“நான் முதல்வன் திட்டத்தின்” அடுத்த அசத்தல் அறிவிப்பு!!பள்ளி மாணவர்களின் கனவுகள் நனவாகும் நேரம்!!

0
41
NEXT WONDERFUL ANNOUNCEMENT OF “NAUN MULTHVAN SCHEME”!!TIME FOR SCHOOL STUDENTS DREAMS COME TRUE!!
NEXT WONDERFUL ANNOUNCEMENT OF “NAUN MULTHVAN SCHEME”!!TIME FOR SCHOOL STUDENTS DREAMS COME TRUE!!

“நான் முதல்வன் திட்டத்தின்” அடுத்த அசத்தல் அறிவிப்பு!!பள்ளி மாணவர்களின் கனவுகள் நனவாகும் நேரம்!!

இன்றைய காலக்கட்டத்தில் பல மாணவர்கள் தனது குடும்ப வறுமையின் காரணமாகவும் ,சில சந்தர்ப சூழல் காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகின்றது.

மேலும் தொழில் மற்றும் அரசு பணியில் போன்ற பல இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிடுவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

இதுபோன்ற பல காரணங்களை தவிப்பதற்கு தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்டது தான் இந்த “ நான் முதல்வர் திட்டம்” .இந்த திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களை வழிகாட்டுவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் பள்ளி மாணவர்களை  தங்களது பள்ளி படிப்பை முடித்த பின்பு தங்கள் விரும்பும் உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதற்கான  வழிக்காட்டுதல்களை வழங்கும்.

இந்த நிலையில் தமிழக அரசு தற்பொழுது அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்க நான் முதல்வர் திட்டத்தின் மூலம் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த திட்டத்தில் மாணவர்களின்  திறமையை  அடையாளம் கண்டு அவர்களுக்கு விளையாட்டு போன்ற அனைத்திலும் அவர்களை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இந்த திட்டத்தை அமலாக்கத்துறை அமைச்சரின் கீழ் செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த திட்டம் தற்பொழுது “உயர்வுக்கு படி” என்ற பெயரில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் உயர்கல்வில் சேரும் மாணவர்களுக்கு எவ்வளவு கல்லூரிகள் உள்ளது என்பதையும் அரசு வெளியிட்டு உள்ளது.

அந்த வகையில் பொறியியல் கல்லூரிகள் 2144 , பாலிடெக்னிக் கல்லூரிகள் 1461,   ஐடிஐ கல்லூரிகள் 1876  மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் 7884  என்று மொத்தம் 15713 இவ்வளவு கல்லூரிகளில் மாணவர்கள் விரும்பும் படிப்பில்  சேர்ந்து கொள்ளலாம்.

author avatar
Parthipan K