மாணவிகள் கழிவறையில் மர்ம பொருள்!! அருகில் சென்ற பணியாளருக்கு அதிர்ச்சி!!

0
89

வைரஸ் பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கின்றன. குழந்தைகள் அனைத்தும் வீட்டில் இருந்து கொண்டு மிகவும் அராஜகம் செய்வதால் எப்பொழுது பள்ளிகள் திறக்கும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது பலரும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்ட காரணத்தால் வைரஸ் தொற்று குறைந்து வருகின்றது. இத்தகைய சூழலில் நிறைய மாநிலங்களில் பள்ளிகள் திறந்து உள்ளது.

அந்த வகையில் வரும் 1ஆம் தேதி முதல் கேரளாவில் இருக்கும் பள்ளிகள் அனைத்தும் திறக்க படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் இதனை தூய்மைபடுத்தும் வேலையில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.‌

அதன்படி கண்ணூர் மாவட்டத்தில் இருட்டி தாலுகாவில் இருக்கும் அவலம் கிராமத்தின் உயர்நிலைப் பள்ளியில் ஒரு தூய்மைப் பணியாளர் மாணவிகளின் கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அங்கே இருந்த வாலியில் தேங்காய் போன்ற ஒரு பொருள் இருந்துள்ளது.

இதைக்கண்ட தூய்மைப் பணியாளர் தேங்காய் என்று நினைத்து அதனை தொட்டு பார்த்த போது வித்தியாசமாக உணர்வு ஏற்பட்டுள்ளது. உடனே இது தேங்காய் அல்ல என்பதை தெரிந்து கொண்ட அவர் சமையல்காரர் நாராயணனை அழைத்து அதனை எடுக்க சொல்லியுள்ளார்.

பின்னர்தான் அவை வெடிகுண்டுகள் என்பதை தெரிந்து கொண்டனர். உடனே பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க போலீஸ் தகவல் அறிந்து உடனடியாக வந்து ஆய்வு செய்ததில் அது சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பதும், அந்த கழிவறைக்கு பின்புறம் இருக்கும் சுவரில் பலருடைய கால்தடங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.