நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவா?

0
40

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவா?

மேயர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான செய்திக்கு நெல்லை மேயர் சரணவன் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு புகாரில் சிக்கியுள்ளார்.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற சரவணன் அவர்கள் நேராகவும் அன்னை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று கொண்ட நாள்முதல் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும் வந்த வண்ணம் உள்ளன. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து காண்டாக்ட்-களுக்கும் கமிஷன் வாங்குவது, மதுபான கடைகளில் மாத மாமுல் வாங்குவது என தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். திமுக மேயரான சரவணன் அவர்களுக்கு திமுக கவுன்சிலர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் 27ஆம் தேதியன்று நடைபெற்ற நெல்லை மாமன்ற கூட்டத்தில் கூட, திமுக கவுன்சிலர்களே மேயர் சரவணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மற்றொரு நிகழ்வாக கடந்த சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றிய, விழாவில் பேசத் தொடங்கிய சரவணன் அவர்களுக்கு, திமுக கவுசிலர்கள் உட்பட பல கவுன்சிலர்கள் விழாவை புறக்கணித்து வெளியேறி குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேயர் சரவணன் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், இதுகுறித்து தனது ராஜினாமா கடிதத்தை திமுக தலைமையிடம் அளித்ததாக செய்தி ஒன்று வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த மேயர் சரவணன் அவர்கள் நான் என் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்று என் மீது கூறப்பட்ட புகார் குறித்து விளக்கம் மட்டும் அளித்தேன்” என்று கூறினார். இந்நிலையில், நெல்லை மேயர் பொறுப்பில் இருந்து சரவணன் விலக வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K