திடீரென உருவான புதிய பன்னீர்செல்வம்- மக்களை குழப்ப புது யுக்தியா?

0
69
#image_title

திடீரென உருவான புதிய பன்னீர்செல்வம்- மக்களை குழப்ப புது யுக்தியா?

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவில் இருந்து விலகிய ஓ. பன்னீர்செல்வம் பாஜகவுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சயாக போட்டியிடவுள்ளார், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் ஆணையத்திடம் ஆட்சியர் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்ற ஒருவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஒரே பெயரில் இருவர் போட்டியிடும் பொது மக்கள் குழப்பத்திற்க்கு ஆளாக நிறைய வாய்ப்புகள் உள்ள நிலையில் மக்களை குழப்பவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு எதிராகவும் புதிய பன்னீர்செல்வத்தை அதிமுகவினர் தான் ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முந்தைய ஒரு தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் மற்றொருவரும் போட்டியிட்டு அவர் 7000 வாக்குகளை பெற்றது குறிப்பிடதக்கது.

author avatar
Savitha