தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்… கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்!!

0
39

 

தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்… கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்…

 

தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதன் சேவையை இன்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்துள்ளார்.

 

தமிழக மாநிலத்தில் தற்பொழுது புறநகர் செல்லும் பேருந்துகள் நீல நிறத்திலும் பச்சை நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றது. நகர, மாநகரப் பேருந்துகள் சிவப்பு நிறத்திலும், வெள்ளை காவி நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றது.

 

முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் பதவியேற்ற பிறகு பெண்களுக்கு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பேருந்துகளை அடையாளம் காண்பதற்காக பேருந்துகளில் முன்னும் பின்னும் இளஞ்சிவப்பு நிறத்தில் அதாவது பிங்க் நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

 

இதையடுத்து தமிழக அரசு புதியதாக 1000 பேருந்துகளை வாங்கவும் 500 பேருந்துகளை புதிப்பிக்கவும் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அவ்வாறு அடிச்சட்டம் நல்ல நிலையிலும் இயக்கத்திலும் உள்ள 100 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு அந்த பேருந்துகளுக்கு மஞ்சள் நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் நிறம் மட்டுமில்லாமல் பேருந்தில் இருக்கை, அமரும் வசதி போன்றவற்றை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து புதிப்பிக்கப்பட்டு மஞ்சள் நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்ட 100 பேருந்துகள் இன்று மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இந்த புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளை கொடி அசைத்து துவங்கி வைத்துள்ளார்.