இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்: போட்டி தொடங்கும் முன்பே செய்த சாதனை
கடந்த சில ஆண்டுகளாக பகலிரவு டெஸ்ட் போட்டி உலகம் முழுவதும் புகழ் பெற்று வரும் நிலையில், இந்தியா முதல் முதலாக வரும் 22ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி ஒன்றில் வங்கதேச அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பொதுவாக டெஸ்ட் போட்டி என்றாலே ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. இதனை அடுத்த டெஸ்ட் போட்டியில் ரசிகர்களை ஈடுபாட்டை அதிகரிக்க பகலிரவு டெஸ்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட பல நாடுகள் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் முதன்முறையாக இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே பகலிரவு இறுதி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற உள்ளது
இந்தியா விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் 67 ஆயிரம் பேர் போட்டியை பார்க்கும் அளவுக்கு இடவசதி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய நிலையில், டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் கொண்ட ஆர்வத்தால் முதல் நாளிலேயே நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்பனை ஆகி விட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க தான் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்க்க முதல் முதலாக கிடைத்த வாய்ப்பு என்பதால் பலர் இந்த போட்டிக்கான டிக்கெட்டை வாங்க முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்டிய எடப்பாடி! பின்னணியில் இராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் தற்போது இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டங்களும், சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளூந்தூர்ப்பேட்டை, கல்வராயன்மலை தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.
இது ஒருபுறம் இருந்தாலும் கட்சிகளுக்கிடையே அமைப்பு ரீதியில் அதிமுகவும் திமுகவும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
அதாவது விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்த வரை அதிமுகவின் அமைச்சர் சீ.வி. சண்முகத்துக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் திண்டிவனம்,வானூர், செஞ்சி, மயிலம், விழுப்புரம்,விக்கிரவாண்டி என ஆறு தொகுதிகள் அவரது கட்டுப்பாட்டில் வருகிறது.
திமுகவைப் பொறுத்தவரை மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளபதி எனப்படும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஆதிக்கமே இருந்து வருகிறது. அவரது கட்டுப்பாட்டில் விழுப்புரம் மத்திய மாவட்டம் என்று அமைப்பு ரீதியாக திமுக பிரிக்கப்பட்ட பின்பு விழுப்புரம்,விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர் என நான்கு தொகுதிகள் வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் பொன்முடி தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதியதாக பிரிக்கப்பட்டு உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள திருக்கோவில் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளார்.
அதாவது தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருக்கோவிலூர் தொகுதி சென்றுவிட்டது. இந்த சூழ்நிலையில் அவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அல்லது விழுப்புரம் மாவட்ட செயலாளர் என எதாவது ஒன்றை திமுக அமைப்பு ரீதியாக அறிவிக்கப்பட வேண்டும். இதில் திமுக தலைமை என்ன செய்யப் போகிறது என்று திமுகவினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விழுப்புரம் தொகுதியில் வன்னியர் சமுதாய வாக்குகள் பெரும்பாலும் திமுகவிற்கு எதிர்ப்பாக விழுந்ததால் தான் பொன்முடி விழுப்புரம் தொகுதியை விட்டு அவரின் சொந்த தொகுதியான திருக்கோவிலூர் தொகுதிக்கு சென்று போட்டியிட்டார். கடந்த மாதம் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட வன்னியர்களின் பலமிக்க தொகுதி என்பதால் பொன்முடியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் வன்னியர்கள் முழு மூச்சாக செயல்பட்டனர். இதற்கு பலனும் கிடைத்துவிட்டது.
திமுகவில் உள்ள வன்னிய பிரமுகர்களை வைத்து கடுமையாக பிரச்சாரம் செய்தும், மு.க.ஸ்டாலின் சுழன்று சூறாவளியாக பிரச்சாரம் செய்தும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தரப்படும் என்று வாக்குறுதி அளித்தும், வன்னியர்கள் திமுகவை எதிர்த்து வாக்களித்தது மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியது.
தோல்விக்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ததில், பொன்முடி எதிர்ப்பு காரணமாக தான் விக்கிரவாண்டியில் நாம் தோல்வி அடைந்தோம் என்று பெரும்பாலான திமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். அவர் செய்து கொண்டு வரும் வன்னியர் எதிர்ப்பு அரசியல் தான் இதற்கு முக்கிய காரணம் என்றும், வன்னியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தனது சொந்த சாதியினருக்கும் மட்டும் தான் விழுப்புரம் மாவட்ட திமுகவில் முன்னிலைப்படுத்தி பதவிகளை அனுபவிக்க செய்து வந்தார் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதனாலேயே தோல்வியை பரிசாக பெற்றோம் என்று திமுகவில் உள்ள வன்னியர்களே தெரிவித்தது பொன்முடியை அதிர்ச்சி அடைய செய்தது. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி நலனுக்காக நான் சர்வாதிகாரியாக கூட மாறுவேன் என்று திமுக மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இது பொன்முடிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள திருக்கோவிலூர் தொகுதி முதலில் விழுப்புரம் மாவட்டத்தில்தான் சேர்க்கப்படுவதாக இருந்தது. விக்கிரவாண்டி வெற்றிக்குப் பிறகு அதிமுகவின் பார்வையில் பொன்முடியை விழுப்புரம் மாவட்டத்தை விட்டே விரட்ட வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கியது. இதனால் திடீரென திருக்கோவிலூர் தொகுதியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்தது ஆளும் தரப்பு. இதனால் ஏற்படும் பாதிப்பு எல்லாம் பொன்முடிக்கு தான். குறுநில மன்னன் போல் கட்சியிலும் ஆட்சியிலும் பங்கு கொண்ட பொன்முடி இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அதிமுக தனது அஸ்திரத்தை எடுத்துள்ளது. மாவட்டத்தில் அடங்கியுள்ள தொகுதிகள் அனைத்துமே வன்னியர்கள் பலமிக்க தொகுதியாகும் விழுப்புரம் விக்கிரவாண்டி,மயிலம்,திண்டிவனம்,வானூர் இந்த தொகுதியில் வன்னியர்கள் சராசரியாக 55 சதவீதம், தலித் சமுதாயம் சராசரியாக 35 சதவீதம் மீனவர்கள் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினர் போன்றவர்கள் 10 சதவீதம் பேர் அடங்கியுள்ளனர்.
வன்னியர் சமுதாயத்தை சேரந்தவரான அமைச்சர் சி.வி சண்முகம் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு விழுப்புரம் மாவட்டத்தின் அசைக்கமுடியாத மாவட்ட செயலாளராக மாறிவிட்டார். ஆனால் பொன்முடி தற்போது விழுப்புரம் மாவட்ட செயலாளரா? அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரா? என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் விழுப்புரம் மாவட்ட திமுக உடன்பிறப்புகள்.
பாமக நிறுவனர் ராமதாஸின் சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வந்தார் பொன்முடி. இதனாலயே வன்னியர்களை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள விடாமல் ஒதுக்கி வைத்தார் பொன்முடி.
தற்போது முதலமைச்சர் எடப்பாடியும் பாமக நிறுவனர் ராமதாஸும் கைகோர்த்து உள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தை விட்டு பொன்முடியை விரட்டி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் திருக்கோவிலூர் தொகுதி கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் சேர்ந்து சதி செய்து விட்டனர் என்று திமுக உடன்பிறப்புகள் கூவிக்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி தான் என்று அரசியலுக்கு வருவதாக கூறினாரோ அன்றில் இருந்து அவரை பாஜகவின் ஆதரவாளர் என்றும், அதிமுகவுக்கு அவர் ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டு வந்தன. தனக்கு பின்னால் பாஜகவும் இல்லை வேறு எந்த கட்சியும் இல்லை என்றும், தான் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினி கூறியும் யாரும் அதனை நம்ப வில்லை. மீண்டும் மீண்டும் அவர் பாஜகவுக்கு ஆதரவாக பேசுவதாக அரசியல்வாதிகள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இரண்டே இரண்டு பேட்டிகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது பாஜக மற்றும் அதிமுகவினர் ரஜினியை திட்டும் அளவுக்கு ரஜினி கொண்டு வந்துவிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் மீதும் திருவள்ளுவர் மீதும் காவி சாயம் பூச முடியாது என்று ரஜினி கூறியதை பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதிலிருந்து அவர் பாஜகவில் பின்னால் இல்லை என்பது உறுதியாயிற்று
இதனை அடுத்து தற்போது அவர் அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி குறித்து பேசியதை அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த இரண்டே இரண்டு பேட்டிகளில் தன் மீது இருந்த பாஜக மற்றும் அதிமுக முத்திரையை அவர்கள் மூலமே நீக்கிவிட்டார். இனி யாரும் ரஜினியை பாஜகவின் பிம்பம் என்றும் அதிமுகவின் ஆதரவாளர் என்றும் பேச மாட்டார்கள். ரஜினியின் இந்த தந்திரத்தை அரசியல் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்
விமர்சனம் செய்தால் பதிலடி கொடுக்கப்படும்: கமல்-ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை
கடந்த ஞாயிறு அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆட்சி குறித்து அதிசயம்-அற்புதம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி ரஜினி கூறிய கருத்து தீயாய் பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இன்னும் ஒருசில நாட்களுக்கு ஊடகங்களுக்கு தீனியாக இந்த விஷயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், ‘ரஜினி சொல்லும் அதிசயம் தமிழகத்தில் நடக்க வாய்ப்பு இல்லை என்றும், மக்களுக்கு நல்லது செய்த பின்னர் பதவிக்கு வரவேண்டும் என்றும், மற்றவர்கள் மீது கல்லெறிந்து பதவியை பெற நினைக்க கூடாது என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் தற்போது சிறப்பான ஒரு அரசு நடைபெற்று வருவதாகவும், அந்த அரசை விமர்சனம் செய்யக்கூடாது என்றும் கூறிய அமைச்சர் ஜெயகுமார், மீறி விமர்சனம் செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் தமிழகத்தில் அரசியலில் ஈடுபட்டு அரியணை ஏற ரஜினி கமல் விஜய் என யாராக இருந்தாலும் சரி அனைவருக்கும் ஆசை இருக்கும் என்றும், அதனை தவறு என்று சொல்ல முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் எங்கள் மீது கல்லெறிந்தால் காயம் எங்களுக்கு இல்லை, அவர்களுக்குத்தான் ஏற்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் எச்சரித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியில் இருந்து அனைத்து முக்கிய அதிமுக தலைவர்களும், பாஜகவினர்களும் தொடர்ந்து ரஜினியை விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் வழக்கம்போல் ரஜினிகாந்த் எந்தவித பதிலும் கூறாமல் ‘தர்பார்’ டப்பிங் பணியில் உள்ளார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் வாழ்வா? சாவா? நிலையில் இந்தியா
நடைபெற்று வரும் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் வாழ்வா சாவா போட்டியில் இந்தியா ஓமனிடம் மோதவுள்ளது.
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இடம் பெற்றுள்ள 40 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதில் இந்தியா ஓமனுக்கு எதிரான 2வது லெக் போட்டியில் ஓமனில் உள்ள மஸ்கட் நகரில் இன்று (செவ்வாய்) இரவு 7.00 மணிக்கு விளையாடவுள்ளது.இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறாவிட்டால் உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்துவிடும்.
இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் தோல்வி அடைந்தது. 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி ஆசிய சாம்பியனான கத்தாருடன் ட்ராவில் முடிந்தது. 3-வது ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேச அணியுடன் ட்ராவில் முடிந்தது.4வது ஆட்டமும் 1-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியுடன் ட்ராவில் முடிந்தது.
முதலாவது லெக்கில் 1-2 என்ற கணக்கில் ஓமனிடம் தோல்வி அடைந்ததால் இந்தப் போட்டியில் ஓமனை விட 2 கோல் அதிகம் பெற்றால் மட்டுமே இந்தியா வெற்றி பெரும்.இதில் இந்தியா தோல்வி அடைந்தாலோ அல்லது ஆட்டம் ட்ராவில் முடிவடைந்தாலோ உலக கோப்பைக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துவிடும்.
எனவே இந்த ஆட்டம் இந்திய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவுள்ளது. இதைப் பற்றி இந்திய கேப்டன் சுனில் சேட்த்ரி – முதல் லெக்கில் ஓமனிடம் அடைந்த தோல்விக்கு இப்பொழுது பழி தீர்ப்போம் என்று கூறிவுள்ளார்.
புதுவையில் கருணாநிதி சிலைக்கு அனுமதி கிடையாது! காங் திமுகவை கதறவிடும் கிரண்பேடி
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமாகிய மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் புதுவை மாநில முதலமைச்சர் திரு.நாராயணசாமி அறிவித்தார்.
கருணாநிதிக்கு சிலை அமைக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சிலை அமைய உள்ள இடம், சிலை வடிவமைப்பு ஆகியவை குறித்து கூடி முடிவு செய்யும். ஆனால், இந்த கமிட்டியின் கூட்டம் இதுவரை நடை பெறவில்லை. வெறும் வெற்று அறிவிப்பாக மட்டும் இன்றளவில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் புதுவை அரசுக்கு சொந்தமான இடத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி தர முடியாது என்று அதிரடியாக அறிவித்துள்ளார்,. இதனால் அம்மாநில காங்கிரஸ் அரசு கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
ஏற்கனவே அம்மாநில துணை ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே அதிகார மோதல் இருந்து வருவதால், கலைஞர் சிலைக்கு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது அம்மாநில திமுகவினரை மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் திமுகவினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இதற்கு மத்திய பாஜக அரசு பின்னாலிருந்து செயல்படுவதாக திமுக உடன் பிறப்புகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர் மேலும் கிரண்பேடிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கவும் தயாராகி வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற ’கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள், ரஜினி-கமல் ஆகிய இருவரும் இணைந்து அரசியலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்றும், இருவரும் இணைந்து ஆட்சி அமைத்தால் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து கமல் மற்றும் ரஜினி தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது
இந்த நிலையில் ரஜினி-கமல் அரசியலில் இணைவது என்பது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல், ரஜினி ஆகிய இருவரும் 40 ஆண்டுகால நண்பர்களாக இருந்தாலும் இருவரும் கொள்கை அளவில் அடிப்படையிலேயே வேறுபட்டவர்கள். ரஜினிகாந்த ஆன்மீக அரசியலை முன்வைப்பவர், ஆனால் கமல்ஹாசன் பகுத்தறிவு அரசியலை முன்வைப்பவர். எனவே இருவரும் இணைந்து அரசியலில் செய்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது
மேலும் கமலஹாசன் அரசியல் கட்சியை ஆரம்பித்து ஒரு தேர்தலையும் சந்தித்து விட்டார். முதல் தேர்தலில் விஜயகாந்த் போல் டீசன்டான ஓட்டுகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். அவருக்கு மிகக் குறைந்த சதவீதமே வாக்குகள் கிடைத்துள்ளதால் அவருக்கு மக்களிடம் செல்வாக்கு எவ்வளவு என்பது தெரிந்து விட்டது
ஆனால் ரஜினிகாந்த் இனிமேல் தான் அரசியலில் ஈடுபட போகிறார். அவர் சந்திக்கும் முதல் தேர்தலுக்குப் பின்னரே அவருக்கு மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருக்கின்றது? என்பது தெரியவரும். இந்த நிலையில் அவர் கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் அவரது தனிப்பட்ட செல்வாக்கு எவ்வளவு என்பது தெரியாமல் போய்விடும். எனவே பெரிதாக செல்வாக்கு இல்லாத கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைக்க மாட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
மேலும் வரும் 2021 சட்டமன்றா தேர்தலில் தனது தனிப்பட்ட செல்வாக்கு எவ்வளவு இருக்கின்றது என்பதை அறிய ரஜினிகாந்த் தனித்தே போட்டியிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் நடிகர் கமலஹாசன்! அரசியல் நிலவரம் குறித்து பேச்சு
நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான திரு. கமல்ஹாசனின் 60 ஆண்டுகால கலைச்சேவையை பாராட்டி ஒடிசாவில் உள்ள செஞ்சுரியன் பல்கலைகழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. இந்த பட்டத்தை பெறுவதற்காக நேற்று கமலஹாசன் ஒடிசா சென்றுள்ளார் அங்கு அம்மாநில முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
ஒடிசா மாநிலம் ஆர்.சீதாபூரில் அமைந்துள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழகம், கமல்ஹாசனின் கலைச்சேவையைப் பாராட்டி கவுரவ டாக்டர் வழங்குவதாக அறிவித்திருந்தது. நாளை நடைபெறும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின்போது, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கமலுக்கு இந்த பட்டத்தை வழங்குகிறார்.
பரமக்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மய்யம் திறன் மேம்பாட்டு மையத்திற்கு ‘கிராம் தரங்’ திட்டத்தின்கீழ் வழிகாட்டுதல் வழங்க செஞ்சூரியன் பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்யுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தெரிகிறது.
திருமாவளவனின் சந்தர்ப்பவாத அரசியல்: ராஜபக்சே மகன் நமல் அறிக்கை
தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச கூறியுள்ளார். மேலும் புதிய அதிபரை விமர்சனம் செய்வதை நிறுத்திவிட்டு நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பதுதான் சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப்பற்றி அக்கறையுள்ளவர்களாகக் காட்டி முதலைக் கண்ணீர்வடிக்கும் மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தமிழர் தேசிய முன்னனி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கைகளை கண்ணுற்றேன். அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறேதும் இல்லை. எமது மக்களை பகடைக்காய்களாக்கும், எம்மக்களிடையே பகையையும் துவேசத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர வேறு என்ன ஆக்கபூர்வமான விடயத்தை செய்திருக்கிறீர்கள் என்ற கேள்வி என்னுள் எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.
2009ல் யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் மரியாதைக்குரிய கலைஞர் கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலான பாராளுமன்றக் குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு. வடக்கு – கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சிநேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகம் அறிந்த விடயம். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டதுடன், எம்முடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடூபட்டதுடன். எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டிருந்தார். அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தடை செய்யப்படுகிறதா?! விஸ்வரூபம் எடுக்கும் திருமாவளவனின் சர்ச்சை பேச்சு!
சில நாட்களுக்கு முன்பு மத சார்புடைய ஒரு அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக உள்ளவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து சர்ச்சை பேச்சை பதிவு செய்திருந்தார். இது இந்து மத உணர்வாளர்கள் மற்றும் பொது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருமாவளவனின் மத கலவரத்தை தூண்டும் வகையிலான இந்த பேச்சுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. இவரது இந்த சர்ச்சை பேச்சை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அவரை கைது செய்ய வலியுறுத்தி பல இடங்களில் காவல் நிலையங்களில் வழக்கும் பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக இந்த விவகாரத்தை கையிலெடுத்த இந்து அமைப்பினர் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி காங்கேயம் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக மனு அளித்துள்ளனர். இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும் சமூகவலைத்தளங்களிலும், கட்சி கூட்டங்கள் மூலம் பொது இடங்களிலும், தொடர்ந்து மக்களிடையே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் திருமாவளவன் செயல்பட்டு வருவதாக இந்த புகார் மனுவில் இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி இந்த மனுவில் வலியுறுத்தி உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியான திருமாவளவன் மக்களிடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் அதனால் அவரது எம்பி பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றும்,மேலும் அவருடைய விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.
தனக்கு கிடைத்த பதவி மூலமாக அவர் சார்ந்த தொகுதி மக்களுக்கு எதையும் செய்யாமல் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது அவரது கட்சியினரிடையேயும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்வார்களா? என்ற எதிர்பார்ப்பில் பல இந்து அமைப்பினர் காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் இது பற்றிய செய்திகளுக்கு: கீழுள்ள செய்தியையும் பாருங்கள்