தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மதிமுகவின் மாநில மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான திரு மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தமிழ் தமிழர் பெரியார் அண்ணா கலைஞர் இவர்கள் அனைவரும் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறார்கள் என்றும், தமிழ் மொழியை அழிக்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும்,
தமிழகத்தில் மொழி,இனத்தை காப்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் அரணாக இருப்பதாகவும் கூறினார்.
திராவிட இயக்கத்தின் நிரந்தர தளபதி நான் எப்படியோ அதே போல் திராவிட இயக்கத்தின் நிரந்தர போர்வாள் எனவும் கூட்டத்தில் தன்னை பற்றி பெருமையாக பேசினார்.
இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். கடந்த காலங்களில் திமுகவை மிகக்கடுமையாக தரம் தாழ்ந்து பேசி வந்த வைகோவை மிகவும் புகழ்ந்து தள்ளி பேசினார். அவர் ஆரோக்கியமாக இருந்தால்தான் திராவிடம் செய்யும் எனவும் பாதுகாக்கப்படும் எனவும் வைகோவை மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் பேச்சு இருந்தது.
20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தேர்வு முறையில் மாற்றம்! தமிழக அரசு அரசாணை.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இரண்டு கேள்வித்தாள் முறைகளை தமிழ் மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடம் தேர்வுகளில் இனி ஒரே கேள்வி தாள் முலம் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்தில் 2 கேள்வித்தாள் முறைகளை நிக்கி உள்ளது. ஆசிரியர் சங்கத்தின் மற்றும் பொதுவான கல்வி அமைப்புக்களின் கோரிக்கையை ஏற்று அரசு தேர்வுதுறை இயக்குனர் மே 4ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ் இரண்டு தேர்வு முறையை ரத்து செய்வதாக அரசாணை பிறப்பித்துள்ளார். இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்திற்கு இரண்டு கேள்வி தாள்களும் ஆங்கில பாடத்திற்கு கேள்வி தாள்களும் இடம்பெறாது. மற்ற பாடத்திற்கு இடம்பெறுவதை போல ஒரே கேள்விதாள் முறை வரும் காலாண்டிலிருந்து செயல்பாட்டுக்கு வரும்.
இதனால் ஆசிரியர்களின் கற்பிக்கும் முறை சிறப்படையவும் மேலும் மாணவர்களின் மன அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கும். தேர்வுத்தாள்களை திருத்தும் பணி எளிமையாகவும் விரைந்து தேர்வு முடிவுகளை வெளியிடவும் இந்த அறிவிப்பு உதவும். இந்த அறிவிப்புக்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் மேலும் கல்வியாளர்கள் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் இரண்டு கேள்வித்தாள் முறைகளை கடந்த ஜூன் 2018 ஆம் ஆண்டு நீக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்த குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர், இரண்டு கேள்வித்தாள் முறைகளை மாற்றியதன் மூலம் 3 கோடி எண்ணிக்கையில் தாள்கள் சேமிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
கற்பழிப்பு வழக்கில் பாஜக அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களை மாணவி கொடுத்தார் – விசாரணை தீவிரம்
சிறப்பு புலனாய்வு போலீசாரிடம் முன்னாள் பாஜக அமைச்சருக்கு எதிரான ஆதாரங்களை மாணவி கொடுத்தார். இதனையடுத்து கற்பழிப்பு வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்துக்கு சொந்தமான உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர், சின்மயானந்த் மீது கற்பழிப்பு புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சின்மயானந்திடம் கடந்த 12- ஆம் தேதி இரவு விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர். எனினும் வழக்கு சம்பந்தப்பட்ட பல தடயங்கள் அங்கிருந்து மறைக்கப்பட்டிருப்பது அப்போது நடத்திய சோதனையில் தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், விசாரணை முடியும் வரை ஷாஜகான்பூரை விட்டு வெளியேறக்கூடாது என சின்மயானந்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தான் சின்மயானந்த் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய மாணவி, அதற்காக தன்னிடம் இருந்த ஆதாரங்களை நேற்று போலீசாரிடம் அளித்தார். இதில் 48 வீடியோ பதிவுகள் அடங்கிய ‘பென் டிரைவும்’ அடங்கும் என விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து முன்னாள் பாஜக அமைச்சருக்கு எதிரான விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
M.E, M.Tech பட்டதாரிகள் இனி உதவி பேராசிரியர்களாக பணியாற்ற முடியாது! பேரதிர்ச்சி கொடுத்த AICTE தலைவர்
பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்ற எம்.இ., மற்றும் எம்.டெக்., படித்திருந்தால் மட்டும் போதாது எனவும் கூடவே ஓராண்டு சிறப்பு பயிற்சியை முடித்தால் மட்டுமே தகுதி உடையவர்களாக பணியாற்ற முடியும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் அனில் சஹஸ்ரபுதே, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த போது பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., முடித்திருந்தாலே போதுமானது என்ற விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
புதிய விதிகளின்படி எம்.இ., எம்.டெக்., படிப்புகளுக்குப் பிறகு அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு அறிமுகப்படுத்தியுள்ள 8 Module Course என்ற ஓராண்டு சிறப்புப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்ற முடியும் என்று தெரிவித்தார்.
மேலும், பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏற்கனவே பேராசிரியராகப் பணியாற்றுவோரும் புதிய சிறப்புப் படிப்பை படித்தால் மட்டுமே பேராசிரியராக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளார். இதனால், தற்போது பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணிபுரிவோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மோடி பிரதமராக பின்பு கல்வி துறையில் அதிரடியாக பல சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்து வருகிறது, பல பொறியியல் கல்லூரிகள் முளைத்து கொண்டே இருக்கின்றன, ஆண்டுதோறும் பல லட்சம் பொறியியல் பட்டதாரிகளாக தகுதி பெற்று வருகின்றனர்! தற்போதைய காலகட்டத்தில் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளில் பொறியியல் பட்டம் படித்தவர்கள் தான் முதலிடம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரியில் பணி புரிந்த பெண் ஊழியரை அவரது காதலனே நிர்வாணப்படம் எடுத்து நண்பருக்கு அனுப்பி மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் சேலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் குடியிருந்து வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர். அப்போது இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் தனது நண்பரான டிரைவர் ஒருவருக்கு அனுப்பியிள்ளார். அந்த புகைப்படங்களை வைத்து டிரைவர் சம்பந்தப்பட்ட கல்லூரி பெண் ஊழியரை தன்னுடைய ஆசைக்கும் இணங்கும்படி மிரட்டியுள்ளார்.
இதுபற்றி அந்த கல்லூரி பெண் ஊழியர், தனது தந்தையுடன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சென்று புகார் தெரிவித்தார். இதனையடுத்து இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரையும், அந்த டிரைவரையும் ஆத்தூர் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த சம்பந்தப்பட்ட டிரைவரின் செல்போனை வாங்கி போலீசார் விசாரித்தனர். அந்த டிரைவரின் செல்போனில் மேலும் பல இளம்பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தது தெரிய வந்தது மேலும் அதிர்ச்சியளித்துள்ளது.
அந்த டிரைவரின் செல்போனில் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் இருப்பது, உல்லாசமாக இருப்பது, குளிப்பது போன்ற படங்கள் இருந்தது பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்கள் யார்? அந்த படங்களை எடுத்தது யார்? படங்களை எப்படி எடுத்தார்கள்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு பின்னணியில் இருப்பது யார்? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில் செல்போனில் நிர்வாண படங்கள் இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளதால், பொள்ளாச்சி சம்பவம் போன்று ஆத்தூரில் நடைபெற்று இருக்குமோ? என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
7 தமிழர்கள் விடுதலை: முதலமைச்சருடன்
மருத்துவர் இராமதாஸ் தொலைபேசியில் பேச்சு!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்து பேசினார்.
7 தமிழர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்தும், அதனடிப்படையில், 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீது கடந்த 370 நாட்களாக (ஓராண்டு 5 நாட்கள்) தமிழக ஆளுனர் மாளிகை எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களிடம் மருத்துவர் அய்யா அவர்கள் நினைவு கூர்ந்தார். 29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் 7 தமிழர்களையும் விரைந்து விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதைக் கேட்டுக் கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு அனைத்து வகைகளிலும் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
திமுக எம்.பி கூறியது போல தோற்றாலும் தொகுதியை விட்டு தராத அன்புமணி ராமதாஸ்! செய்தது என்ன?
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழக அளவில் உள்ள எல்லா தொகுதிகளையும் விட தருமபுரி தொகுதி அனைத்து அரசியல்வாதிகளாலும் மிகவும் கவனிக்கப்பட்டு வந்தது. இதற்கு காரணம் எக்காரணம் கொண்டும் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் வெற்றி பெற கூடாது என திமுக தலைமை அதன் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்காக பணத்தையும்,போலி வாக்குறுதிகளையும் வாரி வழங்கிய திமுக ஒரு கட்டத்தில் தொடர்ந்து சாதி ஒழிப்பை பேசி வருவதை கூட மறந்து அக்கட்சியின் வேட்பாளரை தானும் அன்புமணியின் சமூகத்தை சேர்ந்தவர் தான் என சாதி அரசியல் பேச வைத்தது. இவர்கள் திட்டமிட்டப்படியே தேர்தல் முடிவும் அமைந்தது.
தருமபுரியில் வெற்றி பெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமாரிடம் அந்த தொகுதி மக்கள் கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்ற போகிறீர்கள் என்றும்,அன்புமணி ராமதாஸ் சார்ந்த கூட்டணி மத்திய அரசாக அமைந்திருப்பதால் உங்களால் தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா என்று கேள்வியெழுப்பினர்.இதற்கு பதிலளித்த திமுக எம்.பி. அன்புமணி ராமதாஸ் அவர்களும் மாநிலங்களவை உறுப்பினராகி தருமபுரி தொகுதிக்கு நலத்திட்ட உதவிகள் செய்யலாம் என கூறியிருந்தார். அவருடைய இந்த மழுப்பலான பதில் கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் என்ன செய்ய போகிறார் என்று உறுத்தியளிக்காமல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திட்டங்களை செயல்படுத்தலாம் என்று கூறியதை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
அவர் கூறியது போலவே மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் தோற்றாலும் தனது தொகுதி மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருவது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2014 – 2019 வரை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அன்புமணி ராமதாஸ், 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட போது பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டத்தை கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
அந்த தேர்தலில் வெற்றி பெற்ற அவர் அளித்திருந்த அந்த வாக்குறுதியின் படி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பிறகு ரயில்வே அமைச்சர்களாக இருந்த சதானந்தகவுடா, சுரேஷ் பிரபு, பியூஸ் கோயல் என அனைத்து அமைச்சர்களையும் இடைவிடாமல் தொடர்ந்து சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தார்.
அதற்கு பலனாக கடந்த வருடம் ரயில்வே அமைச்சகம் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி அடங்கிய ரயில்வே மண்டலத்தில் அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு புதிய திட்டம் தருமபுரி, மொரப்பூர் திட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகும் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு செயல்பாட்டுக்கு வராமல் இருந்த நிலையில் மீண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்த அவர், அதற்கான அரசு ஆணையுடன் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தர்மபுரி மக்களை அன்புமணி சந்தித்து இந்த தகவலை தெரிவித்தார்.
அதன்படி, தருமபுரி-மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர், ரூபாய் 350 கோடி மதிப்பில் தொடர்வண்டி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா மார்ச் 4 ஆம் தேதி தருமபுரி வள்ளுவர் மைதானத்தில் நடந்தது. இந்த திட்டத்தினை அப்போதைய மத்திய தொடர்வண்டி துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.இந்த விழாவில் பாமக இளைஞரணி தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும், தருமபுரி பகுதியை சேர்ந்த தமிழக அமைச்சர் கே.பி அன்பழகன் போன்றோரும் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்துக்காக அன்புமணி ராமதாஸ் கடந்த 5 ஆண்டுகளில், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, சதானந்த கௌடா. பியூஸ் கோயல் ஆகிய மூவரையும் 18 முறை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் தொகுதி மக்களுக்காக மொரப்பூர்-தருமபுரி இரயில்வே இணைப்புத்திட்ட செயல்பாடுகளை இன்று மொரப்பூரில் இரயில்வே அதிகாரியுடன் இணைந்து ஆய்வு செய்த அன்புமணி ராமதாஸ் எஞ்சிய பணிகளை விரைவில் முடித்து தருமபுரி மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்கு இத்திட்டம் வர ஆவண செய்யுமாறு, இரயில்வே துறை, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அன்புமணி தோல்வி அடைந்திருந்தாலும் அவரது அயராத முயற்சியால் தர்மபுரி மக்களின் பல ஆண்டுகள் கனவான மொரப்பூர்-தருமபுரி இரயில்வே இணைப்புத் திட்டத்துக்கு இன்று வரை போராடி வருவது அந்த தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திமுகவை சேர்ந்த தற்போதைய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர்.செந்தில் குமார் கூறியது போலவே அன்புமணி ராமதாஸ் அவர்களும் தன்னுடைய தொகுதியை விட்டு கொடுக்காமல் செயல்பட ஆரம்பித்துள்ளது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணி நேரத்தில் 110 பேர் என்கவுண்டர்
நான் பதவிக்கு வந்தால் இந்த அயோக்கியர்கள் அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவேன் அவர்களின் பிணத்தை கடலில் தூக்கி எறிவேன்.ஆயிரம் பேராகட்டும்,பத்தாயிரம் பேராகட்டும் எனக்கு கவலை இல்லை” என்று தேர்தலின் போது வெளிப்படையாகக் கூறி பல மடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு வந்த அடுத்த 24 மணிநேரத்தில் 110 போதை மருந்து விற்பனையாளர்கள் சுட்டுகொல்லப்பட்டனர்.
இதன் விளைவாக ஆயிரக்கணக்கான ரவுடிகளும்,போதைமருந்து வியாபாரிகளும் போலீஸ் மற்றும் ராணுவத்திடம் சரணடைகிறார்கள். வித்தியாசமான ஒரு தலைவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக ஜூலை 1 ஆம் தேதி பதவியேற்ற ரோட்ரிகோ டுடேர்தே.(Rodrigo Duterte) “பொருளாதாரம் பற்றி எனக்கு தெரியாது.இந்த நாட்டின் அறிஞர்களும்,பொருளாதார நிபுணர்களும் அடங்கிய குழுவிடம் அந்த பொறுப்பை விட்டுவிடுவேன்.
என் பொறுப்பு லஞ்சம்,கொலை,கொள்ளை,போதைமருந்து விற்பனை ஆகியவற்றை அடியோடு ஒழித்து பெண்கள் சுதந்திராமாக நடமாடக்கூடிய ஒரு பத்திரமான நாட்டை உருவாக்குவதே.” போதை மருந்தைஉற்பத்தி செய்பவர்கள்,விற்பனைசெய்பவர்கள்,பயன்படுத்துபவர்கள் அத்தனை பேருக்கும் நான் எமனாக இருப்பேன் சட்டமன்றங்களோ,மனித உரிமை அமைப்புகளோ என்ன சொன்னாலும் அதை நான் பொருட்படுத்த போவதில்லை. மக்கள் எனக்கு அளிக்கும் ஆறு ஆண்டு கால அவகாசத்தில் முதல் ஆறு மாதத்திலேயே, பிலிப்பைன்ஸ் நாட்டை உலகிலேயே அமைதியான பத்திரமான இடமாக்குவதே என் லட்சியம்.
அவரது இந்த வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டு தான் பிலிப்பைன்ஸ் மக்கள் தங்கள் ஜனாதிபதியாக டுடேர்தேயை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த டுடேர்தேயை அவரது மக்கள் எப்படி புரிந்து கொண்டார்கள்.?? கேட்கவே வித்தியாசமாக இருக்கும் அவரது பின்னணி நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று தான். 71 வயதாகும் டுடேர்தே பிலிப்பைன்ஸில் நாட்டுப்புறத்தில்,எளிய குடும்பத்தில் பிறந்தவர்.வக்கீல் பட்டம் பெறும் அளவிற்கு படித்துவிட்டார்.
5 – 6 ஆண்டுகள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு பின்னர் அரசியலில் நுழைந்தவர்.தனது ஏரியாவான மின்டனாவோவில்,தாவோ என்கிற ஊரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டுடேர்தே, 22 ஆண்டுகளுக்கு அவரது மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டு மேயர் பதவியில் இருந்தார். பரபரப்பாக நிகழ்ந்த தேர்தலின்முடிவில் எதிர் வேட்பாளரான அன்றைய ஜனாதிபதியை விட இரண்டு மடங்கு ஓட்டு பெற்று வெற்றி பெற்றார்.
ஜூலை 1 பதவி ஏற்றார்.முதல் தகவல் 110 போதை மருந்து விற்பனையாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான போதைமருந்து விற்பனையாளர்களும்,ரவுடிகளும்,முன்னாள் குற்றவாளிகளும் போலீசில் சரணடைந்தனர். இன்னமும் களையெடுப்பு முடியவில்லை கவலைப்படாமல் சுடுங்கள். நாட்டை சுத்தம் செய்யுங்கள்.உங்கள் செயலின் விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன்,என்று காவல் படைக்கும்,ராணுவத்திற்கும் உறுதி அளித்திருக்கிறார்.
டிடிவி.தினகரன் தி.மு.க.வுடன் கூட்டணியா? அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
அதிமுகவிலிருந்து பிரிந்த அமமுக என்ற தனிக்கட்சியை ஆரம்பித்த டிடிவி தினகரன் அதிமுகவின் எதிரியான திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.இன்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது.
பால்வளத்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்துள்ளேன். இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணம் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது.
அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று கால்நடை வளர்ப்பு தீவன உற்பத்தி போன்றவற்றை அறிந்து வந்துள்ளேன்.
பால்வளத் துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் பசு வளர்ப்பு இனவிருத்தி, தீவன உற்பத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் பால்பண்ணை அமைக்கப்படும்.
ஸ்டாலினை தவிர சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் எங்களது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை வரவேற்கிறார்கள்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளி நாட்டுக்கு சென்று ரூ. 2850 கோடி அளவில் தமிழகத்துக்கு முதலீட்டை ஈர்த்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் புதிதாக ஜவுளி தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இது சம்பந்தமாக முதல்- அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.ஜி.ஆர். ரசிகர் இல்லை. சிவாஜி கணேசன் ரசிகர்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து வளர்த்த கட்சியான அ.தி.மு.க.வை அவர் எதிர்க்கிறார். அ.தி.மு.க.வின் எதிரியான தி.மு.க.விடம் மறைமுக கூட்டணி வைத்துள்ளார்.
தினகரனின் உண்மையான நிலைப்பாடு தெரிந்து தான் நாஞ்சில் சம்பத் அவரை விட்டுச் விலகி சென்று விட்டார். அடுத்து புகழேந்தியும் புலம்பிக் கொண்டுள்ளார் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
பணத்தின் முன் புனிதமும் பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டதா? மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை
வரலாற்று சிறப்புமிக்க தில்லை நடராசர் கோவிலை வணிகமயமாக்கும் முயற்சியை கண்டித்தும், அதை முறையாக நிர்வகிக்க அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
உலகப் புகழ்பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாக போற்றப்படுவதும், பிச்சாவரம் சோழர்களால் காலம் காலமாக நிர்வகிக்கப்பட்டு வந்ததுமான சிதம்பரம் நடராசர் கோயிலில் மிக மோசமான அத்துமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. புனிதம் மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலை வணிகமயமாக்கும் நோக்கத்துடன் நடராசர் கோயில் நிர்வாகம் மேற்கொண்ட அத்துமீறல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை ஆகும்.
வரலாற்று சிறப்பு மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசி பட்டாசு ஆலை அதிபரின் இல்லத் திருமணம் நேற்று முன்நாள் ஆன்மிக விதிகளை மீறியும், பல்லாயிரமாண்டு நடைமுறைகளை மீறியும் நடத்தப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது இராஜ அவை என்று போற்றப்படும் ஆயிரங்கால் மண்டபத்தின் புனிதத்தை சிதைக்கும் செயலாகும். திருமண ஏற்பாடுகள், அலங்காரம் என்ற பெயரில் நடராசர் ஆலயம் அல்லோல கல்லோலப்படுத்தப்பட்டது. உலகப்புகழ் பெற்ற நடராசர் ஆலயத்தின் புனிதமும், மாண்புகளும் கால்களில் போட்டு மிதிக்கப்பட்டன.
சிதம்பரம் நடராசர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்திற்கு தனிச் சிறப்புகள் உள்ளன. ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனம், ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது மட்டும் தான் சிவகாமியம்மன் சமேத நடராசர் ஆயிரங்கால் மண்டபத்தில் காட்சியளிப்பார். அங்கு பல்வேறு வகையான வழிபாடுகள் நடத்தப் படும். இந்த இரு நிகழ்வுகளைத் தவிர ஆயிரங்கால் மண்டபத்தில் அனுமதிக்கப்பட்ட இன்னொரு நிகழ்வு சோழ மன்னர்களின் பதவியேற்பு விழா ஆகும். இவற்றைத் தவிர வேறு எந்த நிகழ்வுகளும் இந்த மண்டபத்தில் அனுமதிக்கப்பட்டதில்லை. சிதம்பரம் நடராசர் கோயிலின் பல்லாயிரமாண்டு கால வரலாற்றில் ஆயிரங்கால் மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்த பல முயற்சிகள் நடந்த போதிலும் அவை எதுவும் வெற்றி பெற்றதில்லை. இத்தகைய வரலாறு கொண்ட ஆயிரங்கால் மண்டபத்தில் பணம் கிடைக்கிறது என்பதற்காக திருமணம் நடத்த அனுமதிப்பது நடராசர் கோயிலை வணிகமயமாக்கும் செயல் ஆகும்.
ஆயிரங்கால் மண்டபத்தில் தொழிலதிபர் இல்லத் திருமணத்தை நடத்த அனுமதித்தது சர்ச்சையாகியுள்ள நிலையில், தாங்கள் அரங்கேற்றிய அத்துமீறலை மூடி மறைக்க தீட்சிதர்கள் துடிக்கின்றனர். நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்காக ஆயிரங்கால் மண்டபம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆலய வளாகத்திலுள்ள சிறிய கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றதால் கோவில் வளாகத்தில் நிலவிய நெரிசலைக் கருத்தில் கொண்டு ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண விழாவை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டதாகவும் தீட்சிதர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இது தமிழக அரசையும், மக்களையும், ஏமாற்றும் செயலாகும். முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் இச்செயலை எவரும் நம்ப மாட்டார்கள்.
ஆயிரங்கால் மண்டபத்தில் மின் விளக்குகள், மலர்த் தோரணங்கள் ஆகியவற்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் அல்ல, பட்டாசு ஆலை அதிபர் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு சிறப்பு பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோயில் தீட்சிதர்கள் கூறுவதைப் போன்று கடைசி நேரத்தில் தான் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதிக்கப்பட்டது என்றால், மிகக்குறுகிய அவகாசத்தில் பேட்ஜ் தயாரித்து, திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் வழங்குவது எந்த வகையிலும் சாத்தியமல்ல.
சிதம்பரம் நடராசர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் குறித்து சுருக்கமாக கூற வேண்டுமானால் பணத்தின் முன் புனிதமும், பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டிருக்கின்றன என்று தான் குறிப்பிட வேண்டும். நடராசர் கோவில் நிர்வாகம் தவறானவர்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணத்தைக் கூற முடியாது. இதற்கான ஒரே பரிகாரம் கோயில் நிர்வாகத்தை மீட்டெடுத்து சரியானவர்களின் கைகளில் ஒப்படைப்பது மட்டும் தான். அதை செய்ய தமிழக அரசு தயங்கக்கூடாது.
சிதம்பரம் நடராசர் கோயிலை யார் நிர்வகிப்பது என்பது குறித்து தமிழக அரசுக்கும், தீட்சிதர்களுக்கும் பல கட்டங்களில் சட்டப் போராட்டங்கள் நடந்துள்ளன. இதுதொடர்பான வழக்குகளில் 17.03.1890, 03.04.1939, 23.01.1940, 11.02.1997, 02.02.2009 ஆகிய நாட்களில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் தமிழக அரசு தான் கோவிலை நிர்வகிக்க வேண்டும்; நடராசர் கோயில் தீட்சிதர்களின் சொத்து அல்ல என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. 2008-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடராசர் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், சில தரப்பினர் சரியாக ஒத்துழைக்காததால் தான் தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தீட்சிதர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதுபற்றி விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிடலாம் என்று அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அந்த வகையில் இப்போதும் தில்லை நடராசர் கோயிலில் நடந்த அத்துமீறல்கள் பற்றி விசாரணை நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு. தேவைப்பட்டால் நடராசர் கோயிலின் நிர்வாகத்தையும் தமிழக ஆட்சியாளர்களால் கையகப்படுத்த முடியும்.
எனவே, சிதம்பரம் நடராசர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல் பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, காலம்காலமாக பிச்சாரவரம் சோழர்கள் நிர்வாகத்தில் சிதம்பரம் நடராசர் கோயில் புகழ் பெற்று விளங்கியது என்பதால், அக்கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தி, அதை நிர்வகிக்க அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் பிச்சாவரம் சோழர்களை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.