கொள்ளை கூட்டத்தின் தலைவன் எடப்பாடி! மு.ஸ்டாலின் கடுமையான பிரச்சாரம்
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கடையம் பகுதியில் இன்று மாலை திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களை கடுமையாக சாடினார்.
மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக ராதாமணி அவர்கள் சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவும், அமைச்சர்களே அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதுவும் பேச மாட்டார்கள், அந்த அளவுக்கு சிறப்பாக அவர் பேசுவார்,
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனியாக உள் ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்றும், தலித் சமுதாயத்திற்கு 16 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 18 சதவீதமாக உயர்த்தியது கலைஞர் தான் என்றும் கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கோதாவரி காவேரி இணைப்புத் திட்டம், நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தி அனைவரும் வீட்டுக்கும் தண்ணீர் நேரடியாக தரப்படும் என்று போலிச்சாமியார் போல் பொய் கூறுகிறார்.
தமிழகத்தில் 32 அமைச்சர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் அமைச்சர்கள் அல்ல அது ஒரு கொள்ளைக் கூட்டம், அந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் எடப்பாடி பழனிச்சாமி, அவர்கள் ஏரி கால்வாய்களை தூர்வாருகிறார்கள் என்ற பெயரில் கொள்ளை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தூர்வாராத ஏரி குளங்களை கணக்கு காட்டி கொள்ளை அடிக்கும் நிகழ்வு தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இல்லை, ஜெயலலிதாவுக்கு நான் முதலமைச்சராக வாக்களித்தார்கள் அதுவும் ஒரு புள்ளி 1.1 வாக்கு சதவீதம் மட்டும்தான், மயிரிழையில் வெற்றி வாய்ப்பை திமுக தவறிவிட்டது, என்றும் அதுவும் சசிகலா காலில் விழுந்து தழுவி முதலமைச்சர் பதவியை பெற்றார் என்று கடுமையாக தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமியை சாடினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்! அதிர்ச்சியில் ஒளிபரப்பாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி மற்றும் தமிழில் மொழிகளில் சினிமா பிரபலங்களை வைத்து நடத்தப்படுகிறது, இதில் ஆபாசம் கள்ளக்காதல் போன்ற நிகழ்வுகள் தூண்டுகோலாய் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது, நிகழ்ச்சியை தடை வேண்டும் என்று கூறி வருகின்றனர், இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான நந்த் கிஷோர் குஜ்ஜார் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமான காட்சிகள் இடம்பெறுவதாகவும் சமூக பொறுப்பற்ற வகையில் உள்ள ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான நந்த் கிஷோர் குஜ்ஜார் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமான காட்சிகள் இடம்பெறுவதாகவும் சமூக பொறுப்பற்ற வகையில் உள்ள ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
அதேபோல் தமிழகத்தில் உள்ள நடுநிலையாளர்கள் தமிழ்நாட்டிலும் இந் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடமே கொள்ளை! விரைந்து செயல்பட்ட காவல்துறை
பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த கொள்ளையன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, திருடிய பொருள்கள் அனைத்தும் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பெண் மோடி. அவர், டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியிலுள்ள குஜராத் சமாஜ் பவனுக்கு ஆட்டோவில் சென்று இறங்கியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் தமயந்தி பெண் மோடி வைத்திருந்த ஹேண்ட் பேக்கை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து, தமயந்தி பெண் மோடி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்திருந்த புகாரில், அந்தப் பையில் 56,000 ரூபாய் பணமும், இரண்டு மொபைல் போன்களும், முக்கிய ஆவணங்களும் இருந்தன என்று குறிப்பிட்டிருந்தார். அந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதியில் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஆளுநர் ஆகியோரது இல்லங்களும் உள்ளன. முக்கிய தலைவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வழிப்பறி நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்நிலையில் தமயந்தி பென் மோடியின் புகாரையடுத்து, அந்த குற்றவாளிகளைப் பிடிக்க 20 குழுக்களைக் கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், தமயந்தி பென் பயணம் செய்த ஆட்டோவை அந்த இரு நபர்களும் 15 நிமிடங்களாக பின் தொடர்ந்தது தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களில், ஒருவரைக் காவல் துறையினர் இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 50 ரூபாய் பணத்தையும், இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு கொள்ளையனை பிடித்த காவல் துறையினரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மோகன்ராஜ் செல்போனில் ஆபாச உல்லாச வீடியோக்கள்! அதிர்ச்சியில் காவல்துறையினர்
ஏழு நாட்கள் காவலில் வைத்து மோகன்ராஜிடம் விசாரணை நடத்தவுள்ள நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் , இந்த கொடூரமான வழக்கில் பல பரபரப்பு நிலவும் எனது தெரிகிறது.
சேலத்தை அடுத்த வேம்படிதாளம் மதுரை வீரன்கோவில் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் வாலிபர் ஒருவரை ஹேமோ செக்சுக்கு அழைத்ததாக கொடுத்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக இருந்துள்ளார். இதற்கிடையே மோகன்ராஜ் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் 7 பெண்களை மிரட்டி கற்பழித்ததாகவும் தகவல் பரவியது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட செங்கல் சூளை வேலைக்கு சென்ற ஒரு பெண் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் ரூ. 2000 ரூபாய் கடனுக்காக மோகன்ராஜ் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்தார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் மீது பலாத்காரம், கொலை மிரட்டல், அடைத்து வைத்து தாக்குதல், ஆபாச படம் எடுத்து தாக்குதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறையில் இருந்த அவரை மீண்டும் கைது செய்தனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த 10-ந் தேதி கோர்ட்டில் ரகசிய வாக்கு மூலம் அளித்தார். அப்போது கோர்ட்டில் அனைத்து கதவுகளும் மூடப்பட்ட நிலையில் தனக்கு நடந்த பாலியல் வக்கிரம் குறித்து கண்ணீர் மல்க பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் மோகன்ராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி சேலம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்ற நடுவர் செந்தில்குமார் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கொடுத்தார். இதையடுத்து சிறையில் இருந்த ஆட்டோ டிரைவர் மோகன்ராஜை போலீசார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்து பரிசோதனை செய்தனர். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது விசிக ஆட்டோ தொழிற்சங்க தலைவர் மோகன்ராஜ் இதுவரை எத்தனை பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்தார், அதனை வீடியோவாக பதிவு செய்த செல்போன்கள் எங்கு உள்ளது. இதில் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் யார், யார் இருக்கிறார்கள்? என விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர் பயன்படுத்திய செல்போன்களையும் கைப்பற்றிய போலீசார் அதனையும் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த செல்போனில் மேலும் பல பெண்களின் ஆபாச படம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இளம் பெண்களையும், குடும்ப பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்தது தொடர்பான பல அதிர்ச்சி தகவல்களை போலீசாரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு திகைத்து போன போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பலாத்கார சம்பவத்தில் மோகன்ராஜிக்கு உதவிய நண்பர்கள் சிலரையும் போலீசார் வலைவீசித் தேடி வருகிறார்கள். அவர்கள் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தொடர்ந்து தேடி வருகிறார்கள். மோகன்ராஜிடம் நடைபெறும் விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் , இந்த கொடூரமான வழக்கில் பல பரபரப்பு நிலவும் எனது தெரிகிறது.
நடைமுறைக்கு வந்து பல மாதங்களாகியும் செயல்படுத்த முடியாத அவல நிலை-மருத்துவர் ராமதாஸ் ஆதங்கம்
பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்து பல மாதங்களாகியும் அவை முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்த வேண்டும்: கூடுதல் பொருட்களுக்கு விரிவாக்க வேண்டும்! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
சீன அதிபருடன் பேச்சு நடத்துவதற்காக கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விடுதியின் பின்புறத்தில் உள்ள கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடந்ததைக் கண்டு அவற்றை அப்புறப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை நடைமுறைக்கு வந்து 10 மாதங்களாகியும் அவை ஒழிக்கப்படவில்லை என்பதை இது உறுதி செய்கிறது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலும் பிளாஸ்டிக் பொருட்களை விட மனிதகுலத்திற்கு மிக மோசமான எதிரி இருக்க முடியாது. இதை உணர்ந்து தான் 20 ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் 2002-ஆம் ஆண்டு பசுமைத்தாயகம் நாளான ஜூலை 25-ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் இருந்து திரட்டி வரப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை சென்னையில் ஓரிடத்தில் கொட்டி, பின்னர் பாதுகாப்பாக அகற்றும் போராட்டத்தை நடத்தினோம்.
அதே நாளிலும், அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து 2012-ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் நாளிலும் பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டறிக்கைகளை சென்னை தியாகராயர் நகரில் கடை, கடையாகச் சென்று வழங்கினேன். 2005-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதன்தொடர்ச்சியாகவே 2018-ஆம் ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் நாளான ஜூன் 5-ஆம் தேதி தமிழகத்தில் பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கும் அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டப் பேரவையில் வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நடப்பாண்டின் தொடக்கத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்பின்னர் 10 மாதங்களான பிறகும் பிளாஸ்டிக் தடை முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதற்கு, கோவளம் கடற்கரையில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களும், குடிநீர் புட்டி போன்ற பிளாஸ்டிக் பொருட்களும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதே சாட்சியாகும்.
பிரதமர் தூய்மைப்பணி மேற்கொண்ட இடத்தில் மட்டும் தான் என்றில்லாமல் தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய பயோ பைகள், காகிதப் பைகள், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பைகள் போன்றவை பயன்பாட்டுக்கு வந்துள்ள போதிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக புழங்குவதை பார்க்க முடிகிறது. சாலைகளில் பயணம் செய்யும் போது சுங்கச்சாவடிகளுக்கு அருகிலும், கோயில்களிலும் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பைகள் குன்றுகளைப் போல குவிந்து கிடப்பது சாதாரணமான காட்சிகளாகி விட்டன.
பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்த போது அதை செயல்படுத்துவதில் காட்டப்பட்ட ஆர்வமும், தீவிரமும் காலப்போக்கில் குறைந்து விட்டது தான் இதற்குக் காரணம் ஆகும். பிளாஸ்டிக் தடையை செயல்படுத்துவதற்காக 1986-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் சட்டத்திலும், 1994-ஆம் ஆண்டு உள்ளாட்சிகள் சட்டத்திலும் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்சம் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். ஆனால், இந்த சட்டம் முழுமையாக பயன்படுத்தப்படாததால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கட்டுப்பாடுகள் இல்லாமல் அதிகரித்து விட்டது.
அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் பைகள், உறிஞ்சிகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. குடிநீர் புட்டிகள், எண்ணெய் மற்றும் பால் உறைகள் உள்ளிட்டவை தடை செய்யப்படவில்லை. இவற்றில் பெரும்பாலானவற்றை மறுசுழற்சி செய்ய முடியும் என்றாலும், மிகக்குறைந்த அளவிலேயே மறுசுழற்சி செய்யப்படுகின்றன; கிட்டத்தட்ட 90% பிளாஸ்டிக் பொருட்கள் குப்பைகளிலும், கடலிலும் தான் கொட்டப் படுகின்றன.
இன்றைய நிலையில் கடல்களில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எடை ஐந்தரை லட்சம் டன் ஆகும். கடலில் இறந்த திமிங்கிலங்களின் உடல்களில் குவிண்டால் கணக்கிலும், தரையில் இறந்த மாடுகளின் உடல்களில் கிலோ கணக்கிலும் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மற்றொருபுறம் பிளாஸ்டிக் கலந்த குப்பைகளை எரிக்கும் போது வெளிப்படும் நச்சு வாயுக்கள் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
நீரிலும், நிலத்திலும் நிறைந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மீன்களும், கால்நடைகளும் உட்கொள்வதால், நமது உணவில் மீன்கள் மற்றும் இறைச்சியை சேர்த்துக் கொள்ளும் நாமும் அவற்றின் வழியாக பிளாஸ்டிக் எனும் நஞ்சை உட்கொள்கிறோம். பிளாஸ்டிக் பொருட்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நூறு பொருட்களுடன் நூற்றி ஒன்றாவது பொருள் என்ற அலட்சியமான எண்ணம் மக்களின் மனதிலிருந்து அகற்றப்பட வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உணரச் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத உலகம் தான் உன்னத உலகம் என்பதை உணர வேண்டும்.
அத்தகைய உலகத்தை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை சட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அத்துடன் குடிநீர் புட்டிகள், எண்ணெய் – பால் உறைகள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டில் உள்ள பிற பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
திமுக கட்சியே கிடையாது அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி! எடப்பாடியின் தெறிக்கும் பிரச்சார பேச்சு
தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள முண்டியம்பாக்கம்,ராதாபுரம் போன்ற இடங்களில் இன்று பிரச்சாரம் செய்தார்,
திமுகவையும் அதன் தலைவர் மு.க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசினார், தான் ஒரு விவசாயி, விக்ரவாண்டி தொகுதி விவசாயிகள் நிறைந்த தொகுதி என்றும் விவசாயியான வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் திமுக ஒரு கட்சியே இல்லை, அது ஒரு கார்பரேட் கம்பெனி என்றும் இதில் டைரக்டர்களாக ஸ்டாலின்,பொன்முடி,ஏ.வ. வேலு போன்றவர்கள் தான் இருக்கிறார்கள் அவர்களின் வாரிசுகள் மட்டுமே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக வரமுடியும் என்று கடுமையாக விமர்சித்தார்,
மு.க.ஸ்டாலின் தனது தந்தையான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் செல்வாக்கில் திமுகவிற்கு தலைவராக வந்தவர் என்றும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி தலைவராகவும் நியமித்து விட்டார் என்று கடுமையாக விமர்சித்தார்.
கேபிள் கட்டணத்தை குறைக்கிறேன் என்று ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிக்கை நாடாளுமன்ற தேர்தலில் இருந்தது, ஆனால் 40 சேனல்கள் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன என்றும் நான் 259 ரூபாய் இருந்த கேபிள் சேனல்களை 159 ரூபாயாக குறைத்து மக்களுக்கு பயன் அடைய செய்தேன் என்றும் குறிப்பிட்டார்.
திமுகவை சேர்ந்த குடும்பத்தினர்கள் மட்டும்தான் அக்கட்சியை அலங்கரிக்க முடியும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கு புண்ணியம் செய்து இருக்க வேண்டும், நாங்கள் புண்ணியம் செய்தோம் முதலமைச்சர் பதவி கிடைத்தது, வெறும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் முதலமைச்சராக ஆகி விடலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறார்,
அவர் ஜப்பான் நாட்டின் துணை முதலமைச்சராக ஆகலாமே தவிர தமிழக முதலமைச்சராக முடியாது என்று கிண்டல் செய்தார், எனக்கு 122 சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு இருப்பதனால் தான் நான் முதலமைச்சராக இருக்கிறேன்,
அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் மட்டும்தான் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினராக, முதலமைச்சராகவும் வரமுடியும், திமுகவில் வாரிசு அடிப்படையிலேயே பதவிக்கு வரமுடியும் என்று அவர் பேச்சில் அனல் பறந்தது.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால் வேண்டிய இடத்தில் அணைகட்டுகள் கட்டப்படும் என்றும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரே மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார், திமுக வெற்றி பெற்றால் எண்ணிக்கை தான் அவர்களுக்கு எண்ணிக்கை தான் கூடுமே தவிர, வேறு ஏதும் நடக்காது, அதிமுக வெற்றி பெற்றால் விக்கிரவாண்டி மக்களுக்கு நன்மைகள் பல கிடைக்கும் என்றும் தெரிவித்தார்,
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தார்கள், ஆனால் வேலூர் தேர்தலில் நூலிழையில் வெற்றி பறிகொடுக்கப்பட்டது,
அதுவும் 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 சட்டமன்றத்தொகுதிகள் அதிமுகவும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் திமுகவும் அதிக வாக்குகள் வாங்கினோம், ஸ்டாலினின் பொய்யான வாக்குறுதிகளை வேலூர் மக்கள் நிராகரித்து விட்டனர், இதன் காரணமாகவே மு.கஸ்டாலின் அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தொடுத்து வருகிறார் என்று திமுகவை கடுமையாக சாடினார் அவரது பேச்சில் இன்று அனல் பறந்தது.
மாமல்லபுரத்தில் சந்திப்பு நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தான் விரும்பினார்! விஜய் கோகலே
பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆலோசனையின் போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், இரு நாட்டு தலைவர்கள் இடையே இன்று 90 நிமிடங்கள் ஆலோசனை நடந்தது. தொடர்ந்து பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் மோடி, ஜின்பிங்கிற்கு விருந்தளித்தார். மொத்தமாக இரு நாட்டு தலைவர்களும் 6 மணி நேரம் பேசினர். வர்த்தகம், முதலீடு, சேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, இது குறித்து பேச நிதியமைச்சர்கள் அளவிலான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இரு நாட்டு மக்களிடையேயான உறவில் புதிய கவனம் செலுத்தப்பட உள்ளது. இது பற்றி யோசனைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. காஷ்மீர் விவகாரம் குறித்து எந்த பேச்சும் நடத்தப்படவில்லை. எந்த குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பு குறித்தும் பேசப்படவில்லை. பொதுவான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தே ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களின் நமது நிலைப்பாடு குறித்து தெளிவான தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகள் இடையே ராஜாங்க ரீதியிலான உறவை மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. சீனா வர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு மோடியும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். மோடி சீனா செல்லும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். சிறப்பான வரவேற்பு அளித்த தமிழக மக்களுக்கு ஜின்பிங் நன்றி தெரிவித்தார். மானசரோவருக்கு யாத்திரை செல்லும் வசதி செய்யப்பட ஜின்பிங் கோரினார். சீனா – தமிழகம் இடையேயான உறவை அதிகரிக்கவும் மோடி பல கருத்துக்களை கூறினார்.
சீனாவில் உள்ள சிவன் கோயிலில் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்ரான் கானின் சீன பயணம் குறித்தும் ஜின்பிங், மோடியிடம் தெரிவித்தார். இருநாட்டு உறவில் சில பிரச்னைகள் உள்ளன.அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணவே இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு நடந்தது. சென்னையில் சீன தூதரகம் அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கோகலே, உலக பாரம்பரிய தலம் என்பதாலேயே இருநாட்டு தலைவர்களும் சந்திக்க மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது. சென்னையில் சந்திப்பு நடைபெற வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருந்தார். மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் மோடியே. இந்த சந்திப்பை வேறு எங்கும் நடத்துவது குறித்து மத்திய அரசு யோசிக்கவில்லை என்றார். இந்த சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடை தமிழக அரசு செய்தது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறினார்.
சென்னை: தர்பூசணி பழத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கின் உருவத்தை செதுக்கி
அனைவரும் ஆச்சரியப்படுத்தி
இருக்கிறார் தமிழக இளைஞர் ஒருவர்.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச்
சேர்ந்தவர் இளஞ்செழியன்.
வயது 31. சமையல் தொழிற்நுட்பத்தில் பட்டம் பெற்று,
கல்லூரிகளில் பழங்கள் செதுக்கும் கலையை கற்பித்து
வருகிறார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்,
புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆகியோரின் உருவங்களை
செதுக்கியவர். தற்போது, தர்பூசணியில் மோடி, ஜின்பிங் படத்தை வரைந்து அசத்தி உள்ளார்.
அந்த பழத்தில், ஜின்பிங் மற்றும் பிரதமா் மோடி ஆகியோரின் உருவத்தை செதுக்கி வெல்கம்
டு இந்தியா என ஆங்கிலத்திலும், சீன மொழி எழுத்துகளிலும் செதுக்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: சரியான சைஸ்,
எடை கொண்ட பழத்திற்காக சில நாட்கள் காத்திருந்தேன். தர்பூசணி பழத்தில் இருநாட்டு தலைவர்களின் உருவத்தை செதுக்கி
இருக்கிறேன்.
இந்த கலை சீனாவில் மிக பிரபலம். ஏனோ என்னால் முடிந்த அளவு சிறப்பாக செய்திருக்கிறேன். இந்த கலையை அனைவருக்கும் கற்று தர ஆசை என்றார் இளஞ்செழியன். அவரின் இந்த திறமை, ஆர்வத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும்
இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக
செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப
செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள்
பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது
News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.
மேலும்
தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை
கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.
ஓசி பிரியாணி மற்றும் ஓசி டீ வரிசையில் திமுகவினர் செய்த அடுத்த அட்டூழியம்
திமுகவிற்கும் ரவுடியிசம்,அட்டூழியம் செய்வதற்கும் பல வருடங்கள் தொடரும் உறவு போல மாதா மாதம் ஏதாவது ஒரு அதிரடி காட்டி பொது மக்களிடம் அசிங்கபட்டு நிற்பதே அவர்களுக்கு வழக்கமாகி விட்டது.அந்த வகையில் சமீபத்தில் திமுக பிரமுகர் ஒருவர் வயதான தம்பதியினரை தாக்கி பொது மக்களிடம் சிக்கியுள்ளார்.
சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த தசரதன், திமுகவில் 32 வது வட்ட துணை செயலாளாராக பதவி வகித்து வருகிறார். இதன் மூலம் அவர் வசிக்கும் பகுதியில் இவர் பவர்ஃபுல் அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது இந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்ற அரசியல் நிர்வாகிகள்,அதிகாரிகளை மிரட்டியும், தொழில் அதிபர்களை மிரட்டியும் வருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ரெட்டை ஏரி லட்சுமிபுரம் வில்லிவாக்கம் சாலையில் ஸ்ரீவாரி என்ற சூப்பர் மார்கெட் புதிதாக போன மாசம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனையடுத்து ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு அந்த சூப்பர் மார்க்கெட்டில் ஆயுத பூஜை போட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆயுத பூஜை அன்று செம்ம போதையில் இருந்த தசரதன் மார்க்கெட்டுக்குள் போயிருக்கிறார்.
அதனையடுத்து அங்கே கடை வைத்திருந்தவர்களிடம் வலிய சண்டைக்கு போனார் என்றும் கூறப்படுகிறது. “எப்படி நீ கடையை திறந்தே.. என்னை கேக்காம எப்படி கடையை திறந்தேன்னு கேட்டதாகவும்.. எனக்கு தர வேண்டியதை முதல்ல கொடு” என்று தகராறில் ஈடுபட்டதாகவும் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அப்பொழுது அந்த கடையின் அருகே வசித்து வந்த முதியவர் முத்துவும், அவரது மனைவியும் இவரது இந்த அட்டூழியத்தை தடுக்க முயன்றுள்ளனர்.
இதை கண்டதும் அந்த கடை பகுதியில் வசித்து வரும் மேலும் ஒரு வயதான தம்பதி, தசரதனை சமாதானம் செய்ய போயிருக்கிறார்கள். ஆனால்,காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு அவர்களை பச்சை பச்சையான வார்த்தைகளால் தசரதன் திட்டியிருக்குறார். ஒரு கட்டத்தில் அவர்களை காலாலேயே எட்டி உதைத்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள். இதை சம்பந்தபட்ட அந்த பெரியவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அதனால் அவர் சத்தமாக கத்தவும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து திமுக பிரமுகர் தசரதனை மடக்கி பிடித்தனர். அப்போதும், ஒரு நபர் தசரதனை இழுத்து பிடித்து நிற்க வைத்து சமாதானம் செய்தார். ஆனாலும் தசரதன் அடங்கவில்லை, “மாமா.. நான் ஒரு தப்பும் பண்ணல.. என்னை ஏன் எல்லாரும் அடிக்க வர்றாங்க” என்று திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தார். இறுதியில், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் திமுக பிரமுகர் தசரதன் மீது புகார் தந்தனர்.
இப்படித்தான், இதற்கு முன் மஜாஜ் சென்டரில் பெண்ணை தாக்குவது, ஓசி பிரியாணி கேட்டு பிரியாணி கடையை அடித்து உடைப்பது,எதிர்த்து கேட்ட கடை காரரின் மூக்கை உடைத்தது,சொந்த கட்சி பெண் நிர்வாகியின் இடுப்பை கிள்ளியது என்று திமுகவினர் வன்முறைகள் அதிகமாகி கொண்டே வந்தது. இந்நிலையில் போன மாதம், முத்துவேல் என்பவர் கடன் வாங்கி தருவதாக கூறி 100 கோடி ஏமாற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதே போல 2 நாளைக்கு முன்பு, 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த எஸ்எஸ்.பாண்டியன் என்பவர் போக்சோவில் கைதானார்.
இப்படி தொடர்ச்சியான அராஜகம் மற்றும் அட்டூழியங்களை திமுக பிரமுகர்கள் செய்து வருவது அக்கட்சி தலைமைக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்போது இந்த தசரதன் அந்த பெரியவரை எட்டி உதைத்து தாக்கும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கட்சி தலைமை இதில் உடனடியாக தலையிட்டு, பெயரை கெடுக்கும் விதத்தில் யார் இப்படி அராஜகம் மற்றும் அட்டூழியங்கள் செய்தாலும் அவர்களை களையெடுக்க வேண்டும்.அதுவே அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று தரும்.
சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்திருக்கிறார்.
மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்
செல்வம் உள்ளிட்டோர்
வரவேற்றனர்.
வரவேற்பு முடிந்து, ஹெலிகாப்டரில் மோடி கோவளம் சென்ற மோடி நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் வரும் ஜின்பிங்கை வரவேற்கிறார். இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்பங்களை பார்வையிடுகின்றனர்.
அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் ஆகியவைகளை பார்வையிடும் அவர்கள், தொடர்ந்து கடற்கரை கோயில் அருகில் நடைபெறும் பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளை பார்க்கின்றனர்.
அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஜிங்பிங்
வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ், சீன மொழிகளில் அவர் அந்த டுவீட்டை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை வந்திறங்கி உள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு
பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ் நாட்டுக்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சீன அதிபர் ஜிங்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா, சீனா இடையேயான உறவு, இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும்
இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக
செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப
செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள்
பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4
Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.