Saturday, November 16, 2024
Home Blog Page 5104

கோவை அருகே சூலூரில் இரண்டு விமானப்படை அதிகாரிகளின் பிள்ளைகள் மாயம்

0

கோவை அருகே சூலூரில் இரண்டு விமானப்படை அதிகாரிகளின் பிள்ளைகள் மாயம்

கோவை: கோவையை அடுத்த சூலூரில் விமானப்படை விமானத்தளம் இயங்கி வருகிறது.இங்கு உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் விமானப்படை அதிகாரிகளின் பிள்ளைகள் மற்றும் வெளியில் இருந்தும் ஏராளமான மாணவர்,மாணவியர் கற்கின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கேடல் மற்றும் வருன் இருவரும் விமானப்படை அதிகாரிகளின் பிள்ளைகள் ஆவர். இந்த இருவரும் வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பி புறப்பட்டு பின் வகுப்பு செல்லாமல் வெளியில் சென்றுள்ளனர்.

வெகு நேரமாகியும் பிள்ளைகள் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் அருகே உள்ள சூலூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க இரண்டு பிள்ளைகளையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த இருவரின் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் காணாமல் போன மாணவர்களை கண்டு பிடிக்க விமானப்படை விமானத்தளம் மூலமாக இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தகவல்: ஜெயக்குமார்,கோவை

உடல் பருமனுக்கு சிகிச்சை உண்டா ?

0

உடல் பருமனுக்கு சிகிச்சை உண்டா ?

நம் மக்களுக்கு பொதுவாகவே ஓர் எதிர்பார்ப்பு உண்டு ,எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஒரே நாளில் ஒரே மாத்திரையில் சரியாக வேண்டும் என்றே பேராசைப்படுவார்கள்.உடல் பருமன் விஷயத்திலும் அப்படித்தான்.தொடர்ச்சியாக உடல் எடை குறைய வேண்டுமென்றால் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிர்சியுமே ஒரே தீர்வு.மருந்து மாத்திரைகளை தவிர்த்து, உடல் பருமனுக்கான சிகிச்சை என்று பார்த்தல் அறுவைச் சிகிச்சை முறையைச் சொல்லலாம். தாங்களாகவே உடல் எடையை குறைக்க முடியாதவர்கள்,கடுமையான உடல் பருமனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அறுவைச் சிகிச்சை முறை பயன்படுகிறது.குறிப்பாக பி.எம்.ஐ  அளவீடு அல்லது அதற்கு மேல் கொண்டவர்களுக்கு, அறுவைச் சிகிச்சை முறை கை கொடுக்கிறது.

           இரைப்பை பைபாஸ்,லேப்ரோசகோபிக் கேஸ்டிறிக் பேண்டிங் ஆகிய இரண்டு சிகிச்சை முறைகள் தற்போது பின்பற்றபடுகின்றன.

இரைப்பை பைபாஸ் முறையில்,உட்கொள்ளப்படும் உணவில் குறைந்த அளவு உணவே, குடல் பகுதியால் உறிஞ்சிக் கொள்ளப்படும் வகையில், ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதியை பைபாஸ் செய்து விடுவார்கள்.இதனால், உண்ணும் உணவில் பெரும்பகுதி உறிஞ்சிக்கொள்ளப்படாமல் தவிர்க்கப்படும்.இதனால் உடல்எடை கூடாமல் தடுக்கமுடியும்.

 இரண்டாவது முறையில், அறுவைச்சிகிச்சை மூலம் வயிற்றின் கொள்ளளவு குறைக்கப்படும்.இதனால் குறைந்த அளவே சாப்பிட முடியும்.

இந்த அறுவை சிகிச்சை மூலமாக ,40 முதல் 50 வரை எடையைக் குறைக்க முடிகிறது என்பதால், கடுமையான உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பெரிதும் கை கொடுக்கிறது. பாதிக்கபட்டவர்கள் இளம் வயதினராக இருக்கும்பட்சத்தில் ,அவருக்கு இருக்கும் சர்க்கரை நோய்,ரத்தகொதிப்பு,மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் முழுமையாக விடுபட,அறுவைச்சிகிச்சை முறைகள் உதவுகின்றன.

டைப் 2 வகை சர்க்கரை நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு இவை நல்ல தீர்வை வழங்குகின்றன. ஆனால், இதுபோன்ற அறுவைச்சிகிச்சைகளால், உணவின் மூலமாகக் கிடைக்கும் சில முக்கியமான ஊட்டச்சத்துகளையும் விட்டமின்களையும் உறிஞ்சிக்கொள்ளமுடியாமல் போகலாம். எனவே இவர்கள், பி-காம்ப்ளெக்ஸ் போன்ற வைட்டமின் மாத்திரைகளை, வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளவேண்டி வரலாம்.

       மேற்சொன்ன சிகிச்சை முறையைத் தாண்டி, நடத்தை முறை மாற்றங்கள் சிலருக்கு பெரிதும் பலன் அளிக்கின்றன.ஆங்கிலத்தில் இதை behaviour modification என்பார்கள். உணவுக்கட்டுபாடு மற்றும் உடற்பயிற்சி குறித்த மக்களின் எண்ணத்தை மாற்றி அமைப்பதே இதன் அடிப்படை.

பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக மாசு ஏற்படுத்தாத ஹைட்ரஜன் என்ஜீனை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்

0

பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக மாசு ஏற்படுத்தாத ஹைட்ரஜன் என்ஜீனை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்

ஹைட்ரஜன் என்ஜீன் கண்டுபிடிப்பை தொடரக்கூடாது என ஆராய்ச்சியாளருக்கு கடிதம் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளரிடம் ஆராய்ச்சியாளர் சௌந்தரராஜன் குமாரசாமி புகார் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன் குமாரசாமி. இவர் பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் என்ஜீன் எனப்படும் வாகன என்ஜீனை கண்டுபிடித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்பிற்கு இந்திய அரசின் அங்கீகாரம் கிடைத்ததையடுத்து
ஜப்பான் நாட்டில் இதற்கு உரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த எஞ்சினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இதற்கான அலுவலகப் பணிகள் ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த புது கண்டுபிடிப்பு தொடர்பாக ஆராய்ச்சியாளருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் லஷ்கர்-இ-தைபா அமைப்பு பெயரில் மிரட்டல் கடிதம் இவருக்கு வந்ததுள்ளது.

இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்த புதிய கண்டுபிடிப்பை எந்த நாட்டிலும் தொடரக்கூடாது தொடர்ந்தால் கொலை செய்யப்படுவீர்கள் என ஆராய்ச்சியாளர் சுந்தரராஜன் வீட்டிற்கு கடந்த 14ஆம் தேதி கடிதம் மூலம் மீண்டும் மிரட்டல் வந்துள்ளது.

ஆனால் தற்போது வந்துள்ள கடிதத்தில் எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில் இந்த புகாரின் பேரில் எனக்கு பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தி ஆராய்ச்சியாளர் சுந்தர்ராஜன் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் சார்ந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளருக்கு தீவிரவாதிகளின் பெயரிலும், பெயர் குறிப்பிடாமலும் கொலை மிரட்டல் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: ஜெயக்குமார்,கோவை

திமுக பனங்காட்டு நரி அது எந்த சலசலப்புக்கும் அஞ்சாது-ஸ்டாலின்

0

பாஜக தலைமையிலான மத்திய அரசிற்கு எதிரான இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் வாங்கியதால் திமுக பயந்து ஒதுங்கவில்லை என்றும், போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருகிறது எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மறைந்த திமுக நிர்வாகியான ஆயிரம் விளக்கு உசேன் அவர்களின்  நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தி எதிர்ப்பு போராட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் ஒத்தி தான் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் நடப்பதற்கு முன்னதாக புதன் கிழமை காலை ஆளுநர் மளிகையில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆளுநர் தன்னை சந்திக்க விரும்புகிறார் என ராஜ்பவனில் இருந்து அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் நாடாளுமன்ற உறுப்பினர்  டி.ஆர்.பாலுவுடன் ஆளுநரை சந்திக்க சென்றதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், அந்த சந்திப்பில் திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னிடம் விளக்கமாக கேட்டதாகவும், அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்தியாக வந்துள்ளது, மேலும் இந்தியை திணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பேசவில்லை என்றும் எடுத்துக் கூறியதாக தெரிவித்தார்.

மேலும், நான் மத்திய அரசின் பிரதிநிதி என்னை நம்புங்கள் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னிடம் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். மேலும் ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா அறிவாலயத்துக்கு காரில் சென்று கொண்டிருக்கும் போதே, அமித்ஷா தனது கருத்து பற்றி விளக்கம் அளித்தார், இதையடுத்தே கட்சி நிர்வாகிகளுடன்  கலந்து பேசி போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்தோம் என்று தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

திமுக சரணடைந்துவிட்டதாகவும், பயந்து ஒதுங்கிக் கொண்டதாகவும் சில ஊடகங்கள் திட்டமிட்டே செய்தியை திரித்துக் கூறி வருகின்றன என்றும், திமுகவை பொறுத்தவரை பனங்காட்டு நரி அது எந்த சலசலப்புக்கும் அஞ்சாது எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். முன்னதாக ஆயிரம் விளக்கு உசேன் திமுகவிற்காக ஆற்றிய பணிகள் குறித்தும் பேசினார்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு கொடை வள்ளல் ஆயிரம் காணி ஆளவந்தார் பெயரை சூட்ட அரசிற்கு தமிழக மக்கள் கோரிக்கை

0

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு கொடை வள்ளல் ஆயிரம் காணி ஆளவந்தார் பெயரை சூட்ட அரசிற்கு தமிழக மக்கள் கோரிக்கை

சென்னை மாநகருக்கு வீராணம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும் கோடை நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாகவே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட ஒரு லாரி தண்ணீரின் விலை ஒரு கிராம் தங்கத்தை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டதை நாம் அறிவோம்.

சென்னைவாசிகளின் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வைக்காண 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெமிலி பகுதிக்கு அருகே சூளேரிக்காடு பகுதியில் தொடங்கப்பட்டது. இதற்காக 40.5 ஏக்கர் நிலம் நெமிலி பகுதியில் அமைந்திருக்கும் கொடைவள்ளல் ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளையிடம் இருந்து பெறப்பட்டது.

2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முடிவடைந்தது ஆனாலும் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படாததால் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து மொத்தம் 6078 கோடியே 40 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளது. இரண்டாம் கட்டமாக விரிவாக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கும் அதே ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளையிடமே 85.91 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது.

Ayiram Kaani Alavandar-News4 Tamil Latest Online Tamil News Channel
Ayiram Kaani Alavandar-News4 Tamil Latest Online Tamil News Channel

பொதுவாக அரசு திட்டங்களை நடைமுறைப் படுத்தும் போது திட்டம் செயல்படும் இடம் அரசின் நிலமாக இல்லாத போது, அந்த இடம் யாரிடம் இருந்து பெறப்படுகிறதோ அவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயரிலேயே திட்டம் செயல்படுத்தப்படும். ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட வணிக நகரம் அமைக்க சென்னப்ப நாயக்கர் என்பவர் இடம் கொடுத்தார் என்பதற்காக அந்த நகருக்கு அவருடைய பெயரையே சூட்டி சென்னப்பநாயகர் பட்டினம் என பெயரிட்டார்கள். அந்த பெயரே காலப்போக்கில் மருவி சென்னை என அழைக்கப்படுகிறது.

அரசு ஒரு கல்லூரியை தொடங்கினால் கூட நிலம் அரசு நிலம் இல்லை எனில் நிலத்தின் கொடையாளி யாரோ அவருடைய பெயரை தான் கல்லூரியின் பெயராக சூட்டும் அது தான் நடைமுறை வழக்கம், ஆனால் இந்த திட்டத்தை அறிமுகம் செய்த திமுக தலைமையிலான அன்றைய தமிழக அரசும், திட்டத்தை இரண்டாம் கட்டத்தை நோக்கி விரிவாக்கம் செய்யும் இன்றைய அதிமுகவும் சரி இந்த மகத்தான திட்டத்திற்கு நிலம் வழங்கிய ஆயிரம் காணி ஆளவந்தார் பெயரை சூட்டாமல் தொடர்ந்து அவரை புறக்கணிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Aayiram-Kaani-Alavanthar-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today
Aayiram-Kaani-Alavanthar-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

அதே போல அரசு திட்டத்திற்கு நிலம் வழங்குவோர்க்கு அந்த திட்டத்தில் வேலை வாய்ப்பு தருவதும் வழக்கமான ஒன்று தான் ஆனால் அதுவும் இங்கே பின்பற்ற படவில்லை எனவும் கூறி வருகிறார்கள். தமிழக அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டத்திற்கு ஆயிரம் காணி ஆளவந்தார் பெயரை சூட்டுவதோடு அந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு அந்த திட்டத்தில் வேலை வாய்ப்பையும் தர முன்வர வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சௌந்தராஜன் ஆரம்பித்த சர்ச்சை! அலறும் அரசியல் கட்சிகள்

0

தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற தமிழிசை சௌந்தராஜன் ஆரம்பித்த சர்ச்சை! அலறும் அரசியல் கட்சிகள்

ஐதராபாத்: தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தராஜன் சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக பதவியேற்றுள்ளார். தமிழக பா.ஜ. முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற பின் அம்மாநில பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க முடிவு செய்துள்ளார். இது ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக பதவியேற்றார். 

ஐதராபாத்: தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தராஜன் சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக பதவியேற்றுள்ளார். தமிழக பா.ஜ. முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற பின் அம்மாநில பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க முடிவு செய்துள்ளார். இது ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு ஆட்சி செய்து வருகிறது.தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தற்போது அங்கு கவர்னராக பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில் தமிழிசை சௌந்தராஜன் பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க முடிவு செய்துள்ளார். இம்மாநிலத்தைச் சேர்ந்த மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரிக் அமைப்பின் தலைவர் அஜ்மத் உல்லாஹ் கான் சமூக வலைதளத்தில் ‘மக்களை சந்தித்து குறைகளை கேட்பீர்களா’ என சமீபத்தில் கேட்டிருந்தார். அதற்கு அவர் அளித்த பதிலில்’மக்களை சந்திக்க ஏற்கனவே திட்டமிட்டு உள்ளேன்’ என தமிழிசை சௌந்தராஜன் கூறி உள்ளார். இது ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

”கவர்னர் பதவி என்பது அரசியல் சாசனப் பதவி. மற்ற மாநிலங்களிலும் கவர்னர்கள் இதுபோல மக்கள் குறைகளை கேட்டால் சட்ட விதிகள் அனுமதி அளித்தால் அவர் மக்களை சந்திப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என இது குறித்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி செய்தித் தொடர்பாளரும் சட்டசபை கொறடாவுமான ராஜேஸ்வர் ரெட்டி கூறியுள்ளார்.மேலும் இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதாவது: அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி இல்லையே. எப்படி மக்களை சந்தித்து குறைகளை கேட்கலாம். அதற்கு தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. தன் பதவிக்குரிய எல்லையை மீறாமல் இருப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றும் அவர்கள் கூறினர்.

புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி கிளப்பியது போல தெலுங்கானா மாநிலத்தில் தமிழிசை சௌந்தராஜனும் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார்.இவர் என்ன செய்வாரோ என ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கலக்கத்தில் உள்ளன.

தமிழ்நாட்டில் மரங்களை பாதுகாக்க மரங்கள் ஆணையத்தை ஏற்படுத்துக! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

0

தமிழ்நாட்டில் மரங்களை பாதுகாக்க மரங்கள் ஆணையத்தை ஏற்படுத்துக! மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

மரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்கள் சட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதுடன், அதை செயல்படுத்த மரங்கள் ஆணையத்தையும் தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

தமிழ்நாட்டில் அனுமதியில்லாமல் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும், மரங்களை பாதுகாப்பதற்கும் மரங்கள் சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அறிவுறுத்தியுள்ளது. மரங்களை மட்டுமின்றி, மரங்களின் வழியாக பொதுமக்களையும் பாதுகாக்க மரங்கள் சட்டம் அவசியம் என்பதால் உயர்நீதிமன்றத்தின் இந்த யோசனை வரவேற்கத்தக்கது.

மதுரையில் நெடுஞ்சாலை பாலம் அமைப்பதற்காக 80-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ட நிலையில், மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் மரங்களை வெட்டி வீழ்த்துவதை விட, அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடங்களில் நடலாம் என்று அறிவுரை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், மரங்களை பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டாலாவது அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்கவும் வழி பிறக்காதா? என்ற வினாவை ஏக்கத்துடன் எழுப்பியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த அக்கறை நேர்மையானது; எதிர்பார்ப்பு நியாயமானது. மரங்களை பாதுகாப்பதில் இதே அக்கறையையும், நேர்மையையும் பாட்டாளி மக்கள் கட்சி கொண்டுள்ளது. அதன் வெளிப்பாடாகவே பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் கூடுதலான மரக்கன்றுகளை நட்டிருப்பதுடன், வளர்ந்த மரங்களை பாதுகாத்தும் வருகிறது. அதுமட்டுமின்றி, மரங்களை பாதுகாப்பதற்காக மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

மரங்கள் ஆணையம் அமைப்பதற்காக தமிழ்நாடு மரங்கள் பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் இயற்ற வேண்டும். அந்த சட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும். மரங்கள் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, தமிழகத்தின் எந்த பகுதியிலும், எந்த பணிக்காகவும் மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்றால், அதற்கான அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் மரங்கள் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த கோரிக்கையை ஆய்வு செய்யும் மரங்கள் ஆணையம், கள ஆய்வு மேற்கொண்டு தவிர்க்க முடியாத தேவை இருந்தால் மட்டுமே மரங்களை வெட்ட அனுமதி அளிக்கும். அவ்வாறு அனுமதி அளிக்கும் பட்சத்தில் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக எவ்வளவு மரக்கன்றுகள் எந்தெந்த பகுதிகளில் நடப்பட வேண்டும் என்பது குறித்தும் மரங்கள் ஆணையம் ஆணை பிறப்பிக்கும்; அந்த ஆணைப்படி புதிதாக மரங்கள் நடப்படுவதையும் ஆணையம் கண்காணிக்கும். இதன்மூலம் மரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், தமிழகத்தின் பசுமைப்பரப்பும் விரிவுபடுத்தப்படும். மொத்தத்தில் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விஷயத்தில் மரங்கள் ஆணையம் மிகப்பெரிய கவசமாக திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழ்நாட்டில் மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஒரே கட்சி பா.ம.க. தான். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பின் கீழ் இதற்கான வாக்குறுதியை பா.ம.க. வழங்கியிருந்தது. அதுமட்டுமின்றி, இதே கோரிக்கையை வலியுறுத்தி 2016-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கையெழுத்து இயக்கம் நடத்தினார். அதற்கெல்லாம் மேலாக சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் மரங்கள் ஆணையம் மற்றும் பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கூறப்பட்ட போது, அதை ஏற்றுக் கொண்ட இதே நீதியரசர் சிவஞானம் அவர்கள் தலைமையிலான அமர்வு, தமிழகத்தில் மரங்கள் ஆணையம் அமைக்கப்படுமா? என்று வினா எழுப்பியது. இப்போது இரண்டாவது முறையாக நீதியரசர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கு முன் 2007-ஆம் ஆண்டிலேயே மரங்கள் சட்டத்தை இயற்ற உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக அரசு மரங்கள் சட்டத்தை நிறைவேற்றத் தவறிவிட்டது.

மரங்களை பாதுகாக்க வேண்டியது சாதாரண காலத்திலேயே மிகவும் அவசியம் ஆகும். இப்போது புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகள் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இது மேலும் அவசியமாகிறது. எனவே, மரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்கள் சட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதுடன், அதை செயல்படுத்த மரங்கள் ஆணையத்தையும் தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திருப்பதி திருமலையில் அதிமுக எம்.எல்.ஏ உட்பட நான்கு தமிழர்களுக்கு பதவி! ஆந்திர அரசு அரசாணை.

0

தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட 28 பேர் திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டதற்கான அரசாணையை ஆந்திர அரசு நேற்று (செப்., 18) வெளியிட்டது.

இதில் தமிழகத்திலிருந்து வைத்தியநாதன், இந்தியா சிமென்டஸ் தலைவரும் சென்னை கிங்ஸ் உரிமையாளருமான என்.சீனிவாசன், மருத்துவர் நிச்சிதா மற்றும் அதிமுகவின் உளுந்துார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உள்ளிட்டோர் திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் ஏற்படுத்தப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது. அதன்பின் புதிய அரசு அறங்காவலர் குழு தலைவராக சுப்பா ரெட்டியை நியமித்தது. இவர் பதவி ஏற்று இரண்டு மாதங்கள் ஆன நிலையில் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களை நேற்று ஆந்திர அரசு நியமித்து அரசாணை வெளியிட்டது.

இதற்கு முன் 16 உறுப்பினர்களுடன் இருந்த அறங்காவலர் குழுவை தற்போதைய ஜெகன்மோகன் தலைமையிலான அரசு 24 ஆக உயர்த்தியுள்ளது. இவர்களுடன் ஆந்திர அறநிலையத்துறை தலைமை செயலர், அறநிலையத் துறை கமிஷனர், தேவஸ்தான செயல் அதிகாரி, திருப்பதி நகர்புற வளர்ச்சி கழகத்தின் தலைவர் ஆகியோரும் அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவிலிருந்து எட்டு பேர்; தெலுங்கானாவிலிருந்து ஏழு பேர்; தமிழகத்திலிருந்து நால்வர்; கர்நாடகாவிலிருந்து மூவர்; தில்லி மகாராஷ்ட்ராவிலிருந்து தலா ஒருவர் என்ற மொத்தம் 28 உறுப்பினர்களுக்கு பதவியை வழங்கியது ஆந்திர அரசு.

உள்ளாட்சி தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! களைகட்ட போகும் தேர்தல் திருவிழா

0

உள்ளாட்சி தேர்தலுக்கான அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! களைகட்ட போகும் தேர்தல் திருவிழா

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தி.மு.க தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி உத்தரவிட்டது. அதனையடுத்து, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவது தாமதமாகி வருகிறது.தேர்தலை எதிர்கொள்ள மாநில அரசு அச்சப்படுகிறது என்று எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டிவருகின்றன.

உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றமும் பலமுறை உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாநராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்கவும் மாநிலத் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டதாக தெரிவித்தார். அவருடைய அறிவிப்பு வெளியான சில தினங்களில் மாநிலத் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியை கற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை தான் வைத்தேன் அமித்ஷா பல்டி!

0

இந்தியை கற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை தான் வைத்தேன் அமித்ஷா பல்டி!

கடந்த சனிக்கிழமையன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் பதிவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மொழி தொடர்பாக அவர் கூறிய கருத்துக்கள் தென் மாநிலங்களில் எதிர்ப்பைக் கிளப்பியது

”பிராந்திய மொழிகள் பேசும் மாநிலங்களில் இந்தியை திணிக்க வேண்டும் என்று ஒரு போதும் கூறியதில்லை. தாய் மொழிக்குப் பின்னர் இரண்டாவது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தேன்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். 

கடந்த சனிக்கிழமையன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் பதிவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மொழி தொடர்பாக அவர் கூறிய கருத்துக்கள் தென் மாநிலங்களில் எதிர்ப்பைக் கிளப்பியது. 

அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மொழியும் தனித் தன்மை கொண்டது. இருப்பினும், சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிபலிப்பதற்காக ஒரு பொதுவான மொழி இருப்பது அவசியமாகிறது. இன்றைக்கு நாடு முழுவதையும் ஒருங்கிணைக்கும் மொழியாக இந்தி இருக்கிறது. பெரும்பான்மையான இந்தியர்கள் இந்தியை பேசுகின்றனர், புரிந்து கொள்கின்றனர்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு தென் மாநில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக கர்நாடக பாஜக தலைவரும், மாநில முதல்வருமான எட்டியூரப்பா  ‘கர்நாடகாவை பொறுத்தளவில் கன்னடம்தான் முதன்மை மொழி. அதற்கு முக்கியத்துவம் அளிப்பதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்’ என்றார். 

கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘இந்தியாவை இந்தி மொழி ஒருங்கிணைக்கிறது என்று கூறுவது அபத்தம்’ என்று விமர்சித்திருந்தார். இதேபோன்று, தமிழகத்தில் ரஜினிகாந்தும், இந்தி மொழி திணிக்கப்படுவது போன்ற நடவடிக்கையை தென் மாநிலங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளாது என்றார். 

இந்த நிலையில் சர்ச்சைகள் அதிகமானதை தொடர்ந்து, தனது ட்விட் குறித்து அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். ”பிராந்திய மொழிகள் பேசும் மாநிலங்களில் இந்தியை திணிக்க வேண்டும் என்று ஒரு போதும் கூறியதில்லை. தாய் மொழிக்குப் பின்னர் இரண்டாவது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

நானும்கூட இந்தி மொழி பேசாத குஜராத்தை சேர்ந்தவன். இந்த விவகாரத்தில் சிலர் அரசியல் செய்ய விரும்பினால் அது அவர்களுடைய விருப்பம்”  என்று அமித்ஷா விளக்கம் அளித்திருக்கிறார். இதையடுத்து, வரும் 20-ம் தேதி நடக்கவிருந்த போராட்டத்தைத் தற்காலிகமாகத் தி.மு.க வாபஸ் வாங்கியிருக்கிறது.