முகப்பருக்கள் பற்றிய கவலை இனி வேண்டாம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

0
33

முகப்பருக்கள் பற்றிய கவலை இனி வேண்டாம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

ஆண்களோ பெண்களோ எல்லோரையும் அழ வைக்கக் கூடிய ஒரு பிரச்சனை தான் முகப்பருக்கள். சுற்றுச்சூழல் மாசு, ஹார்மோன் மாற்றம், மன அழுத்தம், தலையில் இருக்கக்கூடிய பொடுகு, உடல் சூடு என நிறைய காரணங்களால் இந்த முகப்பரு தோன்றுகிறது.முகப்பருக்கள் இல்லாமல் முகம் பொலிவுடன் காணப்பட என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

1. முகப்பருக்கள் இல்லாமல் இருப்பதற்கான முதல் பொருள் தேன் மற்றும் பட்டை. தேன் நம் முகத்திற்கு நல்ல ஒரு ஈரப்பதத்தை கொடுக்கும். பட்டைக்கு ஆண்டின்ஃப்ளமேட்டரி ஆன்ட்டி மைக்ரோபியல் ப்ராப்பர்ட்டி என்று நிறைய உள்ளது. இதை தினமும் பயன்படுத்தி வருவதால் முகப்பருக்கள் இருப்பவர்களுக்கு முகப்பருக்கள் குணமடையும். முகப்பருக்கள் இல்லாதவர்களுக்கு இது வராமல் தடுக்கும்.

செய்முறை:
தேனை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் அரை தேக்கரண்டி அளவு சுருள்பட்டையின் பொடியை சேர்த்துக் கொள்ளவும். இதை நன்கு கலந்து முகத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 15 நிமிடங்களுக்கு இதை அப்படியே விட்டு சுடு தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் முகத்தில் முகப்பருக்கள் வராது ஏற்கனவே இருக்கக்கூடிய முகப்பருவையும் நீக்கிவிடும்.

2. அடுத்தது கற்றாழை ஜெல்.
செயற்கையாக இருக்கக்கூடிய கற்றாழை ஜெல் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் கற்றாழை ஜெல்லை ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு மாதத்திற்கு செய்து வந்தால் நம் முகத்தில் இருக்கக்கூடிய முகப்பருக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.

மேலே கூறப்பட்டுள்ள அனைத்தையும் செய்ய முடியாது என்று நினைக்கிறவர்களுக்காக இன்னொரு வழிமுறை உள்ளது.

அதுதான் டீட்ரி ஆயில். ஒரு பங்கு டீட்ரி ஆயிலை ஒன்பது பங்கு தண்ணீருடன் கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேமித்து கொள்ளவும். இதை தினமும் ஆபீஸ் அல்லது வெளியே எங்கேயாவது சென்று வந்தீர்கள் என்றால் உடனடியாக இதை எடுத்து முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ளவும். இதை ஆண் பெண் என இரு பாலரும் பயன்படுத்தி வரலாம்.

இதற்கான இரண்டாவது வழிமுறை ஆப்பிள் சிடர் வினிகர். இதற்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. ஒரு பங்கு இந்த ஆப்பிள் சிடர் வினிகரை 9 பங்கு தண்ணீருடன் கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேமித்து வைத்து முகத்திற்கு ஸ்பிரே செய்து ஒரு 30 நொடிகளுக்கு நன்கு மசாஜ் செய்யவும். 30

நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி விடலாம். டீட்ரி ஆயில் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் இரண்டையும் அப்படியே முகத்தில் பயன்படுத்தக் கூடாது தண்ணீருடன் கலந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இதில் இருக்கக்கூடிய வேதியியல் பண்புகள் முகத்தில் நேரடியாக அப்ளை செய்யும்போது பிரச்சனையை உண்டாக்கிவிடும். இந்த ஸ்பிரே செய்து குறைந்தபட்சம் ஒரு நிமிடங்களுக்கு மட்டுமே நம் முகத்தில் இருக்க வேண்டும் பிறகு சுடு தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். டீட்ரி ஆயில் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை தயார் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பயன்படுத்தி வரலாம்.

8அடுத்தது கிரீன் டீ. இந்த கிரீன் டீ குடிப்பதால் நம் உடம்பும் மனமும் மட்டும் புத்துணர்ச்சி அடைவதில்லை நம் முகமும் ஒரு தனி புத்துணர்ச்சியை அடையும். இந்த கிரீன் டீயை தண்ணீருடன் கலந்து மூன்று நிமிடங்களுக்கு கொதிக்க வைத்த பிறகு அதை நம் முகத்தில் ஸ்பிரே செய்து மசாஜ் செய்ய வேண்டும். இந்த கிரீன் டீயை சேமித்து வைத்து பயன்படுத்த முடியாது.

இதையெல்லாம் நீங்கள் தினமும் செயல்படுத்தி வந்தால் நம் முகத்தில் எப்போதுமே முகப்பருக்கள் அல்லாத நிலை ஏற்படும். இது ஆண்கள் பெண்கள் இரு பாலருக்குமே பொருந்தும். இருவருமே இந்த முறைகள் அனைத்தையும் கடைப்பிடித்து வரலாம்.

 

author avatar
CineDesk