகள் உயர்வடைந்து 40,847.17 புள்ளிகளாக இருந்தது. குறிப்பாக
பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், வேதாந்தா, இன்டஸ்இன்ட் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, மாருதி ஆகிய பங்குகள் நல்ல லாபத்தை பெற்றன.

அதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 136.80 புள்ளிகள் உயர்வடைந்து 12,051.20 புள்ளிகளாக இருந்தது.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட கூடும் என கூறப்படுவதால் சென்செக்ஸ் குறியீடு புதிய உச்சம் அடைந்து உள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.69 என்ற அளவில் இருப்பது பின்னடவைவாக கருதப்படுகிறது.

ஜெயலலிதாவும் நானும் ஒண்ணு: பிரபல நடிகை பேட்டி

0

ஜெயலலிதாவும் நானும் ஒண்ணு: பிரபல நடிகை பேட்டி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இயக்குனர் ஏஎல் விஜய் அவர்களால் ’தலைவி’ என்ற பெயரிலும் இயக்குனர் பிரியதர்ஷினின் அவர்களால் ’தி அயர்ன் லேடி’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது

இந்த நிலையில் நேற்று முன்தினம் ’தலைவி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியான நிலையில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்த கங்கனா ரனாவத்தை நெட்டிசன்கள் கேலி செய்தனர். ஜெயலலிதாவுக்கும் ரனாவத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை என்றும், ஜெயலலிதா படத்தை எடுக்க சொன்னால் தீபாவின் படத்தை எடுத்து வைத்துள்ளார் விஜய் என்றும் நெட்டிசன்கள் கேலி செய்தனர்

இந்நிலையில் ‘தி அயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் நடிகை நித்யா மேனன் பேட்டி ஒன்றில் கூறியதாவது: “ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவருமே பெங்களூருவில் படித்துள்ளோம். பழக்க வழக்கம், பேசும் விதம், ஒழுக்கம், மேனரிசம் ஆகியவைகளில் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும்.

ஜெயலலிதா போன்றே நானும் பிடிக்காத விஷயங்களை பட்டென்று சொல்லி விடுவேன். ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல குணங்கள் என்னிடமும் உள்ளது. அதனால் ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நம்புகிறேன். அந்த வேடத்தில் சிறப்பாக நடிக்க எனது அதிகபட்ச ழைப்பை கொடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் இரண்டு தனுஷ் திரைப்படங்கள்

0

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் இரண்டு தனுஷ் திரைப்படங்கள்

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சுருளி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து அவர் பரியேறும்பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் ‘கர்ணன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது

இந்த நிலையில் தனுஷ் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் நீண்ட கால தாமதத்துக்குப் பின் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ’The Extraordinary Journey Of The Fakir’ என்ற திரைப்படமும் அதே நவம்பர் 29ஆம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது. சீனாவில் 13 ஆயிரம் திரையரங்குகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக இந்த படத்தின் இயக்குநர் தனது சமூக வலைப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்

மேலும் சீனாவில் வெளியாகும் தனுஷின் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தனுஷின் இந்த படத்திற்கும் வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

ஓபிஎஸ் அவர்களை அப்படி சொல்ல என்ன காரணம்? குருமூர்த்தி விளக்கம்

0

ஓபிஎஸ் அவர்களை அப்படி சொல்ல என்ன காரணம்? குருமூர்த்தி விளக்கம்

நேற்று திருச்சியில் நடைபெற்ற துக்ளக் விழா ஒன்றில் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களை ஆண்மை இல்லாதவர் என்று குருமூர்த்தி பேசியதாக வெளிவந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’முதலில் குருமூர்த்தி அவர்கள் ஆண்மை உள்ளவர்தானா என்பதை பார்க்க வேண்டும் என்றும், ஆண்மை இல்லாத ஒருவர் தான் இன்னொருவரை பார்த்து ஆண்மை இல்லாதவர் என்று கூறுவார் என்றும் கூறியிருந்தார்

இந்த நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தான் பேசியது என்ன? என்பது குறித்து விளக்கமளித்ததோடு தான் பேசிய ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு தவறாக விமர்சனம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமாருக்கு விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து குருமூர்த்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஓபிஎஸ்சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலா விடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை

இதை ஏற்கனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே, ஜெயாவை ஆதரித்த துக்ளக் அவரே ஏற்ற சசியை எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். பதில் கூறும்போது ஓபிஎஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.

எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கண்ணியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து. இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்.

குருமூர்த்தி பேசியதற்கு ஓபிஎஸ் அவர்களே இதுவரை எந்த விமர்சனமும் தெரிவிக்காத நிலையில் ஜெயகுமார் திடீரென குருமூர்த்தியை கண்டனம் செய்துள்ள நிலையில் இந்த விளக்கத்தை ஏற்று அவர் வருத்தம் தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

பாப் பாடகி வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு: பெரும் பரபரப்பு

0

பாப் பாடகி வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு: பெரும் பரபரப்பு

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாப் பாடகி ஒருவர் வீட்டில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் திருட்டு போயிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி இக்கி அசலியா என்பவர் ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர். இவர் அடிக்கடி அமெரிக்காவுக்கு பாப் பாடல்கள் பாடுவதற்காக அமெரிக்கா சென்று வருவதால், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கினார். கடந்த சில மாதங்களாக இவர் அமெரிக்காவில் தனது காதலருஅன் வசித்து வருகிறார் என்பதும் இக்கி அசலியாவின் காதலரும் ஒரு பிரபல ராப் பாடகர் என்பதும் குறிப்பிடத்தகக்து

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு இக்கி அசலியா மட்டும் தனியாக வீட்டில் இருந்தபோது வீட்டின் பின்பக்கமாக வந்த சில மர்ம மனிதர்கள் இக்கி அசலியாவின் விலையுயர்ந்த தங்க, வைர, நகைகளை திருடி சென்றனர். திருடு போன நகைகளின் மதிப்பு சுமார். ரூ.2 கோடியே 62 லட்சத்து 76 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த திருட்டு சம்பவத்தை அ|றிந்த அதிர்ச்சி அடைந்த இக்கி அசலியா மற்றும் அவரது காதலர்கள் இருவரும் இணைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்