Monday, November 18, 2024
Home Blog Page 5078

பிகினி உடையில் வந்தால் பெட்ரோல் இலவசம்: அலைமோதிய கூட்டத்தால் அதிர்ந்த கடை ஓனர்

0

பிகினி உடையில் வந்தால் பெட்ரோல் இலவசம்: அலைமோதிய கூட்டத்தால் அதிர்ந்த கடை ஓனர்

ரஷ்யாவில் புதிதாக தொடங்கிய பெட்ரோல் பங்க் ஒன்றின் விளம்பரத்திற்காக வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை அறிவித்தனர். இதன்படி பிகினி உடையில் பெட்ரோல் வாங்க வந்தால் அவர்களுக்கு பெட்ரோல் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆண்களும் பெண்களும் அந்த பெட்ரோல் பங்க்கை நோக்கி குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

ரஷ்யாவில் உள்ள சமரா என்ற பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் புதிதாக பெட்ரோல் பங்கை நேற்று திறந்தார். திறப்பு விழா சலுகையாக பிகினி உடையுடன் வரும் ஆண், பெண் என இருபாலருக்கும் பெட்ரோல் இலவசம் என்றும், எவ்வளவு வேண்டுமானாலும் அவர்கள் தங்கள் வாகனத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம் என்றும் ஒரு வித்தியாசமான சலுகையை அறிவித்தார்

இந்த சலுகையை கேள்விப்பட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் மட்டுமின்றி பக்கத்து ஏரியாவில் இருந்தும் பிகினி உடையில் பெட்ரோல் வாங்க பலர் வந்தனர். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பிகினி உடை அணிந்து வந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகமானதை அடுத்து பெட்ரோல் கடை உரிமையாளர் இந்த சலுகையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். இதனால் பிகினி உடையில் வந்த பல ஆண்களும் பெண்களும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது

பிரதமர் மோடி-பில்கேட்ஸ் டெல்லியில் சந்திப்பு!

0

பிரதமர் மோடி-பில்கேட்ஸ் டெல்லியில் சந்திப்பு!

உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் அவர்கள் இன்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தம் சந்தித்து தன்னுடைய பில்கேட்ஸ்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்தியாவுக்கு பல உதவிகள் செய்ய முன்வந்துள்ளார்.

இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் நிறைவேற்றப்படும் நற்பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் பில் கேட்ஸ் விளக்கிக் கூறினார். இந்தியாவின் சில மாநிலங்களில் சுகாதாரம், விவசாயம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைசார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஈடுபாடு காட்டி வருகிறது.

அதன்பின்னர் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம் சார்பில் நவீனக்கால வேளாண்மை செயல்திட்டம் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் அவர் பங்கேற்று பேசினார்.

பில்கேட்ஸ் அவர்கள் ஏற்கனவே தனது வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய அளவில் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கும், எய்ட்ஸ், மார்பக புற்று நோய் உள்பட பல நோய் ஒழிப்பு திட்டங்களுக்கும் நன்கொடை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினி, கமல், விஜய்க்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்

0

ரஜினி, கமல், விஜய்க்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்

திமுக, அதிமுக ஆகிய இரண்டு மிகப்பெரிய திராவிட கட்சிகளை தேர்தல் அரசியலில் ஒரு புதிய கட்சியை சமாளிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாகும். அந்த சவாலை விஜயகாந்தின் கட்சி உட்பட எந்த கட்சியும் இதுவரை சமாளிக்க முடியவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை

சமீபத்தில் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் அவர்கள் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருப்பார் என்று எண்ணிய நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது, இரண்டு திராவிட கட்சிகளுக்கு எதிரான மனநிலையில் உள்ள மக்களை அதிருப்தி அடைய வைத்தது. இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு புதிய கட்சியோ அல்லது கூட்டணியோ வராதா? என்று மக்கள் பலர் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை

இந்த நிலையில் அதிமுக, திமுக என இரண்டு பெரிய கூட்டணிகளை சமாளிக்க கமல், ரஜினி மற்றும் விஜய் ஆகிய மூன்று திரையுலக பிரபலங்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று கோலிவுட் பிரபலங்கள் வலியுறுத்தி வந்தனர். ஏற்கனவே திரை உலகிற்கு எதிராக தமிழக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை தற்போது தனி அதிகாரிகளின் கைகளில் சென்றுவிட்டதால் திரையுலகினர் எந்த ஒரு புதிய முடிவையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலை இனி நீடிக்காமல் இருக்க திரையுலகைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் திரையுலகினர் இடையே உள்ளது

இதனை அடுத்து ரஜினி, கமல் இருவரும் இணைந்து செயல்படுவது என்ற முடிவை எடுத்திருப்பதாகவும் இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டால் விஜய் இந்த கூட்டணிக்கு பகிரங்கமாக ஆதரவு தருவதோடு ஒரு சில முக்கிய இடங்களில் பிரச்சாரமும் செய்வார் என்றும் கூறப்படுகிறது

ரஜினி, கமல், விஜய் ஆகிய மூன்று மாஸ் நடிகர்கள் தேர்தல் அரசியல் களத்தில் இறங்கினால் நிச்சயம் இரண்டு திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி விடலாம் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது

இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் இன்று அளித்த பேட்டியில் ’ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? நடிகர் அஜித் அவர்கள் வரக்கூடாதா? மக்களுக்கு இடையறாது தொண்டு ஆற்றுகின்ற அதிமுகவுக்கு விசுவாசமாக உள்ள நட்சத்திரங்களை நாங்கள் களமிறக்குவோம் என்று கூறியுள்ளார்

இதிலிருந்து ரஜினி, கமல், விஜய் கூட்டணி ஏற்பட்டால் அவர்களுக்கு எதிராக அஜித்தை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அஜித் ஏற்கனவே அதிமுகவின் அபிமானி என்பதும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என்பதும் குறிப்பிடத்தக்கது

அஞ்சான்’ படத்திற்கு பின் மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூர்யா!

0

அஞ்சான்’ படத்திற்கு பின் மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சூர்யா!

சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தபோதிலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் இந்த படத்தில் சூர்யா ஒரு பாடலை பாடியிருந்தார் என்பதும் ‘ஏக் தோ தீன்’ என்ற அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர்ஹிட் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அஞ்சான் படத்திற்கு பின் தற்போது மீண்டும் சூர்யா ரிஸ்க் எடுத்து சூரரை போற்று’ என்ற படத்திற்காக ஒரு ராப் பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் ஹைபிட்சில் மிக வேகமாக இருந்தாலும் சூர்யா அதை ஒரே டேக்கில் பாடி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை அசத்திவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பாடல் ஹிட்டாகும் பட்சத்தில் இனி அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை சூர்யாவின் குரலில் எதிர்பார்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

சுதாகொங்காரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், பரேஷ் ராவல், கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

சேலத்துக்கு சிங்கம் வீரபாண்டியாரின் சிதைக்கப்பட்ட வரலாறு! திமுகவின் துரோகத்தை தோலுரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

0

சேலத்துக்கு சிங்கம் வீரபாண்டியாரின் சிதைக்கப்பட்ட வரலாறு! திமுகவின் துரோகத்தை தோலுரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

பல வருடங்களாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களால் புறக்கணிக்கப்பட்டு வந்த சேலம் மாவட்டத்தில் சிங்கமாக வலம் வந்த வீரபாண்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நூலில் வீரபாண்டியார் அவர்களுக்கு இழைக்க பட்ட துரோகங்கள் குறித்த தகவலை மறைத்து விட்டதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சேலத்தில் நேற்று (17.11.2019) காலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளரும், அமைச்சரும், சேலத்து சிங்கம் என்று அழைக்கப்பட்டவருமான மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் எழுதிய ‘‘ திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்’’ என்ற தலைப்பிலான அவரது வாழ்க்கை வரலாற்று நூலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் 7 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரது ஏழாவது நினைவு நாள் வரும் 23-ஆம் தேதி கடைபிடிக்கப்படவிருக்கும் நிலையில், மிகவும் தாமதமாக இப்போது தான் வெளியிடப்படுகிறது.

7 ஆண்டுகள் தாமதம் ஆனாலும், வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் வெளிவருவதற்கு யாரெல்லாம் முட்டுக்கட்டை போட்டார்களோ, அவர்களாலேயே இப்போது அந்த நூல் வெளியிடப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், 7 ஆண்டுகளுக்கு முன் சிங்கத்தின் சீற்றத்துடன் எழுதப்பட்டிருந்த அந்த நூல், இப்போது வீரபாண்டியாரின் அடையாளங்கள் எதுவும் இல்லாத மிகச் சாதாரண நூலாக வெளியிடப்பட்டிருப்பது தான் மிகவும் வருத்தமளிக்கிறது.

“காரணம் என்ன?”

வீரபாண்டி ஆறுமுகம் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் எழுதியது எனக்கு தொடக்கத்திலிருந்தே தெரியும். அவருக்கு அப்படி ஒரு எண்ணம் ஏற்படுவதற்கு காரணமே 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை தான். திமுகவில் மு.க.ஸ்டாலினின் ஆதிக்கம் அதிகரிக்க, அதிகரிக்க தாம் புறக்கணிக்கப்படுவதாக அவர் உணர்ந்தார். இதனால் மு.க. அழகிரியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினார். அத்தகைய சூழலில் தான் 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

‘‘கலைஞர் இருக்கும்போது அடுத்த தலைவர் தேவையில்லை. கலைஞரின் பிள்ளைகளான மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் நமக்கு ஒன்றுதான். சிலர் கலைஞரை தங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்க நிர்ப்பந்திக்கின்றனர். ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதை நாம் அனுமதிக்கக்கூடாது’’ என்று ஸ்டாலினை முன்னிறுத்த வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்புத் தெரிவித்தார்.

“பொதுக்குழுவில் அமளி”

அதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். அங்கு நடந்த அநாகரிகமான நிகழ்வுகளைக் கண்டு கலைஞர் கண்ணீர் வடித்தார். அதுமட்டுமின்றி, அந்த பொதுக்குழு கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை கண்டித்த அவர், பேச மறுத்து விட்டார்.

அப்போது ஏற்பட்ட காயத்திற்கு பிறகு தான், அரசியலில் இருந்து ஒதுங்கத் தொடங்கிய வீரபாண்டியார், தமது வாழ்க்கை வரலாற்று நூலை எழுதத் தொடங்கினார். நூலின் பெரும்பகுதியை பெங்களூருவில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி தான் வீரபாண்டியார் எழுதினார். பல அத்தியாயங்கள் பெங்களூருவில் தான் எழுதப்பட்டன. ஒரு சில அத்தியாயங்கள் மட்டும் தான் பூலாவரியில் உள்ள அவரது வீட்டில் எழுதப்பட்டன. அவரது உதவியாளர்களில் ஒருவர் தான் இதற்கு உதவியாக இருந்தார்.

அண்ணா காலத்திலேயே வீரபாண்டியார் அரசியலுக்கு வந்த போதிலும், கலைஞரைத் தான் தமது வாழ்நாள் முழுவதும் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தார். ஆனால், தமது அரசியல் வளர்ச்சி பிடிக்காமல் அதற்கு முடிவு கட்ட 1977-78 ஆம் ஆண்டிலேயே கலைஞர் முயற்சி செய்ததாக வீரபாண்டியாருக்கு வருத்தம் உண்டு. அதுகுறித்து இந்த நூலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“வாய்ப்பு மறுப்பு”

1957-ஆம் ஆண்டில் திமுகவுக்கு வந்த வீரபாண்டியார் அடுத்த 5 ஆண்டுகளில் திமுக சந்தித்த இரண்டாவது பொதுத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன்பின் அடுத்தடுத்து 1967, 1971 ஆகிய தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். அந்த 3 தேர்தல்களிலும் வீரபாண்டி தொகுதியில் பதிவான வாக்குகளில் மூன்றில் இரு பங்கு வாக்குகளை ஆறுமுகம் தான் பெற்றார். இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளர்கள் இவரை நெருங்கிக் கூட வர முடியவில்லை. இதனால் சேலம் மாவட்டத்தில் அசைக்க முடியாத தலைவராக வீரபாண்டியார் உருவெடுத்தார்.

1977-ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று விட்டால், திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஆறுமுகத்துக்கு அமைச்சர் பதவி தர வேண்டியிருக்கும்; அதன்பின் அவரது வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்று கலைஞர் கருதினாராம். அதனால் 1977-ஆம் ஆண்டு தேர்தலில் அவருக்கு வாய்ப்பளிக்க கலைஞர் மறுத்துவிட்டாராம். அதுபற்றி வீரபாண்டியார் ஆவேசமாக கேட்டதற்கு, உனக்கு அடுத்து வரும் மேலவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என்று கூறினாராம். வீரபாண்டியாரும் சமாதானம் அடைய, அந்தத் தேர்தலில் திமுக தோற்றது.

“சண்டையிட்டு வென்ற வீரபாண்டியார்”

1978-ஆம் ஆண்டில் சட்ட மேலவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் வீரபாண்டியாரின் பெயர் இல்லை. கலைஞரை அவர் நேரில் சந்தித்து முறையிட்டாராம். அப்போது, ஏதேதோ கூறிய கலைஞர், இப்போது முடியாது; அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என்று கூறி விட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த வீரபாண்டியார், கலைஞரிடம் கடுமையாக சண்டையிட்டாராம்; அதன்பிறகு தான் கலைஞர் வீரபாண்டியாருக்கும் வேண்டா வெறுப்பாக வாய்ப்பளித்தாராம். தமது அரசியல் எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகத் தான் கலைஞர் அவ்வாறெல்லாம் செய்தார் என்பது வீரபாண்டியாரின் வருத்தம் ஆகும்.

வேறு சில தருணங்களிலும் கலைஞர் தம்மை கைவிட்டதாக வீரபாண்டியாருக்கு வருத்தம் உண்டு. அந்த வருத்தங்களையெல்லாம் தமது வாழ்க்கை வரலாற்று நூலின் ஓர் அத்தியாயமாக பதிவு செய்திருந்தார் வீரபாண்டியார். இந்த தகவல்களை ஒரு கட்டத்தில் என்னிடமும் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார். வீரபாண்டியார் உயிருடன் இருந்து அவரது வாழ்க்கை வரலாற்று நூலை இடம் வெளியிட்டு இருந்தால், இந்த விஷயம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும். ஆனால், இப்போது இந்த தகவல்கள் அடங்கிய அத்தியாயமே புத்தகத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.

சேலம் மாவட்டத்தின் தமக்கு கீழ் பணி செய்த ஒருவர் துரோகம் செய்ததால் அவரை வீரபாண்டியார் விரட்டியடித்துள்ளார். அப்படிப்பட்டவரையே தமக்கு எதிராக சேலம் மாவட்டத்தில் அரசியல் செய்ய வைத்து ஸ்டாலின் அவமதித்தார் என்ற தமது வருத்தத்தையும் அந்த நூலில் வீரபாண்டியார் விரிவாக குறிப்பிட்டிருந்தார். அந்த பகுதியும் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் நூலில் இல்லை.

2012-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தமக்கு எதிராக ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை குறித்தும் வாழ்க்கை வரலாற்று நூலில் வீரபாண்டியார் விரிவாக பதிவு செய்திருந்தார். இதுகுறித்த விவரங்களையும் ஒரு தருணத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். ஆனால், இந்த விவரங்களும் வீரபாண்டியாரின் நூலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“வெளியிடத் தடை”

சுயசரிதை புத்தகத்திற்கு இறுதி வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பயனின்றி உயிரிழந்து விட்டார். அவரது மறைவுக்குப் பிறகு அந்த நூலை வெளியிடுவதற்காக முயற்சிகளில் அவரது மகன் வீரபாண்டி ராஜா முயன்றார். ஆனால், அதில் மு.க.ஸ்டாலின் பற்றிய விமர்சனங்கள் இடம் பெற்றிருப்பதை அறிந்த திமுக தலைமை அந்த புத்தகத்தை வெளியிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது. இதுகுறித்து மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போதே நான் குற்றஞ்சாட்டியிருக்கிறேன்.

இப்போதும் வீரபாண்டியார் மீதான அன்பு காரணமாக இந்த நூல் வெளியிடப்படவில்லை. அந்த நூலின் மூலப்பிரதி கடந்த 7 ஆண்டுகளாக வீரபாண்டியாரின் உதவியாளரான செங்கோட்டையன் என்பவர் வீட்டில் தான் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. இப்போது வேறு சில நெருக்கடிகள் காரணமாகத் தான், திமுக தலைமை மீதான சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டு, இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

வீரபாண்டியார் எழுதிய கருத்துகள் அனைத்தும் இடம் பெற்றிருந்தால் இந்த நூல் சிங்கத்தின் வரலாறாக இருந்திருக்கும். ஆனால், அந்த நூலில் இருந்த பல முக்கிய கருத்துகள் இப்போது சிதைக்கப் பட்டு இருக்கின்றன. இதனால் அந்த நூல் அதற்குரிய மதிப்பை இழந்து விட்டது என்பதே உண்மை என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தினகரனின் அமமுக கலைக்கப்பட்டது: தீர்மானம் இயற்றப்பட்டதால் பரபரப்பு!

0

தினகரனின் அமமுக கலைக்கப்பட்டது: தீர்மானம் இயற்றப்பட்டதால் பரபரப்பு!

அதிமுகவில் இருந்து பிரிந்து ’அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய தினகரன் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாக முன்னணி தலைவர்கள் வெளியேறி வருகின்றனர்.

செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உட்பட பல முன்னணி முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது தினகரன் ஆதரவாளரும் அவருடைய வலது கையை போல் இருந்தவருமான புகழேந்தியும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளார்.

இதுகுறித்து புகழேந்தி தனது ஆதரவாளர்களுடன் தஞ்சையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தஞ்சையில் அமமுக கலைத்து விட்டதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், தொடர்ந்து கட்சியை நடத்தினால் வழக்கு தொடருவோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தங்களை கேட்காமல் அமமுகவை அங்கீகரிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.

அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இருப்பதாக தினகரன் பொய் சொல்ல சொன்னார் என்றும் அதனால்தான் நாங்கள் பொய் சொன்னோம் என்றும் கூறிய புகழேந்தி, அமெரிக்காவில் இருந்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தமிழகம் வந்த பின்னர், ஓபிஎஸ் மட்டும் ஈபிஎஸ் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அமமுகவில் இருந்த ஒரே முக்கிய தலைவராக இருந்த புகழேந்தியும் அக்கட்சியிலிருந்து வெளியேறி இருப்பதால் தினகரன் தனிமரமாக உள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடங்கமறு! அத்துமீறு! பாணியில் செய்தியாளரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கும் விசிகவினர்

0

அடங்கமறு! அத்துமீறு! பாணியில் செய்தியாளரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கும் விசிகவினர்

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் கலைஞர் பாதை பத்திரிகை ஆசிரியர் குணசேகரன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவுடிகளால் முத்துக்கடை பகுதியில் நடுரோட்டில் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை தமிழக மக்கள் மற்றும் செய்தியாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அசிங்கமாக சிலைகள் இருந்தால் அது இந்து கோவில்கள் என்று இந்து மத நம்பிக்கையை கேவலப்படுத்தும் விதமாக பேசியது இந்து மதத்தினர் இடையே தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்துமதத்தையும் அதன் ஆன்மீக நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தும் விதத்தில் பேசி வரும் திருமாவளவன் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இந்து அமைப்புகள் புகார் மனு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இராணிப்பேட்டையை சேர்ந்த கலைஞர் பாதை பத்திரிகை நிறுவனர் மற்றும் ஆசிரியருமான குணசேகரன் என்பவர் கடந்த 15 ஆம் தேதி முகநூலில் தொல்.திருமாவளவனை விமர்சித்து பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.

இந்த பதிவினால் கோபம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குண்டா(எ)சார்லஸ்,காரை.தமிழ்,மற்றும் நிர்வாகிகள் சிலர் இராணிப்பேட்டையில் கலைஞர் பாதை பத்திரிகை ஆசிரியர் குணசேகரன் அவர்கள் முத்துகடை பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவுடிகளால் வழிமறித்து நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் அருவாள் வைத்து பிறந்தநாள் கேக்கை வெட்டியதை தட்டிக்கேட்க முயன்ற காவல்துறையினரை அரிவாளால் வெட்ட முயன்ற வழக்கில் இதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட தொண்டரணி நிர்வாகி கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் குண்டா(எ)சார்லஸ், பத்திரிகையாளர் குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளார்.

விசிக கட்சியினரால் செய்தியாளர் தாக்கப்பட்ட காணொளி:

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள YouTube சேனல் மூலம் பின் தொடருங்கள்

பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி: பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

0

பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி: பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

தமிழகத்தை பொருத்தவரை தந்தை பெரியார் பெரிதும் மதிக்கப்பட்டு வருகிறார். பெண் சுதந்திரம், ஜாதி ஒழிப்பு, மூடப்பழக்க வழக்கங்களுக்கு முடிவு கட்டுதல், ஆகியவை பெரியாரால் நடந்தது என பலர் நம்புகின்றனர். அனைத்து திராவிட கட்சிகளின் குருவாக பெரியார் இருந்து வருகிறார். இந்த நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஏற்கனவே பாஜக உள்ளிட்ட கட்சிகள் பெரியாரை விமர்சனம் செய்து வரும் நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் பெரியார் குறித்து கூறியபோது, ‘அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகிய இருவரையும் பின்பற்றுபவர்களை பற்றி தான் கவலை கொள்வதாகவும் அவர்களை கண்டு அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பெரியார் ஒரு அறிவார்ந்த தீவிரவாதி என்று குறிப்பிட்ட பாபா ராம்தேவ், ராமர், கிருஷ்ணர் காலம் முதல் உயர் ஜாதியினர் மட்டுமே ஆட்சி செய்து வந்ததாகவும் அதன் பிறகு ஆதிதிராவிட மக்களும் இஸ்லாமியர்களும் ஆட்சிக்கு வந்ததாகவும் கூறி, அப்போதுதான் பெரியார் மக்களை தவறாக வழி நடத்தியதாகவும் விமர்சனம் செய்தார்

பாபா ராம்தேவின் இந்த விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவருக்கும் அவரது பதஞ்சலி நிறுவனத்திற்கும் எதிராக ஆயிரக்கணக்கான டுவீட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாபா ராம்தேவ் தனது கருத்தை திரும்ப பெற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கைகள் விடப்பட்டு வருகிறது

ரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்!

0

ரஜினியின் அற்புதம்-அதிசயம் பேச்சும், எஸ்.ஏ.சந்திரசேகரின் வேண்டுகோளும்!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடித்து வருவது ஒரு அதிசயம் மற்றும் அற்புதம் என்று கூறிய ரஜினியிடம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற ’கமல்ஹாசன் 60’ என்ற விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியபோது, ‘தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி 4 மாதம் அல்லது 5 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள 99 பேர் கூறினார்கள் ஆனால் அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது, அவரது ஆட்சி தொடர்ந்து கொண்டே உள்ளது.

நேற்றும் இந்த அதிசயம் அற்புதம் நடந்தது, இன்றும் அதிசயம் அற்புதம் நடந்தது, நாளையும் இதே அதிசயம் அற்புதம் நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறியபோது கரவொலி விண்ணை பிளந்தது. நடிகர் ரஜினிகாந்த் தனது ஆட்சி வருங்காலத்தில் மலரும் என்பதையே அவர் நாளை அற்புதம் நடக்கும் என்று கூறியுள்ளார் என்பது குரிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதே விழாவில் பேசிய நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், ‘கமலஹாசன் துணிச்சலுடன் அரசியலில் களமிறங்கியது போல் ரஜினிகாந்த் அவர்களும் அரசியலுக்கு வேண்டும் என்று அவரது கோடானு கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும், ரஜினியும் கமலும் சேர்ந்து ஒரு நல்ல ஆட்சியை தரவேண்டும் என்றும், அவர்கள் இருவரும் ஆட்சி செய்தது போதும் என நினைத்தால் அதன்பின்னர் தம்பிகளுக்கு வழிவிட வேண்டும்’ என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

வசதி இல்லை என்றால் தேர்தலில் சீட் கேட்காதீர்கள்: அமைச்சரின் சர்ச்சை அறிவிப்பு

0

வசதி இல்லை என்றால் தேர்தலில் சீட் கேட்காதீர்கள்: அமைச்சரின் சர்ச்சை அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் தற்போது அதிமுக, திமுக என இரண்டு பெரிய கட்சிகளில் இருந்தும் பெறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் சீட் கொடுக்க முடியாது என்றும், எனவே இந்த இரு தரப்பினருக்கும் சீட் கேட்க வேண்டாம் என்றும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டபோது கேட்டுக் கொண்டுள்ளார்

மேலும் தற்போதைய காலம், கம்ப்யூட்டர் காலம் என்பதால் இளைஞர்களை தேர்வு செய்ய கட்சி முடிவு செய்துள்ளதாகவும், வயதானவர்களுக்கும் பண வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே சீர் கொடுத்து திமுக அழிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பணவசதி இல்லை என்றால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்க வேண்டாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் கூறியிருப்பது அக்கட்சியினர் களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொறுப்பை சரியாக நிர்வகிக்க படிப்பு, புத்திசாலித்தனம் முக்கியம் என்ற நிலையில் பணம் இல்லாதவர்கள் சீட் கேட்க வேண்டாம் என்று ஒரு அமைச்சரே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது