நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!!

0
38

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

 

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடையும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்கனவே ஜூலை 1 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

 

இதையடுத்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.இந்நிலையில் அவை தொடங்கிய முதல் நாளிலிருந்தே மணிப்பூர் வன்முறை மற்றும் மலைவாழ் குகி இன பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஆளும் பாஜக அரசின் மீது எதிர்க்கட்சிகள் தொடர் கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக அவை நடைபெறாமல் முடங்கி கிடந்தது.இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.மேலும் இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கியது.இந்நிலையில் தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்த காரசார விவாதத்திற்கு பிரதமர் மோடி நேற்று மாலை பதிலளித்தார்.நாட்டு மக்கள் தங்கள் அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.மேலும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கடவுளின் ஆசிர்வாதமாக நினைக்கின்றேன் என்று கூறினார்.இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் நாட்டின் வளரச்சி மீதும் நாட்டு மக்களின் மீதும் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை.மேலும் ஆட்சியை பிடிப்பதில் தான் அவர்களுக்கு அக்கறை என்று எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசினார்.

இந்நிலையில் பிரதமர் அவர்கள் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசவில்லை என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.இந்நிலையில் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பேசினார்.இதனை தொடர்ந்து அவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏற்கனவே அவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்ட நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக குரல் எழும்பவில்லை.இதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்து விட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.இந்நிலையில் நேற்று நடைபெற்ற விவாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.