Sunday, November 17, 2024
Home Blog Page 5091

போதி தர்மர் சிலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்! மத்திய அரசுக்கு இராமதாஸ் வேண்டுகோள்

0

போதி தர்மர் சிலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்! மத்திய அரசுக்கு இராமதாஸ் வேண்டுகோள்

போதி தர்மர் சிலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்தியா – சீனா இடையிலான இருதரப்பு உறவுகளையும், சுற்றுலாவையும் மேம்படுத்தும் நோக்குடன் காஞ்சிபுரத்தில் போதி தர்மருக்கு பிரமாண்ட சிலை அமைக்கவும், புத்த மதத்துடன் தொடர்புடைய தமிழக நகரங்களை இணைத்து சுற்றுலா வளையம் அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும்.

புதிய வாய்ப்புகள் உருவாகும் போது அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது தான் அறிவார்ந்த அரசுக்கு அடையாளம் ஆகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங் அவர்களுக்கும் இடையே கடந்த மாதம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சுக்களின் போது, இந்தியா – சீனா இடையிலான பொருளாதார மற்றும் சுற்றுலா உறவுகளை வலுப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அதன் ஒருகட்டமாகவே போதி தர்மரின் பெருமைகளை மையமாக வைத்து தமிழ்நாட்டில் சுற்றுலா வளையம் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய அளவில் சிலை வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் வல்லபாய் படேலுக்கு 597 அடி உயரத்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதை விட சற்று குறைந்த உயரத்தில் போதி தர்மரின் சிலை அமைக்கப்படும்; அங்கு போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ஒலி ஒளி காட்சிகள் ஏற்பாடு செய்யப்படும்; காஞ்சிபுரத்தில் தொடங்கி மாமல்லபுரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட புத்த மதத்துடன் தொடர்புடைய 6 நகரங்களை இணைக்கும் வகையில் வட்டச் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்ய தமிழக அரசின் சுற்றுலாத் துறை திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை இரு வகைகளில் பயனளிப்பதாக அமையும். முதலாவதாக, சீன மக்களால் வணங்கப்படும் போதி தர்மரை மையமாக வைத்து சுற்றுலா மையம் அமைக்கப்படுவதால், அது சீன மக்களையும், சீன அரசையும் பெரிதும் கவரும். அதனால், இரு தரப்பு சுற்றுலாவும், வணிகமும் அதிகரிப்பது மட்டுமின்றி, இரு தரப்பு உறவும் வலுவடையும். இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள போதிலும், அதன் லட்சியங்களை எட்டுவதற்கு சீனாவின் ஒத்துழைப்பும், ஆதரவும் தேவை ஆகும். ஆனால், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் யாருக்கு வலிமை அதிகம் என்பது குறித்த போட்டியில் இந்தியாவும், சீனாவும் ஒன்றையொன்று நம்பிக்கையின்றி அணுகுவதால், இரு தரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அனைத்தையும் போதி தர்மர் சுற்றுலா மூலமான நடவடிக்கைகள் தகர்க்கும். அந்த வகையில் இது பயனுள்ளதாகும்.

இரண்டாவதாக போதி தர்மரின் பெருமையை தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பரப்ப கடந்த காலங்களில் தமிழக ஆட்சியாளர்கள் எதையும் செய்யவில்லை. சீனாவிலிருந்து இந்தியா வந்த யுவான்-சுவாங்கின் வரலாற்றை பாடநூல்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்த அளவுக்குக் கூட, நமது மண்ணின் மைந்தனான போதி தர்மரின் வரலாறு நமது மக்களுக்கும், மாணவர்களுக்கும் புகட்டப் படவில்லை. பல்லவ நாட்டை ஆண்ட கந்தவர்மனின் மூன்றாவது மகனாக பிறந்த போதி தர்மர், தனது இளவரசர் பட்டத்தைத் துறந்து புத்த துறவியாக மாறினார்.

பின்னர் சீனாவுக்கு சென்று புத்த மதத்தை பரப்பியதுடன், குங்பூ கலையையும் கற்பித்தார். சீனாவில் மட்டுமின்றி, தாய்லாந்து, ஜப்பான், ஹங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் போதி தர்மர் வணங்கப்படுகிறார். ஆனால், அவரைப் பற்றிய உண்மைகள் இதுவரை மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. இப்போது போதி தர்மரின் மிகப் பிரமாண்ட சிலை அமைக்கப்படுவதன் மூலமும், அவரது வாழ்க்கை வரலாறு பரப்பப்படுவதன் மூலமும் பல்லவ வம்சத்து இளவரசரான போதி தர்மரின் புகழ் தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரவும்.

இந்திய சீன உறவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த அதிக நிதி தேவை. இத்திட்டத்தை தமிழக அரசால் மட்டும் செயல்படுத்த முடியாது. எனவே, போதி தர்மர் சிலை அமைத்தல் மற்றும் புத்த மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைத்து சுற்றுலா வளையம் அமைக்கும் திட்டத்திற்கு தேவையான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், சீனாவின் ஃபியூஜியான் மாநிலத்திற்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்துவது என்று மாமல்லபுரத்தில் இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடங்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கட்சியை பலப்படுத்த கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம்

0

கட்சியை பலப்படுத்த கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் வகையில் புதியதாக 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களை நியமிக்க கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார். கட்சி கட்டமைப்பு, பிரசார வியூகம் போன்ற வி‌ஷயங்களில் அவரது ஆலோசனைப்படி தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கமலஹாசன் வருகிற 7 ஆம் தேதி தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடயிருக்கிறார். வழக்கமாக தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் கமலஹாசன் இந்த முறை மிகப்பெரிய விழாவுக்கு திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் 7, 8, 9 என மூன்று நாட்கள் தொடர்ந்து கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பிறந்தநாள் அன்று 7 ஆம் தேதி காலை நடிகர் கமலின் தந்தைக்கு சொந்த ஊரான பரமக்குடியில் சிலை திறக்கப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

இதனையடுத்து பரமக்குடியில் இளைஞர்களுக்கான வளர்திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட உள்ளது. 8 ஆம் தேதி சென்னையில் தனியார் திரையரங்கில் காந்தியின் 150-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஹே ராம் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் 14 ஆயிரம் இளைஞர்களுக்கு பதவி - கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம்

இந்த கலந்துரையாடலில் கமலஹாசனும் பங்கேற்கிறார். இவருடன் ஹே ராம் படக்குழுவினரும் கலந்து கொள்வார்கள். அன்றைய தினமே கமலின் அலுவலகத்தில் மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு சிலை திறக்கப்படுகிறது.

அடுத்த நாள் 9 ஆம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் உங்கள் நான் என்ற பிரபலமான கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட தமிழ், இந்தி, தெலுங்கு திரை பிரபலங்களும் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கமலஹாசன் பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்துகொண்டு இருந்தாலும் மறுபுறம் கட்சி கட்டமைப்பில் மேற்கொண்டு வரும் மாற்றங்களும் வேகம் எடுத்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சிக்கு புதிய பொதுசெயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் போது கமல்ஹாசனுக்கு நெருக்கமான கவிஞர் சினேகன், கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அதில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார். தற்போது அவருக்கு கமல்ஹாசன் புதிய பதவி ஒன்றையும் அளித்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள்‌ நீதி மய்யம் கட்சி

நமது மக்கள்‌ நீதி மய்யம் கட்சியின்‌ புதிதாக விரிவாக்கம்‌ செய்திருக்கும்‌ கட்டமைப்பில்‌, கட்சியின்‌ அனைத்து நிலைகளிலும்‌ பொறுப்பாளர்களை நியமிக்கும்‌ திட்டத்தின்‌படி ஏற்கனவே சில பொறுப்புகளுக்கான நியமனங்களை அறிவித்துள்ளேன். அதை‌ தொடர்ந்து, மேலும்‌ கீழ்கண்ட சில பொறுப்புகளுக்கான நியமனங்களை இப்போது அறிவிக்கிறேன்‌.

நான்‌ ஏற்கனவே குறிப்பிட்டபடி வரும்‌ 2021-ல்‌ தமிழகத்தின்‌ அரசியலை மாற்றியமைக்கும்‌ லட்சியத்தை வலுப்படுத்த கட்சி தொண்டர்களும்‌, என் அன்பிற்குரிய நற்பணி இயக்கத்தினரும்‌ தற்போது நியமிக்கப்படும்‌ பொறுப்பாளர்களோடு இணைந்து செயல்பட்டு, மக்களுக்கான நல்லாட்சி கனவை நிறைவேற்றிட உழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்‌.

கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்திருக்கும், விண்ணப்பங்களில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தொடர்ந்து அறிவிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டு மாநில செயலாளர் சார்பு அணி என்ற அணியை அறிவித்து அதில் கவிஞர் சினேகனுக்கு இளைஞரணி பொறுப்பை கமல்ஹாசன் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது:

பிறந்தநாள் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் கமலுக்கு சில கட்சி பணிகள் இருக்கின்றன. புதிய பொறுப்பு நியமனங்கள் தொடர்ந்து நடைபெறும். அவற்றையும் முடித்த பின்னர் ஜனவரி, பிப்ரவரியில் தான் தேர்தல் பிரசாரம், சுற்றுப்பயணம் போன்றவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

கட்சி கட்டமைப்பில் நடக்கும் மாற்றங்கள் என்பது பணிகளை அனைவருக்கும் பிரித்து சமமாக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் நடைபெறுகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பொறுப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக மாவட்ட அளவிலான பொறுப்புகள் அறிவிக்கப்பட இருக்கிறது. டிசம்பர் இறுதிக்குள் அனைத்து பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டு விடும்.

மேலும் இதில் கிராமப்புற இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். கல்லூரி மாணவர்கள் கூட நிறுத்தப்படலாம். கட்சி கட்டமைப்பில் உருவாக்கப்படும் மாற்றங்கள் அடுத்து கமலஹாசன் முதலமைச்சர் ஆவதற்கான அடித்தளமாக அமையும் என்றும் அவர்கள் கூறினர்.

தமிழகத்திற்கு 1600 கோடி ஒதுக்கீடு! ஜெர்மனி பிரதமர் அறிவிப்பால் எடப்பாடிக்கு ஜாக்பாட்

0

தமிழகத்திற்கு 1600 கோடி ஒதுக்கீடு! ஜெர்மனி பிரதமர் அறிவிப்பால் எடப்பாடிக்கு ஜாக்பாட்

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.

அவருக்கு டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலை குடியரசு தலைவர் இராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பின்பு இந்தியா,ஜெர்மனி அரசுகளுக்கு இடையே உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

இரு நாட்டு பிரதமர்களும் இதில் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு நாடுகளுக்கு இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தானது. மேலும் இரு நாட்டு தலைவர்களின் சார்பில் 5 கூட்டு பிரகடனங்களும் வெளியிடப்பட்டன.

ஜெர்மனி நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இன்று காலை டெல்லியில் நடைபெற்ற தொழில் முனைவோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்,.

இருநாடுகளுக்கிடையான கூட்டு திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பசுமை நகர்ப்புற இயக்கத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மேலும் தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையை சீரமைக்க ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். டெல்லியில் காற்று மாசுபாட்டால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளை பயன்படுத்தினால் பாதிப்பை ‌கட்டுப்படத்தலாம் என்று ‌தெரிவித்தார்.

ஏற்கனவே கடும் நஷ்டத்தை சந்தித்து வரும் தமிழக போக்குவரத்துதுறை, ஜெர்மனி பிரதமரின் இந்த அறிவிப்பு தமிழக அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச்.ராஜா மற்றும் ஸ்டாலின் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? பாஜக திமுக கூட்டணியா?

0

ஹெச்.ராஜா மற்றும் ஸ்டாலின் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? பாஜக திமுக கூட்டணியா?

தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசியச்செயலாளருமான ஹெச்.ராஜா திடீரென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவருக்குமிடையே நடந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்றது.

முன்னதாக அரசியல் ரீதியாக இருவருக்குமிடையே தொடர்ந்து பல நேரங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்ட நிலையில் இந்த சந்திப்பு இரு கட்சியினரின் இடையே இணக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக மற்றும் தேசிய அரசியலில் தொடர்ந்து அதிரடியான கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர் தான் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. அதிலும், திமுகவுக்கு எதிராக என்றால் விளாசி எடுப்பார். அந்தளவுக்கு திமுக மீது தனது கடுமையான விமர்சனத்தை ஒவ்வொரு நிகழ்விலும் பதிவு செய்வார். இவ்வாறு எதிரும்-புதிருமாக இருக்கும் திமுகவினரும் ஹெச்.ராஜாவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மோதிக்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு இம்மாதம் திருமணம் வைத்துள்ள ஹெச்.ராஜா திருமண அழைப்பிதழ் வழங்க அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதல் அளித்து வருகிறார். ஏற்கனவே பிரதமர் மோடி, விஜயகாந்த், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பிதல் வழங்குவதற்காக ஹெச்.ராஜா தரப்பு சார்பாக நேரம் கேட்கப்பட்டுள்ளது. இதனிடையே அவருக்கு இன்று நன்பகல் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரை சந்திப்பதற்கு நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அண்ணா அறிவாலயம் சென்ற ஹெச்.ராஜாவை, பூச்சி முருகன், தலைமை நிலைய நிர்வாகி காஜா போன்றோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து ஸ்டாலினை சந்தித்த ஹெச்.ராஜா பொன்னாடை போர்த்தி தனது மகள் திருமண அழைப்பிதழை அவர் கையில் வழங்கியுள்ளார். அதை வாங்கி ஸ்டாலின் முகப்பு பக்கத்தை படித்து பார்த்துக் கொண்டிருந்த போதே, நீங்க அவசியம் மகளின் திருமணத்தில் கலந்துக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஹெச்.ராஜா. அவரது அழைப்பை புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் திருமண விவரத்தை தவிர அரசியல் சம்பந்தபட்ட வேறு எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு முன் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பிதல் கொடுக்க சென்ற போது தனது மனைவி மற்றும் உறவினருடன் ஹெச்.ராஜா சென்றிருந்தார். பின்னர் விஜயகாந்த்துக்கு அழைப்பிதழ் அளிக்க சென்ற போதும் தன்னுடன் உறவினர் ஒருவரையும் அழைத்துச் சென்றிருந்தார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சென்ற போது மட்டும் தனி நபராக தான் மட்டும் சென்றுள்ளார் என்பது தான் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பாஜகவிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்பட்டது.இதையெல்லாம் கருத்தில் கொண்டு அடுத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அணி மாறுவதற்கான ஆரம்பகட்ட முயற்சியாக கூட இந்த சந்திப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த காலங்களில் தமிழக அரசியலில் உருவான ஒவ்வொரு கூட்டணிக்கும் இது போன்ற ஏதாவது ஒரு திருமண நிகழ்வு,அதற்கான சந்திப்பு தான் காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஹெச்.ராஜா மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இடையே நடைபெற்ற சந்திப்பு பாஜக மற்றும் திமுக கூட்டணி பேச்சு வார்த்தைக்கு ஆரம்பமாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: களத்தில் குதிக்கும் சோனியா

0

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: களத்தில் குதிக்கும் சோனியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டியை பெற்றுள்ளது

ஆனால் எந்த கட்சிக்கு முதல்வர் பதவி என்பதில் நடந்து வரும் அதிகார போட்டி காரணமாக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் அம்மாநிலத்தில் இன்னும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது

இந்த நிலையில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா இணைந்து அமைக்கும் ஆட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறின

இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க சோனியா காந்தியை சரத்பவார் சந்திக்கவிருப்பதாகவும் சோனியா காந்தி இதற்கு சம்மதித்தால் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஹுசைன் தல்வாய் என்பவர், சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், ‘பல சந்தர்ப்பங்களில் காங்கிரசுக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளதாகவும், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பாஜக ஆட்சி அமையாமல் இருப்பதை விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சோனியா காந்தி என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்தாவதற்கு அதிமுக அரசு தான் காரணம்! ஸ்டாலின் விமர்சனம்

0

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்தாவதற்கு அதிமுக அரசு தான் காரணம்! ஸ்டாலின் விமர்சனம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது தொடரப்பட்ட குண்டர் சட்டம் ரத்தாவதற்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும், தமிழகத்தையே அதிர்ச்சிக்கும் அருவருப்புக்கும் உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் மீதான குண்டர் சட்டம் ரத்தாகியிருக்கிறது.

இளம்பெண்களின் வாழ்வினை, இரக்க மனம் சிறிதுமின்றிச் சூறையாடிய இந்த இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, சாதாரணமாகக் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகளைக் கூட தமிழக அரசின் மறைமுகக் கட்டளைப்படி, காவல்துறை அதிகாரிகள் கடைபிடிக்காமல் கைவிட்டிருப்பது வேதனை தருகிறது.

“ஒருவரை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்ற அடிப்படை சட்ட நடைமுறையைக் கூட, வேண்டுமென்றே திட்டமிட்டு காவல்துறை, யாருக்கோ உதவிடும் நோக்கில், கோட்டை விட்டுள்ளது.

“குண்டர் சட்டத்தில் கைது செய்யும் போது என்னென்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று ஏற்கெனவே உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது. அந்தத் தீர்ப்புகளை எல்லாம் முற்றிலும் புறக்கணித்து, இந்த வழக்கில் சிக்கியுள்ள முக்கியக் குற்றவாளிகளை எப்படியாவது தப்ப விட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு காவல்துறை செயல்பட்டுள்ளது.

குண்டர் சட்டம் ரத்தானதற்கு தமிழக அரசு, இவ்வாறு துணை போயிருப்பது வருத்தமளிக்கிறது; இது மிகவும் வெட்கக்கேடானது.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடைபெறுகின்ற நேரத்தில், காவல்துறையும், கோவை மாவட்ட ஆட்சியரும் காட்டியுள்ள அலட்சியமும் ஆர்வமின்மையும்; இந்த வழக்கு விசாரணையின் போக்கையே மாற்றும் ஆபத்தாக மாறியிருக்கிறது.

இனி குற்றம்சாட்டப்பட்டவர்கள் எளிதில் ஜாமீனில் வெளிவர முடியும். இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களையும், மற்ற ஆதாரங்களையும், சகலவிதமான வழிமுறைகளையும் கையாண்டு, கலைக்க முடியும்.

பழமொழியைப் போல தமிழக மக்களிடையே பழக்கப்பட்டுப் போன, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இது போன்ற சூழலை ஏன் தமிழக அரசு திட்டமிட்டு உருவாக்குகிறது? யாரைக் காப்பாற்ற இந்த முயற்சிகள் நடக்கின்றன? என்ற கேள்விகள் எழுகின்றன; அந்தக் கேள்விகளுக்குள் மறைந்திருக்கும் விடையும் பொதுமக்களுக்குப் புரிகிறது.

குண்டர் சட்டம் ரத்தாவதற்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீதும், அவர்களுக்குத் திரைமறைவில் வாய்மொழி உத்தரவிட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு உடனடியாக இந்த நடவடிக்கையினை எடுக்காவிட்டால், அரசு மீது ஏற்கெனவே ஏற்பட்டுள்ள சந்தேகம் வலுப்பெற்று விடும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை, முறைப்படியும் சட்டப்படியும், அதிகார வர்க்கத்தின் அழுத்தத்திற்கு ஆட்படாமலும் நடத்தப்பட்டு, இளம்பெண்களின் எதிர்காலத்தைச் சீரழித்த, கழிசடைக் கலாச்சாரக் கயவர்கள் அனைவரும், சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும், என்றும் அந்த அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சிறையில் கண்ணீர் வடிக்கும் 50 பிகில் கைதிகள்

0

சிறையில் கண்ணீர் வடிக்கும் 50 பிகில் கைதிகள்

விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தியேட்டரில் அதிகாலை சிறப்பு காட்சி திரையிடப்படவில்லை என்று ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதும், இதனையடுத்து சம்பவம் நடந்த அன்று 32 விஜய் ரசிகர்களும் நேற்று 18 ரசிகர்களும் என மொத்தம் 50 ரசிகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது சிறையில் இருக்கும் பிகில் கைதிகளை பார்த்து அவர்களுடைய பெற்றோர்கள் கண்ணீர் வடிப்பதும், பெற்றவர்களின் கஷ்டத்தை பார்த்து சிறைக்கைதிகள் கண்ணீர் வடிப்பதுமான நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்து வருகின்றது.

ஒரு திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் அதில் நடித்த நடிகரை கடவுளுக்கு இணையாக பார்ப்பதன் பாதிப்பு தான் இந்த வன்முறை சம்பவம். தற்போது சிறையில் வாடும் இந்த 50 கைதிகளுக்க்கு ஆதரவாக எந்த ஒரு விஜய் ரசிகர் மன்றமோ, விஜய்யோ குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

பிகில் படத்தின் ஆடியோ விழாவில் என் பேனரை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், ஆனால் என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று வீராவேசமாக பேசிய விஜய் தற்போது தனது ரசிகர்கள் சிறையில் இருப்பது குறித்து வாய் திறக்காமல் மௌனமாகவே உள்ளார். மேலும் ரசிகர்களிடம் இது போன்ற வன்முறைச் செயலில் ஈடுபட வேண்டாம் என்று குறைந்தபட்ச அறிவுரையை கூட அவர் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மீண்டும் ரீமேக் ஆகும் ‘பிங்க்’: அஜித் கேரக்டரில் பிரபல நடிகர்

0

மீண்டும் ரீமேக் ஆகும் ‘பிங்க்’: அஜித் கேரக்டரில் பிரபல நடிகர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் தல அஜித் நடித்து இருந்தார் என்பதும் அந்தப் படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளார். இது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அமிதாப்பச்சன், அஜித் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்ரீராம் வேணு என்றஇயக்குனர் இயக்க உள்ளார்.

பிங்க் ரீமேக் படத்தை தெலுங்கில் தயாரிக்க வேண்டும் என்ற திட்டம் ஏற்கனவே போனிகபூரிடம் இருந்ததால் தான் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தை அவர் தெலுங்கில் டப் செய்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு திரையுலகில் பவர்ஸ்டார் பவன்கல்யாண், அஜித்துக்கு நிகரான ஸ்டார் என்பதால் இந்த படம் தெலுங்கிலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ‘நேர் கொண்ட பார்வை’ படத்தால் போனிகபூருக்கு ரூ.12.5 கோடி லாபம் கிடைத்ததாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

50 விஜய் புள்ளைங்கோவ அலாக்கா தூக்கிய போலீஸ்! பிகிலே காப்பாத்த வாங்க

0

50 விஜய் புள்ளைங்கோவ அலாக்கா தூக்கிய போலீஸ்! பிகிலே காப்பாத்த வாங்க

உலகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு வெளியான நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் 100 கோடி 200 கோடி வசூலித்தது என்று சமூக வலைத்தளங்களில் உலாவி வருகிறது, படம் வெளியான நாட்களிலிருந்து விஜய் ரசிகர்கள் தாம்தூம் என்று கொண்டாடி வருகின்றனர்.

விஜய் ரசிகர்களைத் தவிர வேறு யாரும் படத்தை அந்த அளவுக்கு படத்தை ரசிக்கவில்லை என்று தெரிகிறது, இயக்குனர் அட்லி என்றால் நான்கு படங்களை சேர்த்து வைத்து தன்னுடைய படைப்பு என்று சொல்லி படம் எடுத்துவிடுவார் என்பது உலகறிந்த உண்மை. படத்தை பார்த்தவர்கள் விஜய்க்காக ஒரு முறை பார்க்கலாம் என்றுதான் சொல்கிறார்களே தவிர, படத்தை தூக்கி வைத்துக்கொண்டு எவரும் பேசவில்லை,

படம் நெகட்டிவ் விமர்சனங்களாக வந்து கொண்டிருப்பதால் நடிகர் விஜய் நொந்து போயுள்ளார், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பெருமை நடிகர் விஜய்க்கு மட்டுமே உண்டு,. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ஆளும் தரப்பை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார், அதிலும் மறைமுகமாக யார எங்க உட்கார வைக்குனுமோ அவன அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக நடக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சீண்டினார்,.

அதிலிருந்து சனி பிடித்ததோ என்னவோ தொடர்ந்து அடிமேல் அடி நடிகர் விஜய் வாங்கி வருகிறார்,. படத்திற்கு தணிக்கை செய்வதிலிருந்து நீதிமன்றம், முதல்வர் தரப்பு வரையும் தயாரிப்பு நிறுவனம் தான் போராடி படத்தை வெளிக்கொண்டு வந்தது என்பது பலருக்கும் தெரியாத உண்மை,. படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி தராமல் தயாரிப்பாளரையும் நடிகர் விஜய்யையும் திரையரங்க உரிமையாளர்களையும் கதற விட்டது ஆளுந்தரப்பு,.

தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அவர்களின் செல்வாக்கின் மூலமாக முதல்வரை மறைமுகமாக தொடர்பு கொண்டு போராடி சிறப்பு காட்சிக்கு அனுமதி வாங்கினார், அத்துடன் முடிந்ததா! சிறப்புக் காட்சிக்கு அனுமதி வாங்கி படத்தை திரையிடுவதற்கு முன்பு பலத்த அடியை நடிகர் விஜய் சந்தித்தார்,.

கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ஒளிபரப்பு காலம் தவறியதால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்து மிகப் பெரிய அளவில் அராஜகம் செய்தனர்., அங்குள்ள பேனர்களை கிழித்து கடைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள்,. அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை கலவரத்தில் ஈடுபட்டதால் அனைத்து தரப்பு மக்களையும் முகம் சுளிக்க வைக்கும் அளவில் நடந்த கொண்டனர்,.

படம் வெளியான பிறகு காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது வானவேடிக்கை பட்டாசுகளை கொளுத்தினார்கள்,. இதனால் காவல்துறையின் கடும் கோபத்திற்கு ஆளானார்கள் விஜய் ரசிகர்கள்,. இது சமூக வலைத்தளங்களை வைரலாகி அனைவரும் பார்வைக்கு சென்றது,. பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு அறிவுரை சொன்ன நடிகர் விஜய், தன்னுடைய பிகில் படத்திற்கு ரசிகர்கள் யாரும் தன்னுடைய படம் போட்டு பேனர் வைக்கவேண்டாம் என்று இதுவரையும் சொல்லவில்லை,. இந்த கேள்வியை அனைத்து தரப்பு மக்களையும் எழுப்ப வைத்ததில் நடிகர் விஜய் மட்டும் அவருடைய ‌ரசிகர்களையே சேரும்.

இந்த சூழ்நிலையில் கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட 50 விஜய் ரசிகர்களை அலாக்காக தூக்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது காவல்துறை,. இதில் 7 சிறுவர்களும் அடங்கும், அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்,. அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டதால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது,.

இதிலும் ஹைலைட்டாக பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி தரப்படவில்லை என்றால் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு புத்தூர் கட்டு, மாவு கட்டு போட வைப்போம் என்று சென்னையில் யூடியூப் சேனலில் விஜய் ரசிகர் பேசிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது,. கலக்கத்தில் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்,. இப்படி அடுத்தடுத்து ஆளும் தரப்பை பகைத்துக் கொண்டு தனது ரசிகர்கள் செய்யும் செயலை கண்டிக்காமல் நடிகர் விஜய் என்ன செய்யப்போகிறார் என்று தமிழக மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது,.

மேலும் 50 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து குரல் எழுப்ப போகிறாரா? ஆதரவாக வழக்கறிஞர் குழுவை அனுப்பி வழக்கை முடித்து வைப்பாரா? கிருஷ்ணகிரிக்கு சென்று அவர்களின் வீடுகளுக்கு சென்று நிதி உதவி கொடுப்பாரா? என்று விஜய் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்,.

திரையில் நாம் மாஸ் ஹீரோ என்று எண்ணி கொண்டிருந்தவர்கள் பிகில் திரைப்பட விஷயத்திற்கு பிறகு திரையில் மட்டும் தான் நாம் ஹீரோ! நிஜத்தில் அரசியல்வாதிகள் தான் ஹீரோ என்பதை அறிவார்கள்.

ரஜினிக்கு மத்திய அரசின் சிறப்பு விருது: அரசியல் லாபத்திற்கா?

0

ரஜினிக்கு மத்திய அரசின் சிறப்பு விருது: அரசியல் லாபத்திற்கா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு சிறப்பு விருதை ஒன்றை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று செய்தியாளர்களை சற்று முன் சந்தித்த மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் ’நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு விருது வழங்குவதாக அறிவித்தார், மேலும் இம்மாதம் கோவாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அவரை ஏற்கனவே பாஜகவின் ’பி’ டீம் என்று ஒரு சில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், ரஜினிகாந்துக்கு பாஜக அரசு அறிவித்துள்ள இந்த விருது அறிவிப்பு கூடுதல் சந்தேகத்தையும் ஏற்படுத்திவதாக ஒருசில அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது

இருப்பினும் இந்த விருதில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்றும் , கடந்த 44 ஆண்டுகளாக திரையுலகில் ரஜினி செய்த சாதனைக்காக கொடுக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவித்து தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனக்கு அளிக்கப்பட்ட விருதுக்காக மத்திய அரசுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்