அமைச்சர் பெயரால் பண மோசடி – சிக்கினார் சீட்டிங் மன்னன்

0
57

அமைச்சர் பெயரால் பண மோசடி – சிக்கினார் சீட்டிங் மன்னன்

அரசியல் கட்சிகள் தங்களின் தலைவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் விழாவிற்காக கடைகளில் அடித்து மிரட்டி பணம் வசூலித்த சிசிடிவி காட்சி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

கடந்த பிப்ரவரி 24 ஆம் நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளீ விழா கொண்டாடப்பட்டது.இதனை பயன்படுத்தி சென்னையை சார்ந்த முகமது ரபீக் என்பவர் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக கூறி கிண்டியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் தொழிலதிபரிடம் 85 இலட்சம் கேட்டு மிரட்டி உள்ளார்.

கேட்ட பணத்தை தராவிட்டால் தொழில் நடத்த முடியாது என கூறி மிரட்டி உள்ளார்.இதனால் பயந்து போன தொழிலதிபர் அவர் கூறிய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளார்.அப்போது அந்த வங்கிக் கணக்கின் பெயர் ரகீம் என இருப்பதால் சந்தேகப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தனது ஓட்டுனரை அமைச்சர் ஜெயக்குமாரின் அலுவலகத்திற்கு அனுப்பி விசாரித்ததில் அவ்வாறு யாரையும் அமைச்சர் மிரட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரனை மேற்கொண்டதில் தமிழக்தில் பல இடங்களில் பண மோசடி செய்து வரும் ரகீம் என தெரியவந்துள்ளது.இவன் இதுவரை தமிழகம் முழுவதும் பல இடங்களில் சுமார் 10 கோடி அளவிற்க்கு மோசடியில் ஈடுபட்டு பல்வேறு குற்றவழக்கில் தொடர்புடையவன் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் தொடந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K