“என் மகன், என் பேரன்” நடைப்பயணம்!! அண்ணாமலையின் கேலியான ட்விட்டர் பதிவு!!

0
46

“என் மகன், என் பேரன்” நடைப்பயணம்!! அண்ணாமலையின் கேலியான ட்விட்டர் பதிவு!!

மக்களவைத் தேர்தலில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு அனைத்து கட்சிகளும் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பாஜக மாநில தலைவரான அண்ணாமலை “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

 இதை மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்து துவக்கி வைத்தார். மேலும் இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். கடந்த ஜூலை 28  ஆம் தேதி முதல் துவங்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி பதினோராம் தேதி வரை இருக்கும் இந்த நடைப்பயணமானது 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது.

இதன் முதல் கட்டமாக ஜூலை 28 அன்று ராமேஸ்வரத்தில் தனது பாத யாத்திரையை அண்ணாமலை துவங்கி உள்ளார். இந்த பாத யாத்திரையின் போது மக்களிடம் பிரதமர் மோடியின் சேவைகளை பற்றி கூறி உள்ளார்.

பிரதமரின் சேவைகளை புத்தகமாக தொகுத்து அனைவருக்கும் வழங்கி வருகிறார். தற்போது இந்த பாத யாத்திரை நேற்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றது.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறி இருந்த அண்ணாமலை, பிரதமரின் சேவைகளை பற்றி மக்களிடம் கூறுவதற்கு நாம் துவங்கியது “என் மண், என் மக்கள்”.

மத்திய அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியது. அதில் பயனடைந்த இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் என ஏராளமான மக்கள் நம்முடன் இணைந்து நிற்கின்றனர்.

இதுவே திமுக கட்சி ஒரு நடைபயணம் மேற்கொண்டால் அதற்கு “என் மகன், என் பேரன்” என்று தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறி கிண்டலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த “என் மண், என் மக்கள்” என்ற பாத யாத்திரையை குறி வைத்து பாஜக விற்கு எதிரான சில கருத்துக்களை திமுக வினர் “என் வீடியோ, என் ஆடியோ” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை மனதில் வைத்து தான் தற்போது அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக “என் மகன், என் பேரன்” என்று கூறி உள்ளாரா என அனைவரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

author avatar
CineDesk