திமுகவின் கோட்டைக்குள் வேட்டியை மடித்து கட்டி களமிறங்கிய முதல்வர் பழனிச்சாமி : பாராட்டி மகிழ்ந்த பொது மக்கள்!

0
59

திமுகவின் கோட்டைக்குள் வேட்டியை மடித்து கட்டி களமிறங்கிய முதல்வர் பழனிச்சாமி : பாராட்டி மகிழ்ந்த பொது மக்கள்!

மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் என்று விவசாயிகள் அஞ்சி வந்தனர். இதனால் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்த டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதற்கிடையில் கடந்த 20ம் தேதி ஒருங்கிணைந்த டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு விவசாய அமைப்புகள் தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

மேலும் மார்ச் 7ம்தேதி(இன்று) முதல்வருக்கு பாராட்டு விழா ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதில் கலந்து கொள்ள முதல்வர் இன்று திருவாரூர் சென்றிருந்தார்.

அங்கு முதல்வர் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வயலில் இறங்கி விவசாயிகளோடு சேர்ந்து நாற்று நட்டு மகிழ்ந்தார். இதனை பார்த்த விவசாயிகள் உற்சாகமடைந்த விவசாயிகள் கைதட்டி முதல்வருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு திருவாரூர் மாவட்டத்திலுள்ள சித்தமல்லி என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. முதல்வரை காண கூடியிருந்த பெருந்திரளான மக்கள் இதனை கண்டு முதலமைச்சரை வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.

திருவாரூர் பன்னெடும் காலமாக திமுக வின் கோட்டையாக இருந்து வந்தது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த ஊர் மற்றும் ஆஸ்தான தொகுதி என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

திமுக-வின் கோட்டையாக விளங்கும் இந்த தொகுதியில் முதல்வர் பொது மக்களின் பாராட்டுகளை பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை அரசியல் விமர்சகர்கள் முதல்வர் பழனிசாமி திமுகவின் தொகுதியிலேயே மக்களின் பாராட்டுகளை பெறுவது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று கூறியுள்ளனர்.

author avatar
Parthipan K